தலைசிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா: பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை, உலகளாவிய பெரிய அணிகளுள் முக்கிய அங்கம் வகிக்க இந்தியாவை எவ்வாறு தூண்டுகிறது
தலைசிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா:  பிரதமர் மோடியின் தொலைநோக்குப்  பார்வை, உலகளாவிய  பெரிய அணிகளுள்  முக்கிய அங்கம் வகிக்க இந்தியாவை எவ்வாறு தூண்டுகிறது 


திறமை உள்ள வளர்ந்து வரும் நாடு என்ற நிலையிலிருந்து, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஆற்றல்மிக்க நாடாக  முன்னேறும் வகையில், இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் சந்தித்துள்ள மாற்றங்கள், அதன் உலகளாவிய  நிலைக்கு மறுவடிவம் அளித்துள்ளது.  தற்சார்பு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா போன்ற முன்முயற்சிகளின் வாயிலாக தன்னிறைவு, புத்தாக்கம்  மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் முதலியவற்றில் மோடி அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.  இதன் காரணமாக நவீன தொழில்நுட்பம்  மற்றும் திறமைகளின் தலைசிறந்த நாடுகளின் பட்டியலில் நம் நாடு இணைய தூண்டப்பட்டுள்ளது.  உள்நாட்டு ஆராய்ச்சியின் கலாச்சாரத்தைப்  பின்பற்றி,  அரசு-தனியார் கூட்டமைப்புகளை வலுப்படுத்தி மற்றும் தொழில்நுட்பத்தில் உத்தி சார்ந்த முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்கி இருப்பதன் வாயிலாக உலகளாவிய அரங்கில் இந்தியா பங்கேற்பது மட்டுமல்லாமல் முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. 


இது தொழில்நுட்ப சாதனைகளின் கதை மட்டுமல்ல;  லட்சியம்,  உலகளாவிய அங்கீகாரம் மற்றும் உலகிற்கு ஆசானாக முன்னேறுவதை நோக்கிய இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாகும். 

பாதுகாப்புத் துறையில் முன்னேற்றங்கள்:  இந்தியாவின் எதிர்காலத்தை பாதுகாத்தல்

உலகளாவிய ஆற்றல் சக்திகளுக்கு போட்டியாக, உலகத் தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்பங்களின் மூலம் தலைசிறந்த நாடுகளின் பட்டியலில் இணைந்திருப்பதன் வாயிலாக, இந்தியாவின் பாதுகாப்புத் துறை முக்கிய மாற்றத்தை சந்தித்துள்ளது.  தன்னிறைவில் மோடி அரசின்  ஆதரவு மற்றும் டி.ஆர்.டி.ஓவால் இயக்கப்படும் இந்த சாதனைகள்,  நவீனகால போர்க்களத்திற்கு இந்தியாவின் தயார்நிலையை அடிக்கோடிட்டுக்  காட்டுகின்றன. 

வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையாக, நிலையான இறக்கைகள் மற்றும் திரள் ஆளில்லா விமானங்களை செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட லேசர் அடிப்படையிலான இயக்கப்பட்ட ஆற்றல் ஆயுத அமைப்புமுறையின் சோதனைகளை இந்தியா சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தியது. இதன் மூலம், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடன் நான்கு தலைசிறந்த நாடுகளின் குழுவில் இந்தியா நுழைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டில், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுக்கான ஆக்டிவ் கூல்டு ஸ்கிராம்ஜெட்டை சோதிக்கும் தலைசிறந்த நாடுகளின் குழுவில் இந்தியாவும் சேர்ந்தது. டி.ஆர்.டி.எல் மற்றும் தொழில்துறை இணைந்து இந்தியாவில் முதன்முறையாக வெப்பம் கொள் ஸ்கிராம்ஜெட் எரிபொருளை உள்நாட்டில் உருவாக்கியது இந்த முன்னேற்றத்திற்கு மையமாக உள்ளது.
 குறிப்பிடத்தக்க சாதனையாக, நவம்பர் 2024-இல் டி.ஆர்.டி.ஓ, நாட்டின் முதல் நீண்ட தூரம் தாக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையின்  சோதனையை மேற்கொண்டது. இந்த ஏவுகணையால் பழமையான மற்றும் அணு ஆயுதங்களை  நீண்ட தூரம் கொண்டு செல்ல முடியும்.  நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய  ஏவுகணை, ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிகமாக பயணிக்கும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க  சாதனை முக்கியமான மற்றும் சிறந்த ராணுவ தொழில்நுட்ப திறன்களை கொண்டுள்ள முன்னணி நாடுகளின் குழுவில் இந்தியாவையும் இணைத்துள்ளது.
 பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகனம் (எம்.ஐ.ஆர்.வி) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள நாடுகளின் உயரடுக்கு குழுவில் கடந்த 2024 ஆம் ஆண்டில் இந்தியாவும்  சேர்ந்தது. எம்.ஐ.ஆர்.வி நுட்பத்துடன் கூடிய அக்னி -5  ஏவுகணையின் வெற்றிகரமான  சோதனை, பல்வேறு இலக்குகளை தாக்கும் வகையில் ஒரே ஏவுகணையில்  பல அணு ஆயுதங்களை பொருத்தக்கூடிய  இந்தியாவின் ஆற்றல் மற்றும் திறனை மேம்படுத்துகிறது. 
கடந்த 2023 ஆம் ஆண்டில் கடல் அடிப்படையிலான எண்டோ-வளிமண்டல இடைமறிப்பு ஏவுகணையின்  முதல் சோதனையை இந்தியா மேற்கொண்டது. கடல் சார்ந்த பாதுகாப்பு ஏவுகணை திறன் உள்ள நாடுகளின் குழுவில் நாட்டை முன்னேற்றி, ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அச்சுறுத்தலை ஈடுபடுத்துவதும், அதை நடுநிலையாக்குவதும் இந்த சோதனையின் நோக்கம் ஆகும்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானத்தின் சோதனையை கடந்த 2023 ஆம் ஆண்டு வெற்றிகரமாக மேற்கொண்டு, தலைசிறந்த நாடுகளின் குழுவில் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டது.  உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட  மறைந்திருந்து தாக்கக்கூடிய ஆளில்லா விமானத்தின் வெற்றிகரமான சோதனை, நாட்டில் தொழில்நுட்ப தயார்நிலைகளில் ஏற்பட்டுள்ள முதிர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். 
2019 ஆம் ஆண்டில், சக்தி இயக்கம் மூலம், இந்தியா வெற்றிகரமாக ஒரு செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை சோதித்தது. இதன் மூலம் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் செயல்பாட்டில் உள்ள  செயற்கைக்கோளை அழித்தது. இந்த சாதனை, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடன் இணைந்து  செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையின் திறன்களைக் கொண்ட சில நாடுகளில் ஒன்றாக இந்தியாவை நிலைநிறுத்தியது. இந்த  உத்தி சார்ந்த சாதனை, அதிகரித்து வரும் போட்டி நிறைந்த பகுதியில் தனது விண்வெளி சொத்துக்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


