திரைப்படக் கதைசொல்லல்: இந்தியாவின் அடுத்த முன்னேற்றம் கிழக்குப் பகுதியிலிருந்து வர வேண்டியது அவசியம்.
திரைப்படக் கதைசொல்லல்: இந்தியாவின் அடுத்த முன்னேற்றம் கிழக்குப் பகுதியிலிருந்து வர வேண்டியது அவசியம்


- ஃபிர்தௌசுல் ஹசன் 
தலைவர், இந்திய திரைப்படக் கூட்டமைப்பு

நாம் ஒரு மௌனப் புரட்சியின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண நபர்கள் எளிமையான மடிக்கணினிகள் மூலம் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர்.  
நீண்ட காலமாக, இந்திய சினிமா பாலிவுட்டின் திரைப்பட தயாரிப்புகளையும், அங்கு ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச விழாக்களையும் கொண்டே அளவிடப்பட்டது. அது ஒரு குறுகிய பார்வை. அமைதியான ஆற்றல், நாட்டுப்புற யதார்த்தவாதம், பழங்குடி கதைகள் போன்றவற்றை நாம் தவறவிட்டுள்ளோம்.  
இந்தச் சூழலில் தற்போதைய அரசு, இதை உணர்ந்து மாற்றத்தின் தேவையை அங்கீகரித்து செயல்படுகிறது. வேவ்ஸ் 2025 உச்சிமாநாட்டையொட்டி நடத்தப்படும் இந்தியாவில் படைப்போம் போட்டி, வேவ் எக்ஸ்சிலரேட்டர் (WaveXcelerator) போன்ற முயற்சிகள் இந்தியாவின் படைப்பாற்றலை ஊக்கப்படுத்தும்.
கதை சொல்லல் என்பது வெறும் உணர்ச்சி  சார்ந்தது மட்டுமல்ல. அது பொருளாதாரம் சார்ந்ததும் ஆகும். ஏவிஜிசி-எக்ஸ்ஆர் துறை சார்ந்த சந்தை மட்டும் 2025-ம் ஆண்டில் ₹45,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 17 சதவீத வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஓடிடி உள்ளடக்க வர்த்தக வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. பிராந்திய உள்ளடக்கம் இப்போது மொத்த பார்வையாளர்களில் 55 சதவீதத்துக்கும்  அதிகமாக ஒரு புதிய உள்ளடக்க பொருளாதார வடிவம் பெறுகிறது.

தற்போது இதில் நாட்டின் கிழக்குப்பகுதிகளும் பெரிய வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்தியா உண்மையிலேயே உலகின் உள்ளடக்க தலைமை இடமாக மாற விரும்பினால், அது மும்பை அல்லது தில்லியை மையமாகக் கொண்டிருந்தால் போதாது. உலகளாவிய கதை சொல்லலின் அடுத்த பாய்ச்சல் கிழக்கிலிருந்தும் வடகிழக்கிலிருந்தும் எழ வேண்டும். 
இந்த பகுதிகள் வளர்ச்சியடையாத பகுதிகள் அல்ல. அவை இணைக்கப்படாத பகுதிகளாக இருந்தன. இப்பகுதிகளில் கதைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால்  இப்பகுதியில் கட்டமைக்கப்பட்ட திரைப்பட சந்தைகள், விநியோக வாய்ப்புகள் போன்றவை இதுவரை இல்லாமல் இருந்தது. அதிர்ஷ்டவசமாக, அது இப்போது மாறத் தொடங்கியுள்ளது.
இதன் நுழைவாயிலாக கொல்கத்தா உருவாகி வருகிறது. திரைப்படத் தயாரிப்புக்கு ஏற்ற ஸ்டுடியோக்கள், ஏராளமான பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள், உலகத் தரம் வாய்ந்த படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப வசதிகள், அறிவுசார் கலாச்சாரம் ஆகியவற்றுடன், வங்காளம் இந்தியாவின் அடுத்த சிறந்த உள்ளடக்க மையமாக மாறத் தயாராக உள்ளது.
அசாம், திரிபுரா, சிக்கிம், மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றிற்கு அருகாமையில் இருப்பது ஒரு ஆக்கபூர்வமான சூழல் அமைப்பு டிஜிட்டல் யுகத்தில் அனிமேஷன் ஏஆர் அனுபவங்கள் என புதிய வடிவங்களில் அவை வடிவம் எடுக்கின்றன. உள்ளடக்கம்  என்பது இனி பலவகைப்பட்டதாக அமையும்.
மானியங்கள், ஊக்கத்தொகைகள், கூட்டுத் தயாரிப்பு வாய்ப்புகள் ஆகியவற்றுடன் வேவ்ஸ் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்படுவது திரைப்படத்துறையின்  முன்னேற்றத்திற்கு வாய்ப்புகளை  அதிகரிக்கும். அடுத்து கொல்கத்தாவிலும் வேவ்ஸ் உச்சி மாநாடு நடத்தப்படவேண்டும். அடுத்த அனிமேஷன் ஆய்வகம் குவஹாத்தியில் அமைக்கப்படவேண்டும். இந்தியாவின் முதல் பழங்குடியின கதை சந்தை அகர்தலாவில் தொடங்கட்டும். இவற்றால், இந்தப் பகுதிகளைச் சேர்ந்த படைப்பாளிகள் தேசிய கவனத்தை ஈர்ப்பார்கள். அவர்களுடன் இந்திய படைப்பாற்றல் மேலும் எழுச்சி பெறும்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image