சென்னை நகருக்கான தொலைதொடர்பு சேவையின் தரம் குறித்த மே மாதத்திற்கான பரிசோதனை அறிக்கை முடிவுகளை ட்ராய் வெளியிட்டுள்ளது
சென்னை :
தொலைதொடர்பு சேவைகளின் பரிசோதனைகளை இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அவ்வப்போது பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இதன்படி 2025 மே மாதத்தில் நடத்தப்பட்ட தொலைத் தொடர்பு சேவைகளின் தரம் குறித்த பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை நகர்ப்புறம் மற்றும், சென்னை உரிமம் பெற்ற சேவைப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் மே மாதம் மேற்கொள்ளப்பட்ட சேவைகளின் தரம் குறித்த பரிசோதனை முடிவுகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில், நிகழ்நேர தொலைத்தொடர்ப கட்டமைப்பு செயல்திறனை மதிப்பீடு செய்வதை நோக்கமாகக் கொண்டு காலமுறை அடிப்படையில் சேவைகளின் தரம் குறித்து தணிக்கை நடவடிக்கையாகும். பல்வேறு தரை சூழல்களில் ட்ராய் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ், அளவீடு செய்யப்பட்ட உபகரணங்கள் மற்றும் தரப்படுத்தப்பட்ட நெறிமுறைகளைப் பயன்படுத்தி இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.