நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்
- பபித்ரா மார்கரீட்டா
ஜவுளித் துறை இணையமைச்சர்

நாட்டின் பாரம்பரியமிக்க கைத்தறித் தொழிலை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. 1905-ம் ஆண்டு நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் போது நாட்டின் கலாச்சார அடையாளமாகவும், தற்சார்பு மற்றும் வலிமையின் அடையாளமாகவும் திகழ்வதுடன், அமைதிக்கான சின்னமாகவும் கைத்தறி உருவெடுத்துள்ளது. 
நாட்டின் கைத்தறித்துறை தற்போது 35 லட்சத்துக்கும் அதிகமான நெசவாளர்கள் மற்றும் அது சார்ந்த பணியாளர்களில் 72 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் கிராமப்புற, சிறு நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். அசாமின் முகா பட்டு, புகழ்பெற்ற பனாரசி பட்டுச் சேலைகள், காஷ்மீரின் பாஷ்மீனா மற்றும் தமிழகத்தின் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் நாட்டின் கைத்தறி பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது.
நாட்டில் உள்ள மொத்த கைத்தறி நெசவாளர்களில் 52 சதவீதம் பேர் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அசாம் மாநிலத்தில் உள்ள சவுல்குச்சி அம்மாநிலத்தின் கைத்தறி தொழில்நகரமாக (மான்செஸ்டர்) அறியப்படுகிறது. 
கடந்த 11 ஆண்டுகளில் கைத்தறித் தொழில்துறையை  மீட்டெடுக்கும் வகையில் மத்திய ஜவுளி அமைச்சகம் பல்வேறு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நவீன உபகரணங்கள், தொகுதி வாரியான மேம்பாட்டு முன்முயற்சிகள்  குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் கைத்தறி நெசவாளர்களுக்கு உதவிடும் வகையில் கடன் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும். 
தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மூலப் பொருள் விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் நூல் விநியோகம், தறிகளை மேம்படுத்துவதற்கான உதவிகள், தறிகளை நிறுவுவதற்கான இடம், நவீன கருவிகள் ஆகியவற்றுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும் பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுத் திட்டம்,  பிரதமரின் சுரக்ஷா பீமா விபத்துக் காப்பீட்டுத் திட்டம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.  முத்ரா திட்டத்தின் கீழ், சலுகை வட்டியுடன் கடனுதவியும் நடப்பு மூலதனத்திற்கான கடனுதவியும் நெசவாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 
கைத்தறி தொழிலை ஊக்குவிக்கும் வகையில், 106 வகையான  கைத்தறி தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இவை அப்பகுதியின் தனித்துவ பாரம்பரியத்தையும், கைவினைத் திறனையும் எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது. கைத்தறித் தயாரிப்புகளின் தனித்துவ அடையாளத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாக கைத்தறி குறியீடு மற்றும் இந்திய கைத்தறி முத்திரை போன்றவை அதன் நம்பகத்தன்மை, தரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்பு என்பதை உறுதி செய்கிறது. 
------
Popular posts
ஸ்காமெட் & ஏற்றுமதி கட்டுப்பாடு இணக்கம் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை டிஜிஎஃப்டி நடத்தியது
Image
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image