உலக அரங்கில் இந்திய கலைஞர்கள் தங்கள் படைப்புகளை உருவாக்கவும் கொண்டு செல்லவும் வேவ்ஸ் உதவும்: பிரதமர் நரேந்திர மோடி
உலக அரங்கில் இந்திய கலைஞர்கள் தங்கள் படைப்புகளை உருவாக்கவும் கொண்டு செல்லவும் வேவ்ஸ் உதவும்: பிரதமர் நரேந்திர மோடி
புதுதில்லி,

தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் வேகமாக முன்னேறி வரும் நிலையில், கலை, இசை, கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு. மோடி, இவைதான் மனிதர்களை இயந்திரங்களிலிருந்து வேறுபடுத்துகின்றன என்றார். பொழுதுபோக்கு மிகப்பெரிய உலகளாவிய தொழில்களில் ஒன்றாகும் என்றும், அது மேலும் விரிவடையும் என்றும்  பிரதமர் குறிப்பிட்டார். கலை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் கொண்டாடவும் வேவ்ஸ் (உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு) என்ற உலகளாவிய தளத்தை உருவாக்குவதாக அவர் அறிவித்தார். WAVESக்கான ஒரு பெரிய நிகழ்வு மே 2025 இல் மும்பையில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். திரைப்படங்கள், பாட்காஸ்ட்கள், கேமிங், இசை, ஏஆர் மற்றும் விஆர் உள்ளிட்ட இந்தியாவின் துடிப்பான மற்றும் ஆக்கப்பூர்வமான தொழில்களைப் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். இந்த தொழில்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட "இந்தியாவில் உருவாக்கு" (Create in India) முயற்சியை அவர் எடுத்துரைத்தார். WAVES இந்திய கலைஞர்களை உள்ளடக்கத்தை உருவாக்கவும் அதை உலகளவில் கொண்டு செல்லவும் ஊக்குவிக்கும் அதே வேளையில், உலகெங்கிலும் உள்ள கலைஞர்களை இந்தியாவில் உருவாக்க அழைக்கவும் செய்யும் என்று அவர் மேலும் கூறினார். WAVES தளத்தை பிரபலப்படுத்த நெட்வொர்க் 18 ஐ பிரதமர் கேட்டுக்கொண்டார், மேலும் ஆக்கப்பூர்வமான துறைகளைச் சேர்ந்த இளம் வல்லுநர்கள் இந்த இயக்கத்தில் சேர ஊக்குவித்தார். "WAVES ஒவ்வொரு வீட்டையும் ஒவ்வொரு இதயத்தையும் சென்றடைய வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image