புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிகாரம் அளித்தல்: நவீன இந்தியா ஹேக்கத்தான், 7-வது பதிப்பின் தாக்கம்-பேராசிரியர் டி.ஜி. சீதாராம், தலைவர், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு
புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிகாரம் அளித்தல்: நவீன இந்தியா ஹேக்கத்தான்,  7-வது பதிப்பின் தாக்கம்
-பேராசிரியர் டி.ஜி. சீதாராம்,  தலைவர், 
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு

உலகம் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்காக நாட்டின்  திறமை வாய்ந்த இளைஞர்களை ஒன்றிணைத்து, புத்தாக்கத்தின் கலங்கரை விளக்கமாக நவீன இந்தியா ஹேக்கத்தான் உருவெடுத்துள்ளது. மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குத் தலைமை மற்றும் உறுதியான ஆதரவு இல்லாமல் இது எதுவும் சாத்தியமாகி இருக்காது.   கடந்த 2017-ஆம் ஆண்டில் நவீன இந்தியா ஹேக்கத்தான்   தொடங்கப்பட்டது முதலே, அவரது ஊக்குவிப்பு இந்த முன்முயற்சியை தேசிய அளவில் திறமையை வெளிக்காணரும் தளமாக உயர்த்தி இருக்கிறது.  இந்தியாவின் புத்தாக்க சூழலியலை வளர்ப்பதில் காணப்படும் பிரதமரின் உறுதிப்பாடு, நவீன இந்தியா ஹேக்கத்தானை நாடு முழுவதும்  மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும்  சக்தியாக மாற்றி உள்ளது.
பிரதமர் மோடியுடன் பங்கேற்பாளர்கள் நேரடியாகக் கலந்துரையாடும் வாய்ப்பை வழங்குவது, நவீன இந்தியா ஹேக்கத்தானின் எழுச்சியூட்டும் அம்சங்களுள் ஒன்றாகும். இந்திய இளைஞர்களின் வளர்ச்சியிலும், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவின் உலகளாவிய முனையமாக நாட்டை மாற்றுவதிலும், பிரதமரின் ஆழ்ந்த ஈடுபாட்டிற்கு இந்த ஈடு இணையில்லா அனுபவம் ஒரு சான்றாகும். புத்தொழில் நிறுவன கலாச்சாரத்தைக் கட்டமைப்பதில் அவர்  அதீத கவனம் செலுத்துவது, லட்சக்கணக்கான இளம் கண்டுபிடிப்பாளர்கள் தங்களது கனவுகளை நோக்கி பயணிக்கவும், தேசத்தின் கட்டமைப்பில் பங்களிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஹேக்கத்தான் என்ற தனது நிலைப்பாட்டை உறுதி செய்திருக்கும் நவீன இந்தியா ஹேக்கத்தானின் 7-வது பதிப்பு, குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளது. 2024 நவீன இந்தியா ஹேக்கத்தானில், முக்கிய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்காக, 54 அமைச்சகங்கள்,  துறைகள், மாநில அரசுகள்,  பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகள் மொத்தம் 254 சவால்கள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. நிறுவனங்கள் அளவிலான ஹேக்கத்தான் போட்டிகளின் பதிவு  150% அதிகரித்துள்ளது. நவீன இந்தியா ஹேக்கத்தான் 2023-இல் பதிவான சுமார்  900 என்ற எண்ணிக்கையைவிட கூடுதலாக, 2024-இல் பதிவாகியுள்ள ஏறத்தாழ 2,247என்ற  எண்ணிக்கை,  இதுவரை நடந்த போட்டிகளில் மிக அதிகமாகும்.
நிறுவனங்கள் அளவில்  86,000-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பதுடன், தேசிய அளவிலான சுற்றுக்கு 49,892 குழுக்கள் முன்னேறும். இந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்துள்ள பரவலான எழுச்சி மற்றும் கல்வி,  தொழில் மற்றும் அரசுசார் நிலைகளில் இதன் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையை நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024-க்கு கிடைத்துள்ள வரவேற்பை பிரதிபலிக்கிறது. புதுமையான சிந்தனைகளை ஆக்கப்பூர்வமான தீர்வுகளாக மாற்றுவதற்காக ஒருங்கிணையும் மாணவர்கள், வழிகாட்டிகள் மற்றும் பங்குதாரர்களின் கூட்டு முயற்சியை இத்தகைய சாதனைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.  
நவீன இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சிகளில் இருந்து கடந்த ஆண்டுகளில் 100 புத்தொழில் நிறுவனங்கள் உருவாகி இருக்கின்றன.  இவற்றில் பெரும்பாலானவை,  சமூகம் மற்றும் தொழில்சார் சவால்களைத் தீர்த்து வைக்கின்றன. கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை மற்றும் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதன் மூலம், நவீன இந்தியா ஹேக்கத்தான், அது உருவாக்கும் புத்தாக்கத் திட்டம், உறுதியான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் விளைவுகளுக்கு வழிவகுக்கிறது என்பதை உறுதி செய்கிறது.
மாண்புமிகு பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையான 2047-இல் வளர்ந்த இந்தியா என்ற கனவை அடைவதற்கு நவீன இந்தியா ஹேக்கத்தானின் புத்தாக்க கலாச்சாரம் மிக முக்கியம். நவீன இந்தியா ஹேக்கத்தான் மூலம் முன்வைக்கப்படும் தீர்வுகள், உடனடி சவால்களை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், நீண்ட கால சமுதாய மற்றும் பொருளாதார மாற்றத்திற்கு அடித்தளமாகவும் அமைகின்றன. 
நவீன இந்தியா ஹேக்கத்தானின் 7-வது பதிப்பை நாம்  கொண்டாடுகையில்,  இந்த முன்முயற்சி வெறும் போட்டி அல்ல, மாறாக கல்வி, தொழில் மற்றும் அரசுக்கு இடையேயான பாலமாக செயல்பட்டு கூட்டு கற்றலுக்கு வித்திடுகிறது என்பது தெளிவாகிறது. ஒவ்வொரு பதிப்புடனும், நவீன இந்தியா ஹேக்கத்தான்  மேலும் வலிமை பெறுவதுடன், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவில் உலகளாவிய தலைமையாக இந்தியா மிளிர்வதற்கு அதிகாரம் அளிக்கிறது.  தொலைநோக்குத் தலைமையின் வழிகாட்டுதலுடன் கூட்டு செயல்பாடுகள் எவ்வாறு தேச  முன்னேற்றத்தை இயக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
புத்தாக்கம், உருவாக்கம் மற்றும் மேம்பட்ட எதிர்காலத்தில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.  இதன் மூலம் வளர்ந்த இந்தியா உருவாவது மட்டுமல்லாமல், புத்தாக்கம் மற்றும் வாய்ப்பின் கலங்கரை விளக்கமாகவும் தேசம் ஒளிரும்.  2047-ஆம் ஆண்டில் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் கனவை நாம் அனைவரும் இணைந்து  நிறைவேற்றுவோம். 
*****
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image