அடல் ஓய்வூதியத் திட்டம்; இந்தியாவின் அமைப்புசாரா பிரிவினரின் ஓய்வு காலத்தைப் பாதுகாத்தல்
அடல் ஓய்வூதியத் திட்டம்; இந்தியாவின் அமைப்புசாரா பிரிவினரின்  ஓய்வு காலத்தைப் பாதுகாத்தல்
இந்தியாவின் பரந்த அமைப்புசாரா தொழிலாளர்களிடையே நீண்ட ஆயுட்காலம்,  ஓய்வூதியப் பாதுகாப்பு இல்லாமை ஆகிய இரட்டை சவால்களைச் சமாளிப்பதற்காக, மத்திய அரசு 2015-ம் ஆண்டு மே 9-ந் தேதி அடல் ஓய்வூதியத் திட்டத்தை  அறிமுகப்படுத்தியது. முதன்மையாக அமைப்புசாரா துறையில் ஏழை மற்றும் பின்தங்கிய தொழிலாளர்களை இலக்காகக் கொண்ட இந்தத் திட்டம், இந்தியாவில் மிகவும் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய சமூகப் பாதுகாப்பு முயற்சிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
2025-ம் ஆண்டு ஏப்ரல் மாத  நிலவரப்படி, இத்திட்டம்  7.65 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை ஈர்த்துள்ளது.  இதன் மூலம், மொத்தமாக 
ரூ 45,974.67 கோடி திரட்டப்பட்டுள்ளது, மேலும் இதில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. பெண்களின் பங்களிப்பு சுமார் 48% ஆக  உள்ளது. 
அடல் ஓய்வூதியத் திட்டத்தின்  முக்கிய அம்சங்கள்
* பெரும்பாலும் முறையான ஓய்வூதியக் காப்பீடு இல்லாத அமைப்புசாராத் துறையில் உள்ள தொழிலாளர்களை இலக்காகக் கொண்டது.
* 18 முதல் 40 வயதுக்குட்பட்ட அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கிடைக்கிறது.
* அக்டோபர் 1, 2022 முதல், வருமான வரி செலுத்தும் நபர்கள் இந்தத் திட்டத்தில் சேரத் தகுதியற்றவர்கள்.
* சந்தாதாரர்களுக்கு அவர்களின் பங்களிப்புகளின் அடிப்படையில், 60 வயதில் நிலையான மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குகிறது.
* மாதம் ரூ 1,000 முதல் ரூ 5, 000 வரை ஓய்வூதிய அடுக்குகள் கிடைக்கின்றன. 
* சேரும் வயதைப் பொறுத்து குறைந்தபட்ச பங்களிப்பு காலம் 20 ஆண்டுகள் ஆகும்.
* மாதாந்திர பங்களிப்பு இதன் அடிப்படையில் மாறுபடும்:
* ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால்,  தேசிய ஓய்வூதிய அமைப்பு  கட்டமைப்பின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
 அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ரூ 1,000 முதல் ரூ 5,000 வரை நிலையான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம். ஒரு சந்தாதாரர் 18 வயதில் சேர்ந்தால் மாதத்திற்கு ரூ 42 முதல் ரூ 210 வரையும், 40 வயதில் சேர்ந்தால் மாதத்திற்கு ரூ 291 முதல் ரூ 1,454 வரையும் பங்களிக்க வேண்டும்.

மாதாந்திர, காலாண்டு அல்லது அரை ஆண்டு பிரீமியம் செலுத்துதல்
குறைந்தபட்ச பங்களிப்பு காலம் 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல்
பங்களிப்புகளை தானாக பற்று வைப்பதற்கு  வங்கிக் கணக்கு கட்டாயம்
சந்தாதாரர்களுக்கு நன்மைகள்
60 வயது முதல் இறக்கும் வரை ரூ 1,000 முதல் ரூ 5,000 வரை உத்தரவாதமான மாதாந்திர  வாழ்நாள் ஓய்வூதியம்
குடும்ப ஓய்வூதிய ஏற்பாடு;  சந்தாதாரர் இறந்தால், மனைவி ஓய்வூதியத்தைப் பெறுவார். வாரிசுதாரராக நியமிக்கப்பட்டவருக்கு தொகுப்பு நிதி வழங்கப்படும். 
தானியங்கி பற்று வசதி பங்களிப்புகள் சந்தாதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தானாக பற்று வைக்கப்படும்
வரிச் சலுகைகள்; இந்தத் திட்டத்தின்  கீழ் பங்களிப்புகள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80CCD இன் கீழ் விலக்குகளுக்குத் தகுதியுடையவை (தகுதி இருந்தால்).
* 60 வயதில் வெளியேறுதல்: முழு ஓய்வூதியம் தொடங்குகிறது.
* தன்னார்வ வெளியேற்றம்: அனுமதிக்கப்படுகிறது, ஆனால் சந்தாதாரர் செலுத்திய பங்களிப்பை மட்டுமே பெறுகிறார் (வட்டியுடன்) மற்றும் அரசு கூட்டு பங்களிப்பு (ஏதேனும் இருந்தால்) ரத்து செய்யப்படும்.
ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்  கடந்த சில ஆண்டுகளாக இந்தத் திட்டத்தின் விழிப்புணர்வு உருவாக்கத்திற்காக பல முயற்சிகளை எடுத்துள்ளது.
அடல் ஓய்வூதிய திட்டம் இந்தியாவின் சமூக பாதுகாப்பு சூழல் அமைப்பின் ஒரு முக்கிய அம்சமாக  உருவெடுத்துள்ளது, குறிப்பாக அதன் பரந்த ஒழுங்கமைக்கப்படாத பணியாளர்களுக்கு. இந்தத் திட்டம் முதியவர்களுக்கு நிதி சுதந்திரத்தை உறுதி செய்வது மட்டுமல்லாமல், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிடையே நீண்டகால சேமிப்பு கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கிறது. 2024–25 நிதியாண்டில் புதிய சந்தாதாரர்களில் 55% க்கும் அதிகமான பெண்கள் உள்ளனர். அதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த சேர்க்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, அடல் ஓய்வூதியத் திட்டம் "அனைவருக்கும் ஓய்வூதியம்" என்ற அதன் தொலைநோக்கை நோக்கி சீராக முன்னேறி வருகிறது.

சந்தோஷ் குமார்/ சர்லா மீனா/ ரிஷிதா அகர்வால்
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image