இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்
பியூஷ் கோயல்
மத்திய தொழில், 
வர்த்தகத்துறை அமைச்சர்


இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இந்திய விவசாயிகள், மீனவர்கள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் ஆகியோருக்கு உலகளாவிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கும். சாமானிய மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்க உதவி செய்யும். 
ஆஸ்திரேலியா, ஐரோப்பிய தடையில்லா வர்த்தக சங்க நாடுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களின் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ன் கனவை நனவாக்க பொருளாதார வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும் மோடி அரசின் உத்திகளின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது. 
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் இந்தியா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை கைவிட்டன. ஏனெனில் உலகின் பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா கருதப்பட்டது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் 2014-ம் ஆண்டுக்குப் பின் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் மூன்று மடங்கு அதிகரித்து ரூ. 331 லட்சம் கோடியாக உயர்ந்தது. மாற்றம் தரும் சீர்திருத்தங்கள், வணிகம் செய்வதை எளிதாக்குதல், பிரதமருக்கு உலகளாவிய நன்மதிப்பு ஆகியவை இந்தியாவுக்கு மாபெரும் வாய்ப்பை உருவாக்க உதவின. தற்போது வெல்ல முடியாத இந்தியாவின் வளர்ச்சியில் இணைய இன்றைய உலகம் விரும்புகிறது. எனவே, தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. 
தற்போது கையெழுத்தாகியுள்ள விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம், பிரிட்டன் சந்தையில் அனைத்து துறைகளிலும், இந்தியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும். 56 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு இருதரப்பு வர்த்தக வாய்ப்புகளை இது உருவாக்கும். இந்த ஒப்பந்தத்தின் உதவியால் 2030-க்குள் இது இருமடங்காகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 
கால்பந்துகள், கிரிகெட் விளையாட்டு உபகரணங்கள், ரக்பி பந்துகள், பொம்மைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் பிரிட்டனில் தங்களின் வணிகத்தை குறிப்பிடத்தக்க அளவு விரிவாக்க முடியும். மேலும், பிரிட்டனுக்கு, ஜவுளி, தோல், காலணிகள் ஆகியவற்றை வழங்கும் மூன்று முதன்மை நாடுகளில் ஒன்றாக மாறும் நிலையை இந்தியா கொண்டுள்ளது. இது உலகளாவிய மதிப்புத் தொடரில் பெண்கள், கைவினை கலைஞர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்கள் முக்கியப் பங்கு வகிக்க உதவியாக இருக்கும். மணிக்கற்கள், ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள், ரசாயனப் பொருட்கள், செல்பேசி போன்ற மின்னணு சாதனங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் 95% சுங்கத் தீர்வை இல்லாததாக மாற்றப்படுவதால் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி விரைவாக அதிகரித்து கிராமப் பகுதிகள் வளம் பெறும். 2030-க்குள் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி 100 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற இந்தியாவின் இலக்கை எட்ட தற்போதைய ஒப்பந்தம் பங்களிப்பு செய்யும். மஞ்சள், மிளகு, ஏலக்காய் மற்றும் மாம்பழக்கூழ், ஊறுகாய், பருப்பு வகைகள் போன்ற பதப்படுத்தப்பட்ட பொருட்களும் சுங்கத்தீர்வையிலிருந்து விலக்குபெற வாய்ப்புள்ளது. 
இறால் மற்றும் இதர கடல்சார் பொருட்களுக்கான பிரிட்டனின் இறக்குமதி வரி 20%-லிருந்து பூஜ்ஜியமாக குறையும் என்பதால் இந்திய மீனவர்கள் குறிப்பாக ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, கேரளா, தமிழ்நாடு ஆகியவற்றைச் சேர்ந்த மீனவர்கள் பிரிட்டனின் கடல்சார் இறக்குமதி சந்தையை எளிதாக அணுக முடியும்.
இந்த ஒப்பந்தம் தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், கல்வி உள்ளிட்ட சேவைகளையும் ஊக்குவிக்கும். பிரிட்டனில் இந்தியர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். சரக்குகள் மற்றும் சேவைகள் தவிர ஐரோப்பிய தடையில்லா ஒப்பந்த சங்க நாடுகள் மூலம் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுக்கும் உத்தரவாதம் பெறப்பட்டிருப்பதால் இந்தியாவில் 10 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். 
வர்த்தக ஒப்பந்தங்கள் போட்டியை அதிகரிப்பதால் குறைந்த விலையில் தரமான பொருட்களை இந்திய நுகர்வோர் பெறுவதற்கு உதவியாக இருக்கும். மோடி அரசு கையெழுத்திட்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை தொழில்துறை அமைப்புகள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளன. நமது முக்கியமான நலன்களில் சமரசம் செய்துகொள்ளாமல் எளியோரும் உலகளாவிய வாய்ப்புகளை பெறுவதற்கு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் வகைசெய்கிறது.  புதிய இந்தியா எவ்வாறு வணிகத்தை மேற்கொள்ளும் என்பதற்கு இந்த ஒப்பந்தம் ஓர் ஒளிரும் உதாரணமாக விளங்குகிறது.
Popular posts
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
ஸ்காமெட் & ஏற்றுமதி கட்டுப்பாடு இணக்கம் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை டிஜிஎஃப்டி நடத்தியது
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image