இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு புரட்சிகர மாற்றத்தை செய்து வருகிறது
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு புரட்சிகர மாற்றத்தை செய்து வருகிறது
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு சூழலை மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சென்ற ஆண்டு மத்திய அரசு செயற்கை நுண்ணறிவு இயக்கத்திற்காக ரூ.10,300 கோடி ஒதுக்கியது. இந்த ஒதுக்கீடு அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தத்துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
செயற்கை நுண்ணறிவு இயக்கம் கல்வி, கலை, தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக இந்த இயக்கம் தொடங்கப்பட்ட 10 மாதங்களுக்குள் சுமார் 18,000 வரைகலை உருவாக்கப் பிரிவுகளில் உயர்தரமான கணினி வசதியை சம்பந்தப்பட்ட அமைச்சகம் பெற்றுள்ளது.  இந்த வரைகலை உருவாக்கப்பிரிவு சந்தையைத் தொடங்குவதில் முன்னோடியாக உள்ளது என்பதுடன் இந்தப் பிரிவைத் தொடங்கிய முதலாவது  அரசாகவும் மோடி அரசு விளங்குகிறது. 
புத்தொழில் நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் கணினி பயன்பாட்டை அணுகும் வகையில் பொதுவான கணினி வசதியை அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இதனைப் பயன்படுத்த உலகளவில் ஒரு மணி நேரத்திற்கு மூன்று டாலர் வரை செலவாகும் நிலையில், மத்திய அரசு ஒரு மணி  நேரத்திற்கு ஒரு டாலர் செலவில் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. 
செயற்கை நுண்ணறிவு என்பது எளிய மக்களுக்கும்  கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ள மோடி அரசு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் செயற்கை நுண்ணறிவு சோதனைக் கூடங்களை அமைத்துள்ளது. இவை இந்த துறை குறித்த அடிப்படை கல்வியை அளிக்கும். 
மற்றத் துறைகளில் பாலினப் பாகுபாடு குறைக்கப்படுவது போலவே செயற்கை நுண்ணறிவு துறையிலும் பாலின பாகுபாட்டை குறைப்பதற்கான முன்முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான தரவரிசை மதிப்பெண்ணில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னிலையில் உள்ளது. இதேப்போல் செயற்கை நுண்ணறிவு பற்றிய திறனை உள்வாங்குவதிலும் இந்தியா முன்னிலை வகிப்பதாக ஸ்டேன்ஃபோர்ட் ஏஐ குறியீடு 2024- அறிக்கை தெரிவிக்கிறது. 
குரல் ஒலி அடிப்படையிலான அணுகல் உட்பட இந்திய மொழிகளில் இணையதளம் மற்றும் டிஜிட்டல் சேவைகளை எளிதாக்க, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவால் செயல்படுத்தப்படும் மொழியாக்கத் தளமான பாஷினி பயன்படுகிறது. 
பொது மக்களுக்கு சேவை செய்வதிலும் செயற்கை நுண்ணறிவு ஈடுபடுத்தப்படுகிறது. இதற்காக புரட்சிகர மாற்றத்துடன் பாரத்ஜென் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 2025-க்குள் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்துறை 28.8 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று வீபாக்ஸ் அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.  2016-க்கும், 2023-க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு திறன் பெற்றவர்கள் எண்ணிக்கை 14 மடங்கு அதிகரித்திருப்பது இதன் மீதான ஆர்வத்தையும், பயன்பாட்டையும் பிரதிபலிக்கிறது. சிங்கப்பூர், பின்லாந்து, அயர்லாந்து, கனடா ஆகியவற்றுடன் செயற்கை நுண்ணறிவு திறனில் அதிவேகமாக வளர்ச்சியடையும் ஐந்தாவது நாடாக இந்தியா திகழ்கிறது. 
***
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image