வக்ஃப் சீர்திருத்தம்: இஸ்லாம் சமூகத்தின் நலனுக்கு வெளிப்படையான, பொறுப்பான நிர்வாகத்திற்குரிய அழைப்பாகும்-ஹாஜி சையத் சல்மான் சிஷ்டி,காடி நஷீன் - தர்கா அஜ்மீர் ஷெரீப்தலைவர், சிஷ்டி அறக்கட்டளை
வக்ஃப் சீர்திருத்தம்: இஸ்லாம் சமூகத்தின் நலனுக்கு வெளிப்படையான, பொறுப்பான நிர்வாகத்திற்குரிய அழைப்பாகும்

-ஹாஜி சையத் சல்மான் சிஷ்டி,
காடி நஷீன் - தர்கா அஜ்மீர் ஷெரீப்
தலைவர், சிஷ்டி அறக்கட்டளை


இந்தியாவின் மத மற்றும் சமூக-பொருளாதார தளத்தில், சமூக மற்றும் மிகவும் மாறுபட்ட கட்டமைப்பில், வக்ஃப் மிகவும் குறிப்பிடத்தக்க, ஆனால் இன்னும் பயன்படுத்தப்படாத அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் சமூக-பொருளாதார நிலைமைகளை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இருப்பினும், ஆழமான பாரம்பரியம் மற்றும் கணிசமான நில உடைமைகள் இருந்தபோதிலும், திறமையின்மை, தவறான நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததால் வக்ஃப் தடைபட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம், சமூக-பொருளாதார மேம்பாடு போன்ற பிரச்சனைகளுடன் தொடர்ந்து போராடும் ஒரு சமூகத்திற்கு இந்தியாவின் மூன்றாவது பெரிய நில உடைமை அமைப்பான வக்ஃப், தலைமை தாங்குகிறது என்பது உண்மையில் முரண்பாடானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட வக்ஃபின் நோக்கம், பள்ளிகள், மருத்துவமனைகள், நூலகங்கள் மற்றும் பிற தொண்டு நிறுவனங்கள் போன்ற பொது சொத்துக்களை உருவாக்கி பராமரிப்பதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்கு சேவை செய்வதாகும். ஆனால் இத்தகைய பரந்த வள ஆதாரம் அந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காக திறம்பட பயன்படுத்தப்படவில்லை என்பது கடந்த பல பத்தாண்டுகளாக பெரும் கவலைக்குரியதாக உள்ளது.
வக்ஃப் மசோதா திருத்தங்கள் முக்கியமானவையாகும். ஏனெனில் வக்ஃப் சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்துவது குறித்து சமூகத்தில் பரவலான ஒருமித்த கருத்து இருப்பதை முத்தவல்லிகள் (பாதுகாவலர்கள்) ஒப்புக்கொள்கிறார்கள். 
வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதில் பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாதது திறமையின்மை மற்றும் ஊழலை நிரந்தரமாக்க அனுமதித்துள்ளது.
தற்போதைய வக்ஃப் அமைப்பில் மிகவும் வெளிப்படையான சிக்கல்களில் ஒன்று, வக்ஃபுக்கு சொந்தமான சொத்துக்களுக்குக் காலாவதியான வாடகை கட்டமைப்பாகும். இதில் பல்வேறு சொத்துக்கள் 10 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட விகிதங்களில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. தற்போதைய சந்தை மதிப்பில் இந்த வாடகை குறைவாக இருப்பது மட்டுமின்றி, செலுத்த வேண்டிய சொற்ப தொகை கூட பெரும்பாலும் முறையாக வசூலிக்கப்படுவதில்லை. இந்த நிலைமை சட்டவிரோத விற்பனை மற்றும் வக்ஃப் சொத்துகளை வீணடித்தல் போன்ற குற்றச்சாட்டுகளால் சிக்கலாகிறது. இது சமூக நலனுக்காக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய சாத்தியமான வருவாயைக் கணிசமாக குறைத்துவிட்டது. ஒரு சிறந்த உதாரணம் ஜெய்ப்பூர் நகரத்தின் எம்ஐ சாலையில் அமைந்துள்ள சில சொத்துகள் சமூக மற்றும் மதப் பணிகளுக்காக வக்ஃப் வாரியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. வாரியம் இந்த சொத்துகளை வாடகைக்கு ஒதுக்கலாம், ஆனால் யாருக்கும் விற்க முடியாது. எம்ஐ சாலையில் 100 சதுர அடி முதல் 400 சதுர அடி வரையிலான பிற வணிக சொத்துகள் மாதத்திற்கு ரூ.300 பெறுகின்றன, வாடகைக் கொள்கைகள் புதுப்பிக்கப்படும் போது மாதத்திற்கு சுமார் 25,000 ரூபாய் பெற முடியும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான அலட்சியங்கள் உள்ளன.
2006-ம் ஆண்டின் சச்சார் குழு அறிக்கையின்படி, வக்ஃப் அதன் சொத்துக்களிலிருந்து ஆண்டுக்கு ரூ.12,000 கோடி வருவாய் ஈட்ட முடியும் என்று மதிப்பிட்டுள்ளது. இருப்பினும், சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் கணக்கெடுப்புகளில் இப்போது வக்ஃப் சொத்துக்களின் உண்மையான எண்ணிக்கை 8.72 லட்சத்தைத் கடந்துள்ளது. தற்போது, பணவீக்கம் மற்றும் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை காரணியாக்கினால், சாத்தியமான வருமானம் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வரை அதிகமாக இருக்கும். ஆயினும்கூட, உண்மையான வருவாய் வெறும் ரூ.200 கோடியாகவே உள்ளது.
திறமையாக நிர்வகிக்கப்பட்டால், வக்ஃப் சொத்துகள் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பலவற்றை நிறுவுவதற்கு நிதியளிக்க முடியும். அவை இந்திய இஸ்லாமிய சமூகத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சேவை செய்கின்றன. 
ஆக்கபூர்வமான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளுக்குப் பின் இறுதி உமீத் வக்ஃப் மசோதா திருத்தங்கள் இஸ்லாமிய சமூகத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு வழிவகுக்கும். 
வக்ஃப் சொத்துகளின் வாடகை கட்டமைப்பை தற்போதைய சந்தை விகிதங்களை பிரதிபலிக்கும் வகையில் திருத்தியமைப்பது வக்ஃபின் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு அவசியமாகும். மேலும், இந்த சொத்துக்களிலிருந்து கிடைக்கும் லாபம் வக்ஃப் அமைப்பின் நோக்கங்களுக்கு ஏற்ப இஸ்லாமிய சமூக நலத் திட்டங்களில் மீண்டும் முதலீடு செய்யப்பட வேண்டும்.
இஸ்லாமிய சமூகத்திலும் நமது நாட்டிலும் நன்மைக்கான ஒரு சக்தியாக வக்ஃப் அதன் திறனை நிறைவேற்றுவதை உறுதி செய்வது நமது கூட்டுப் பொறுப்பாகும். 
*********
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image