யார் இந்த எம். வி.சுதர்சனம் நாயுடு
(வாழ்க்கை வரலாறு)
ஆந்திரா மாநிலம் சித்தூரில் 13.05.1895 ல் வரதராஜா நாயுடு பங்கஜம்மாள் ஆகியோருக்கு மகனாக எம் வி சுதர்சனம் நாயுடு பிறக்கிறார்.
ஆந்திராவில் வைரம் தொழில் செய்து வந்த இவர்கள் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தமிழ்நாட்டில் அப்போதைய தென்னாற்க்காடு மாவட்டத்தில், (தற்போதைய கடலூர்) மஞ்சுக்குப்பத்தில் 1905 ஆம் ஆண்டு குடி பெயர்ந்தனர்.
M என்பது மஞ்சக்குப்பம் அவர் குடி பெயர்ந்த ஊர், V என்பது வரதராஜலு நாயுடு அவருடைய தந்தை பெயரை சேர்த்து எம்.வி சுதர்சனம் நாயுடு என்று அழைக்கப்படுகிறார்.
1900 சித்தூர் தின்னை பள்ளியில் கல்வி பயின்ற அவர் S.t ஜோசப் கடலூர் பள்ளியில் 1906,1907 கல்வி பயின்றார். 17 வயதில் திருமணம் முடிந்தது.
சமூகப் பணி :
1917 இல் அன்னிபெசன்ட் கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து ஹோம் ரூல் இயக்க மாநாடு மதன்ராவ் தலைமையில் மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டM. V சுதர்சனம் நாயுடு கல்வி, சமூக சீர்திருத்தம், பெண்கள் உரிமைகளால் ஈர்க்கப்பட்டு தேசிய காங்கிரசில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
1921 கெடிலம் நதிக்கரையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் M. V சுதர்சனம் நாயுடு கலந்து கொண்டு காந்தியின் பேச்சு,உடை கண்டு அவரைப் போலவே தன்னை மாற்றிக் கொண்டார். ( அதன் தொடர்ச்சியாக தான் 1956 - 1961 MLC ல் சட்டை அணியாமல் சென்றார் ).
28,1921 ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டமையால் கைது செய்யப்பட்டு 4 மாதம், 20 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பெல்லாரி அலிப்பூர் மற்றும் தஞ்சாவூர் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு 28. 02.1922 அன்று விடுதலை செய்யப்படுகிறார்.
கைக்குத்தல் அரிசியை சிறைச்சாலை, கார்ப்பரேஷன் பள்ளி, மருத்துவமனைக்கு தானம் வழங்கிக் கொண்டிருந்த M.V.சுதர்சனம் நாயுடு அவர்கள் அவர் சிறைக்கு சென்ற பிறகு இந்தப் பணியை தொடர்ந்து பார்த்துக் கொண்டார் இவரது மனைவி பங்கஜம்யம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.
1927ல் சத்தியாகிரக போராட்டத்தில் அஞ்சலை அம்மாள் தெய்வ நாயக ஐயா, முத்து,முருகேசன் லீலாவதி,இவர்களுடன் சேர்ந்து M. V சுதர்சன நாயுடு சென்னையில் உள்ள நில் சிலையை அகற்றப் போராடினார்.
26 ஜனவரி 1930 காலை 7 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ( தற்போது பழைய கலெக்டர் அலுவலகம் ) கூட்டம் கூட்டி பூர்ண சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று கூறி தேசியக் கொடியை ஏற்றினார்.
உப்பு சத்தியாகிரகம் :
9 ஏப்ரல் 1930 ராஜகோபாலாச்சாரியார் அவர்களிடம் நையினப்ப பிள்ளை, சுதர்சன நாயுடு அனுமதி கேட்கின்றனர். 11, 12 தேதிகளில் நடத்த திட்டமிட்டு தமிழ்நாட்டில் முதல்முறையாக உப்புச்சத்யா கிரகம் கிள்ளையில் நடைபெற்றது.
நையினப்ப பிள்ளை,சுதர்சனம் நாயுடு, கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
13ம் தேதி வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் சத்தியாகிரகம் நடைபெற்றது. 14 ம் தேதி நையினப்ப பிள்ளை,சுதர்சனம் நாயுடு, முத்துக்குமாரசுவாமி தலைமையில் கடலூர் தேவனாம்பட்டினத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக உப்பு காய்ச்சும் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.
சுதேசி இயக்கம்,தனிநபர் சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் கலந்து கொண்டார்.
வரலாற்றில் எம். வி சுதர்சனம் நாயுடு :
தன்னாட்சி இயக்கம்1917
ஒத்துழையாமை இயக்கம் 1921-1922
நீல் சத்யாகிரகா 1927
பூர்ண ஸ்வராஜ் (Purna Swaraj) 1930
தேவனாம்பட்டினம் உப்பு சத்தியாகிரகம் 1930
தனி நபர் சக்தியா கிரகம் 1940-41
வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942
1945-1949 தென்னாற்க்காடு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்.
1948 எம்.வி சுதர்சனம் நாயுடு தெரு ( கடலூர் மஞ்சக்குப்பம் )
1953 சிறுவந்தாட்டில் எம் வி சுதர்சனம் நாயுடு அவசர கால பிரிவு(Emergency Ward) திறக்கப்பட்டது.
1953 கடலூர் மாவட்ட விவசாய சங்க தலைவர்
1954 - நெசவுத் தொழில் சங்கத் தலைவர்
1956-61 member of legislative council (MLC)
1972- Tamra Patra (Central Government).