உழைக்கும் மக்களுக்கு அதிகாரமளித்தலின், எதிர்காலத்திற்கு தயாரான இந்தியாவை கட்டமைத்தலின் 11 ஆண்டுகள்டாக்டர் மன்சுக் மாண்டவியா,மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்
உழைக்கும் மக்களுக்கு அதிகாரமளித்தலின், எதிர்காலத்திற்கு தயாரான இந்தியாவை கட்டமைத்தலின் 11 ஆண்டுகள்
டாக்டர் மன்சுக் மாண்டவியா,
மத்திய தொழிலாளர் நலன், 
வேலைவாய்ப்பு,  இளைஞர் நலன் 
மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்

2047-ல் நடைபெற உள்ள சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை நோக்கி இந்தியா நடைபோடும் நிலையில், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான நமது இயக்கத்தின் மையப்பொருளாக வேலைவாய்ப்பு உருவாக்கமும், சமூக பாதுகாப்பும் இடம் பெற்றுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான அரசில் கடந்த 11 ஆண்டுகளாக அதன் கொள்கை, திட்டமிடல், முன்னேற்றம் ஆகியவற்றின் நடுநாயகமாக இந்தியாவின் தொழிலாளர்கள் உள்ளனர். இத்தகைய மாற்றம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றத்திற்கும், சமூகப் பாதுகாப்பு விரிவாக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது.

மேக் இன் இந்தியா, திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற முக்கியமான முன்முயற்சிகளும் பெருமளவிலான உள்கட்டமைப்பு உருவாக்கமும், வேலைவாய்ப்புக்கு முன்னெப்போதும் இல்லாத வேகத்தை அளித்துள்ளன. 2004-2014 இடையே 2.9 கோடி வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்ட நிலையில், 2014-2024 இடையே 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கியின் (கேஎல்இஎம்எஸ்) தரவுகள் தெரிவிக்கின்றன. 2017-18-ல் 46.8 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பு விகிதம் 2023-24-ல் 58.2 சதவீதமாக உயர்ந்தது என்றும், வேலையின்மை விகிதம் இதே காலகட்டத்தில் 6 சதவீதம் என்பதிலிருந்து 3.2 சதவீதமாக குறைந்தது என்று கால வரிசையிலான உழைப்பு சக்தி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தரவுகள்படி முறை சார்ந்த தொழில் துறையிலும் கடந்த 7 ஆண்டுகளில் 7.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிகாரமளித்தல் என்பது இதயப் பகுதியாக உள்ளது. 2017-18-ல் மகளிர் வேலைவாய்ப்பு விகிதம் 22 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ல் 40.3 சதவீதமாக உயர்ந்ததோடு இன்றைய காலகட்டத்தில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதம் என்பதிலிருந்து 3.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. மகளிர் வேலைவாய்ப்பு ஊரக இந்தியாவில் 96 சதவீதமும். நகரப் பகுதிகளில் 43 சதவீதமும் அதிகரித்துள்ளது. தற்போது மத்திய அரசின் 15 அமைச்சகங்களில் 70-க்கும் அதிகமான திட்டங்கள் பெண் தொழில் முனைவோருக்கு ஆதரவாக உள்ளன. இது அவர்களை தற்சார்பு உடையவர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.

இதேபோல் 2013-ல் 33 சதவீதமாக இருந்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு 2024-ல் சுமார் 55 சதவீதமாக அதிகரித்தது. தேசிய வேலைவாய்ப்பு சேவைக்கான இணையப்பக்கம் போன்றவை ஒரே இடத்தில் தீர்வு தரும் தளங்களாக உள்ளன. 2015-ல் தொடங்கப்பட்ட இந்தத் தளத்தின் மூலம் 46 லட்சம் தொழில் நிறுவனங்களுடன் 5.5 கோடி வேலை தேடும் இளைஞர்கள் தொடர்பு கொண்டு சுமார் 5 கோடி வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இதன் காரணமாக இளையோர் வேலைவாய்ப்பு விகிதம் 2017-18-ல் 31.4 சதவீதம் என்பதிலிருந்து 2023-24-ல் 41.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இளையோர் வேலையின்மை விகிதம் இதே காலத்தில் 17.8 சதவீதம் என்பதிலிருந்து 10.2 சதவீதமாக குறைந்துள்ளது. இது உலக சராசரியை விட 13.6 சதவீதம் குறைவாகும். மத்திய அரசின் பல்வேறு டிஜிட்டல் திறன் திட்டங்கள், தொழில் முனைவோர் திட்டங்கள், புதிய கண்டுபிடிப்புகளுக்கான தளங்கள் ஆகியவற்றால் இந்திய இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை தருபவர்களாக மாறியுள்ளனர்.

முறைசாரா தொழிலாளர்களுக்கென்றே நாட்டிலேயே முதல் முறையாக இ-ஷ்ரம் இணையப்பக்கத்தை மோடி அரசு 2021-ல் தொடங்கியது. வெறும் 4 ஆண்டுகளில் செயலி தொழிலாளர்கள், நடைபாதை தொழிலாளர்கள் உட்பட 30.8 கோடி பேர் இதில் பதிவு செய்தனர். இதன் மூலம் தொழிலாளர்கள் பல்வேறு நலத்திட்டங்களுடன் இணைக்கப்பட்டனர். தற்போது மத்திய அரசின் 13 சமூக நலத்திட்டங்கள் இ-ஷ்ரம் இணையப்பக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இது பல்வேறு மொழிகளில் அணுகலை கொண்டுள்ளது. மேலும் தொழிலாளர் முதலில் என்ற நிர்வாக மாதிரியாகவும் அமைந்துள்ளது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கை 2013-14-ல் 11.78 கோடியாக இருந்தது. இது 2024-25-ல் 34.63 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 7.96 லட்சம் என்பதிலிருந்து 27.05 லட்சமாக உயர்ந்துள்ளது. தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கைப்படி 2015-ல் 19 சதவீதமாக இருந்த இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு உள்ளடக்கம் 2025-ல் 64.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. 94 கோடி பேர் குறைந்தபட்சம் ஏதாவதொரு சமூக நலத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால் உலகின் இரண்டாவது பெரிய சமூக நல அமைப்பாக இந்தியா மாறியுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதை நோக்கி செல்கின்ற காலத்தில் உலகின் மிகப்பெரிய தொழிலாளர் சக்தியாக இந்தியாவை தயார்படுத்துவது மட்டுமின்றி மிகவும் திறன் வாய்ந்த, பாதுகாக்கப்பட்ட, அதிகாரமளிக்கப்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் மாற்றப்படுகிறது.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image