பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் உலகளாவிய முன்னேற்றம்
புதுதில்லி, டிசம்பர் 31, 2024
2024-ம் ஆண்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் முன்னேற்றம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள், நிதித்துறை வல்லுநர்கள், உலகின் பிரபலமான நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சியை பாராட்டியுள்ளன. இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. எதிர்காலத்தில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று சர்வதேச நிதி அமைப்புகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகரான திருமதி கீதா கோபிநாத் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிதி அமைப்புகளின் நிபுணர்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பாராட்டியுள்ளதுடன், இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று கணித்துள்ளனர். உலக பொருளாதார மன்றத்தின் பிரேண்டே போர்ஜ் இந்தியாவின் வளர்ச்சிக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உலகளவில் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா உலகின் முன்னணி நாடாக திகழ்கிறது. வங்கிக்கணக்குகளைத் தொடங்குவது, பணப்பரிவர்த்தனைகள் போன்ற நடவடிக்கைகளில் டிஜிட்டல் பயன்பாடு உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றன..
வர்த்கம், தொழில்நுட்ப முன்னேற்றம் இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக உள்ளது. பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் இந்தியாவின் பொருளபாதார வளர்ச்சிக் குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றத்தில் உலக அளவில் இந்தியா முன்னணி நாடாக திகழ்வதற்கு இத்தகைய நடவடிக்கைகள் உதவுகின்றன.
------