ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கத்தின் கீழ் காஷ்மீர் இளைஞர்களுக்கான கலாச்சார பரிமாற்ற முகாம் சென்னையில் தொடக்கம்
ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கத்தின் கீழ் காஷ்மீர் இளைஞர்களுக்கான கலாச்சார பரிமாற்ற முகாம் சென்னையில் தொடக்கம்.
சென்னை

ஒரே பாரதம் உன்னத பாரதம்  இயக்கத்தின் கீழ், காஷ்மீர் இளைஞர்களுக்கான கலாச்சார பரிமாற்ற முகாம் சென்னையில் நடைபெற்றது.

ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கத்தின் கீழ், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் இன்னொரு மாநிலத்துடன் கலாச்சாரம், மொழி, பாரம்பரியம், கல்வி, உணவு என பல துறைகளின் சிறப்பை அறிந்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு மாநிலமும் அதனுடன் இணைந்துள்ள மாநிலத்தின் சிறப்புகளை அறிந்து கொள்ள  இளைஞர் பரிமாற்ற முகாம்கள் வழி வகுக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாடு- ஜம்மு காஷ்மீர் ஆகியவை  ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் இணை மாநிலங்களாகும்.

மத்திய உள்துறை அமைச்சகம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சகம், நேரு யுவகேந்திரா உடன் இணைந்து இந்த இளைஞர் பரிமாற்ற முகாம்களை நாடு முழுவதும் நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் இருந்து தீவிரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களைச் சேர்ந்த 132 இளைஞர்கள், சென்னையில் உள்ள இளையோர் விடுதியில் இந்த கலாச்சார பரிமாற்ற முகாம்களில் பங்கேற்றனர். இதற்கான தொடக்க விழா நவம்பர் 09 2024 அன்று சென்னை அடையாறில் உள்ள இளையோர் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென் சென்னையின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு முகாமினைத் தொடங்கி வைத்தார்.
இந்த முகாம் ஏழு நாள்கள் நடைபெறும். தினமும் கலாச்சார கலை நிகழ்ச்சிகள், உணவு திருவிழாக்கள் ஆகியவை நடைபெறும். தமிழ்நாட்டிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் இவர்கள் கண்டுகளிக்க உள்ளனர். கல்லூரிகளில் தேசபக்தி குறித்த கருத்தரங்குகளிலும் அவர்கள் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து அவர்கள் அறிந்துகொள்ள இந்த பரிமாற்ற முகாம் வழிவகுக்கும்
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image