எதிர்காலத்திற்கும் பொருத்தமான கதர் ஆடை: இந்தியாவில் படைப்போம் சவால் நிலைத்தன்மையை ஊக்கப்படுத்துகிறதுஎழுதியவர் தனலட்சுமி பி.
எதிர்காலத்திற்கும் பொருத்தமான கதர் ஆடை: இந்தியாவில் படைப்போம் சவால் நிலைத்தன்மையை ஊக்கப்படுத்துகிறது
எழுதியவர் தனலட்சுமி பி.



சுதந்திரம், நிலைத்தன்மை, உலகளாவிய செல்வாக்கு ஆகியவற்றின் கதையை சொல்லும் ஒரு துணியாக, இந்தியாவின் சின்னமான கதர் திகழ்கிறது. கோடை வெயில் கொளுத்தும் இந்தத் தருணத்தில், கதரைத் தவிர வேறு எந்த துணியும் சருமத்திற்கு உகந்ததாக இருக்க முடியாது. 

மும்பையில் மே 1 முதல் 4 வரை நடைபெற உள்ள உலக ஒலி, ஒளிமற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டின் (வேவ்ஸ்) ஒரு பகுதியாக நடத்தப்படும் இந்தியாவில் படைப்போம் சவால்கள் என்னும் 32-ல் ஒன்றான "உலகை கதர் அணியச் செய்யுங்கள்" சவால் முக்கியமானதாகும்.

உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகள் தங்கள் டிஜிட்டல் கலை, சமூக ஊடக கதைசொல்லல் அல்லது விளம்பர கருத்துகள் மூலம் கதரை ஒரு பாரம்பரிய துணியிலிருந்து உலகளாவிய ஃபேஷன் அடையாளமாக மாற்றப் போட்டியிடும் ஒரு முயற்சியாக மேற்கூறிய சவால் இடம்பெறும். இந்த முயற்சி உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு தங்கள் படைப்பு முத்திரையை பதிக்க உதவுகிறது. இந்தியாவில் உருவாக்குங்கள் சவால், குறிப்பாக 'மேக் தி வேர்ல்ட் வியர் கதர்' (உலகை கதர் அணியச் செய்வோம்) என்னும் படைப்பாற்றல் நிபுணர்களுக்கு உலகம் கதரை எவ்வாறு பார்க்கிறது என்பதை பறைச்சாற்றும் வாய்ப்பை வழங்குகிறது. இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை அதிநவீன படைப்பாற்றலுடன் கலப்பதன் மூலம், நவீன மதிப்புகளை பிரதிபலிக்கும் உலகளாவிய ஃபேஷன் சக்தியாக கதரை இதில் காணலாம்.

இந்தச் சவாலுக்கு இந்தியாவிலிருந்தும் உலகெங்கிலுமிருந்தும் 750-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ள நிலையில், உலக அரங்கில் இந்தியாவின் புதுமை உணர்வை எடுத்துக்காட்டுகின்ற ஒரு ஆக்கபூர்வமான படைப்புக்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 27-ம் தேதி பதிவு தொடங்கி, மார்ச் மாதம்வரைபதிவுதொடர்ந்தநிலையில், இறுதிப்பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. விளம்பரம் மற்றும் படைப்புத் தொழில்களின் ஜாம்பவான்களை உள்ளடக்கிய ஒரு புகழ்பெற்ற நடுவர் குழு தேர்வுப் பணியில் ஈடுபட்டது.

மொத்தம் ஐந்து படைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்: இமான் சென்குப்தா & சோஹம் கோஷ் - ஹவாஸ் வேர்ல்ட்வைட் இந்தியா; கார்த்திக் சங்கர் & மதுமிதா பாசு - 22 ஃபீட்ட்ரைபல்; காஜல் திர்லோத்கர் - இன்டராக்டிவ் அவென்யூஸ்; தன்மே ரவுல் & மந்தர் மகாதிக் - டிடிபி முத்ரா குரூப்; ஆகாஷ் மெஜாரி & கஜோல் ஜெஸ்வானி - டிடிபிமுத்ரா குரூப்.

அடுத்த மாதம் நடைபெறும் வேவ்ஸ் உச்சிமாநாட்டில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

கதர் என்பது பழைய பாணி துணி மட்டுமல்ல; இது நிலையான ஃபேஷனின் எதிர்காலம். கையால் நெய்யப்படும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, நட்பு மற்றும் அன்புடன் தயாரிக்கப்படும் கதர் நம்பகத்தன்மை, நிலைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது கைவினைஞர்களால் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அதே நேரத்தில் உள்ளூர் சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

கதர் என்பது ஒரு ஃபேஷன் மட்டுமல்ல, அது ஒரு இயக்கம். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் வேரூன்றிய கதர், மகாத்மா காந்தி தலைமையிலான சுதந்திர இயக்கத்தின் போது தன்னம்பிக்கை மற்றும் அதிகாரமளித்தலின் அடையாளமாக மாறியது. இன்று நிலையானதாகவும், கையால் நெய்யப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த துணியாகவும் உள்ளது. இது கைவினைஞர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற இந்தியாவில், தொடர்ந்து அதிகாரம் அளிக்கிறது.  அதே நேரத்தில் வேகமான ஃபேஷனின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு பங்களிக்கிறது.

காதி பொருட்கள் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதில் அரசின் "இந்தியாவில் தயாரிப்போம்" முன்முயற்சி முக்கியப் பங்கு வகிக்கிறது.

கதர் ஒரு நிலையான, சுற்றுச்சூழல் உணர்வுள்ள துணி, இது எதிர்கால சந்ததியினருக்காக பூமியைப் பாதுகாக்கும் அதே நேரத்தில் நமது கடந்த காலத்துடன் நம்மை இணைக்கிறது.

உலகம் தொடர்ந்து நிலையான, சுற்றுச்சூழல் உணர்வுள்ள நடைமுறைகளைத் தழுவுவதால், உலக அரங்கில் கதரின் இடம் முன்னெப்போதையும் விட தெளிவாக உள்ளது. இந்தத் துணி கடந்த காலத்தின் நினைவுச்சின்னம் மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்கான கலங்கரை விளக்கமாகத்திகழ்கிறது. 

வேவ்ஸ் 2025-ல் வெற்றியாளர்களின் அறிவிப்பை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும்போது, இந்தச் சவால் கதரை உலகம் முழுவதும் ஒரு வணிக முத்திரையாக நிலை நிறுத்துவதற்கான புதிய மற்றும் ஆக்கபூர்வமான வழிகளை வெளிப்படுத்துவதாக உறுதியளிக்கிறது, 

கட்டுரையாளர் மும்பை பிஐபியில் ஊடக தொடர்பு அலுவலர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image