ஹன்சா-3 (என்ஜி) – இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையை தற்சார்புடையதாக மாற்றுகிறது -டாக்டர் ஜிதேந்திர சிங்மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு) புவி அறிவியல் துறை இணையமைச்சர்
ஹன்சா-3 (என்ஜி) – இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையை தற்சார்புடையதாக மாற்றுகிறது 
-டாக்டர் ஜிதேந்திர சிங்
மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் 
(தனி பொறுப்பு) புவி அறிவியல் துறை இணையமைச்சர்

உலக அளவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. இந்த தசாப்தத்தின்  இறுதிக்குள் இது வியக்கத்தக்க வகையில்  300 மில்லியன் உள்நட்டு பயணிகளுக்கு சேவை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலக அளவில் சிவில் விமானப் போக்குவரத்தில் ஆற்றல்மிக்க நிலையையும் அது எட்டும். இந்த அதிவேக வளர்ச்சி  இந்தியாவின் லட்சக்கணக்கான மக்களின் அதிகரிக்கும் விருப்பங்களை குறிக்கிறது. 
விரிவடைந்து வரும் விமானப் போக்குவரத்தின் தேவைகளை ஈடுசெய்ய விமானிகளின் தேவையும் அதிகரிப்பது அவசியமாகிறது.  அண்மையில் வெளியிடப்பட்ட விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கைகள் படிஅடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் விமானிகளின் தேவை குறைந்தபட்சம் 5 மடங்கு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு கே ராம்மோகன் நாயுடு அறிமுகம் செய்துள்ள முன்நோக்கிய சிந்தனையுள்ள  முன் முயற்சிகளால் பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் அதிகரிப்பும் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் அனுபவமாக உள்ளது. 
இந்தியாவில் தற்போது 38 விமானப் பயிற்சி அமைப்புகள் உள்ளன. திறமைமிக்க விமானிகளின் தேவை அதிகரிப்பதால் மிகப்பெரிய, உலகத்தரத்திலான விமானிகள் பயிற்சி சூழலை மேம்படுத்துவது அவசியமாகும். உள்நாட்டு தயாரிப்பாளர்கள் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தாததால் இந்தியாவில் தற்போது சிறிய வகை விமானச் சந்தை பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.  
முழுமையான தற்சார்புக்கு உள்நாட்டு சிறிய விமான உருவாக்கம் அவசியமாகும். தொடக்க நிலையில் இருந்து இறுதி தயாரிப்பு வரையிலான முயற்சிகள் நமது நாட்டின் விமான தொழில்துறையை கணிசமாக வலுப்படுத்தும்.
வணிக ரீதியாக ஹன்சா-3 (புதிய தலைமுறை-என்ஜி) என பெயரிடப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட ஹன்சா-3 விமானம் சிஎஸ்ஐஆர்-தேசிய விண்வெளி ஆய்வு கூடத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த தசாப்தத்தின் இறுதிக்குள்  விமானத் துறையில் இந்தியாவை உலகளாவிய மையமாக நிறுவ வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் இது ஒத்துப்போவதாக உள்ளது. பெங்களூருவில் நிறுவப்பட்டுள்ள இதன்  உற்பத்தி நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 36 விமானங்களை தயாரிக்கவுள்ளது. அதிகரிக்கும் தேவைகளுக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை 72 ஆக உயர்த்தப்படும். அடுத்த தலைமுறை விமானிகளுக்கு பயிற்சி அளிக்க உதவுகின்ற  ஹன்சா-3 (என்ஜி) பொழுதுபோக்காக விமானம் ஓட்டும் கலாச்சாரத்தையும் ஊக்கப்படுத்தும்.   இந்த விமானம் ஓட்டுநர்களின் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது. எரிபொருள் திறன்மிக்க ரோட்டக்ஸ்-912 என்ஜினை கொண்டிருப்பதோடு நவீன பயிற்சியாளர்களுக்கான தரநிலைகளுடன் உள்ளது. ஹன்சா-3 (என்ஜி) தற்போது பகலிலும், இரவிலும் இயக்குவதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளது. இதன் திறன்களை ஐஎஃப்ஆர் விதிகளுக்கு ஏற்ப நீட்டிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
பயிற்சி மட்டுமின்றி கண்காணிப்பு, வான்வழியாக படம் எடுத்தல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு உட்பட பல திறன்களையும் ஹன்சா-3 (என்ஜி) பெற்றுள்ளது. பிரதமரின் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கு இந்தியாவின் அடையாளமாக உள்ளது ஹன்சா-3 (என்ஜி). குறைந்த செலவிலான, பல திறன் கொண்ட பயிற்சி விமானமாக விளங்கும் இது உலக அளவிலான போட்டிக்கும் தயார் நிலையில் உள்ளது. சிஎஸ்ஐஆர்-தேசிய விண்வெளி ஆய்வு கூடத்திற்கும் தொழில்துறையினருக்கும் இடையேயான ஒத்துழைப்பு தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்வதோடு விமானப் போக்குவரத்திலும், புதிய கண்டுபிடிப்பிலும், தொழில்நுட்பத்திலும் தலைமைத்துவம்  பெறுவதற்கான இந்தியாவின் எதிர்காலத்தையும் வடிவமைக்கிறது. 
*********
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image