விண்வெளியில் முன்னேற்றம்:  இந்தியாவின் பிரபஞ்ச லட்சியங்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் வழிநடத்தப்படும் இந்தியாவின் விண்வெளித் திட்டம், சாதனை படைக்கும் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் உலக நாடுகளை ஈர்த்துள்ளது. அரசின் அதிகரித்த நிதி மற்றும் சீர்திருத்தங்கள்,  விண்வெளி பயணங்களை  மேற்கொள்ளும் நாடுகளின் முன்னணி வரிசையில் இந்தியாவை சேர்த்துள்ளன.  

இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் காரணமாக விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைத்து, பிரிக்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்திய முன்னோடியான நான்கு நாடுகளின் குழுவில்  இந்தியா சேர்ந்தது. 120 க்கும் மேற்பட்ட உருவகப்படுத்துதல்களுக்குப் பிறகு முதல் முயற்சியில்  செயற்கைக்கோள்களைப் பிரிக்கும்செயல்முறை வெற்றி பெற்றது, இது விண்வெளி ஆய்வில் இந்தியாவின் மேம்பட்ட தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்துகிறது.
 கடந்த 2023 ஆம் ஆண்டில்  நிலவின்  தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு என்ற வரலாற்றை இஸ்ரோ படைத்தது. இஸ்ரோ தனது விண்வெளிப் பயணங்கள் மூலம் வளர்ந்த நாடுகளைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தியது, இது விண்வெளியில் உள்ள நாடுகளிடையே தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுத் தந்தது. நாட்டின் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் தனது 39-வது ராக்கெட்டில் நீல வானில் 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தி புதிய உலக சாதனை படைத்தது. 


பாதுகாப்பு மற்றும் விண்வெளிக்கும் அப்பால்:  ஒரு புதிய தொழில்நுட்ப எல்லை 

உலகளாவிய தொழில்நுட்ப தலைமைகளிடையே போட்டியாளராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்  வகையில் இந்தியாவின் லட்சியங்கள் வளர்ந்து வரும் துறைகளுக்கு விரிவடைகின்றன.

செமிகான் இந்தியா ofஅறிவிப்புடன், குறைக்கடத்தி முனையமாகத்  திகழும் போட்டியில் நாடு நுழைந்துள்ளது. சிப் உற்பத்தியில் கடுமையாகப் போட்டியிடும் ஒருசில நாடுகளுள் இந்தியாவை இடம்பெறச் செய்வதில் உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மற்றும் கூட்டுமுயற்சிகளின் முதலீடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. 
2020 ஆம் ஆண்டில் குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளுக்கான தேசிய இயக்கத்தை உருவாக்கியதன் மூலம், இந்தியா முறையாக குவாண்டம் கம்ப்யூட்டிங்கிற்கான போட்டியில் நுழைந்தது. சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இணையாக செயல்பட வேண்டும். இந்த முயற்சிக்கு ₹6,000 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறன்களை உருவாக்க அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை, மோடி அரசு தீவிரமாக ஆதரிக்கிறது.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image