தேசிய பாதுகாப்பில் பணி நாடும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் சென்னையில் சேர்க்கை நிகழ்ச்சியை நடத்தியது
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம், இன்று சென்னையில் சேர்க்கை மற்றும் ஊடக தொடர்பு நிகழ்ச்சியை நடத்தியது. குஜராத்தின் காந்திநகரை தலைமையிடமாகக் கொண்ட இப் பல்கலைக்கழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகாவின் சிவமோகா உள்ளிட்ட இடங்களிலும் வளாகங்களைக் கொண்டுள்ளது.
தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கடலோர மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆய்வுகள் பள்ளியின் இயக்குநர் (தனிப்பொறுப்பு) திரு அங்கூர் சர்மா ஊடகவியலாளர்களுடன் உரையாற்றினார். அப்போது ஒரு வலுவான தேசத்தின் அடித்தளத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் காலத்தால் அழியாத திருக்குறளில் இருந்து
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து
என்ற குறளை திரு சர்மா மேற்கோள் காட்டினார்.
நவீன காவல், குற்றவியல் சட்டம், கடல்சார் சட்டம், கடல்சார் பாதுகாப்பு, தனியார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, தடயவியல் மற்றும் நடத்தை அறிவியல், ராணுவ மொழிகள், உடற்கல்வி மற்றும் பல துறைகளில் - இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டம் என- அனைத்து நிலைகளிலும் பல்வேறு கல்வி மற்றும் தொழில்முறை படிப்புகளை தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. தேசிய பாதுகாப்பின் பல்வேறு களங்களில் நிபுணர்கள் சமூகத்தை தயார்படுத்துவதே இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்தப் பல்கலைக்கழகத்தின் பொருத்தம் குறித்து கேட்டபோது, கடற்கரை மற்றும் கடல்சார் மையமாக மாநிலத்தின் ராணுவ முக்கியத்துவத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்தப் பல்கலைக்கழகத்தின் பொருத்தம் குறித்து கேட்டபோது, கடற்கரை மற்றும் கடல்சார் மையமாக மாநிலத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகப் பிரதிநிதி எடுத்துரைத்தார். வணிக கடல்சார் துறைகளில் மட்டுமின்றி, கடலோர காவல்துறை/கடலோர காவல்படை போன்றவற்றின் மூலம் சட்ட அமலாக்கத்திலும், துறைமுக நிர்வாகம் மற்றும் துறைமுக பாதுகாப்பு போன்ற துறைகளிலும் கடல்சார் சட்டத் துறையில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வளர்ந்து வரும் வாய்ப்புகளை அவர் சுட்டிக்காட்டினார். சென்னை-விளாடிவோஸ்டாக் கிழக்கு கடல்சார் வழித்தடத்தை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு உந்துதல் அளித்து வருவதோடு, அதிகரித்த திறனைக் கையாள தமிழ்நாட்டின் சிறு துறைமுகங்களின் தொடர்ச்சியான வளர்ச்சியுடன், கடல்சார் சட்டம் மற்றும் கடலோர மற்றும் கடல்சார் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஆளுமை போன்ற களங்களில் இந்தப் பல்கலைக்கழகத்தின் எல்எல்எம் திட்டங்களைக் கருத்தில் கொள்ள மாநிலத்தைச் சேர்ந்த இளம் சட்ட மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
மாணவர்களுக்கு ஆதரவான செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், மிதமான கட்டண அமைப்பு, தாராளமான உதவித்தொகை திட்டங்கள், தொடக்கநிலை ஆதரவு மற்றும் மாணவர்களை மையமாகக் கொண்ட ஆதரவு அமைப்பு ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். தங்கும் விடுதி, உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் நவீன பயிற்சி வசதிகளையும் பல்கலைக்கழகம் வழங்குகிறது - இது தேசிய பாதுகாப்பில் தொழில் முறை வாழ்க்கையை விரும்பும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சி சூழலை உருவாக்குகிறது.
விண்ணப்ப செயல்முறை மற்றும் காலக்கெடு குறித்து கேட்டபோது, அனைத்து படிப்புகளுக்கும் சேர்க்கை இப்போது தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார் . ஆர்வமுள்ள மாணவர்கள் www.rru.ac.in என்ற இணையதளத்தைப் பார்வையிட ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதில் வளாகத்திற்கு வெளியே உள்ள மையங்களில் கிடைக்கும் படிப்புகள் உட்பட, வழங்கப்படும் பரந்த அளவிலான படிப்புகளை ஆராய்ந்து, அவர்களின் இலக்குகளுடன் சிறப்பாக ஒத்துப்போகும் ஒன்றைத் தேர்வுசெய்யவும். இளங்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே 1, 2025, மற்றும் முதுகலை படிப்புகளுக்கு, ஜூன் 30, 2025 ஆகும். இருப்பினும், இவை நிரலுக்கு ஏற்ப மாறுபடலாம் என்பதால் குறிப்பிட்ட காலக்கெடுவை இணையதளத்தில் பார்க்குமாறு அவர் அறிவுறுத்தினார்.