குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் குறித்த ஊடகவியலாளர் பயிலரங்கம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது.
சென்னை :
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி இளையோர் மேம்பாட்டு நிறுவனத்தில் ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் இன்று (27.06.2025) நடைபெற்றது.
தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினத்தையொட்டி நடைபெற்ற மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடர்பான பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் திரு பி. அருண்குமார் வரவேற்புரையாற்றினார். பின்னர் சென்னை மத்திய மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் திருமதி எம். லீலா மீனாட்சி முதன்மை உரை நிகழ்த்தினார்.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு தொழில்முனைவோர் திட்டங்களை மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்வது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஸோஹோ நிறுவனத்தின் மனித வள தலைமை நிர்வாகி திரு சார்ல்ஸ் காட்வின் பேசுகையில், தற்போதைய சூழலில் இளைஞர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இதற்கு மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய ராஜீவ் காந்தி தேசிய இளையோர் மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி அலுவலர் திரு டேவிட் பால், மத்திய அரசு செயல்படுத்தி வரும் தேசிய திறன் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திறன் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலக துணை இயக்குநர் திருமதி ஜே. விஜயலட்சுமி நன்றி கூறினார்.