நானோ தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுத்தல்டாக்டர் இஷிதா ஜி. திரிபாதி,கூடுதல் மேம்பாட்டு ஆணையர், எம்எஸ்எம்இ அமைச்சகம், இந்திய அரசுநிதிஷா மான்துணை இயக்குநர், எம்எஸ்எம்இ அமைச்சகம்
நானோ தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுத்தல்
டாக்டர் இஷிதா ஜி. திரிபாதி,
கூடுதல் மேம்பாட்டு ஆணையர், 
எம்எஸ்எம்இ அமைச்சகம், இந்திய அரசு
நிதிஷா மான்
துணை இயக்குநர், எம்எஸ்எம்இ அமைச்சகம்
நானோ தொழில் நிறுவனங்கள் மற்றும் முறைசாரா குறு நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குள் (எம்எஸ்எம்இ) ஒரு தனித்துவமான பிரிவாகும். இது உள்ளூர் செயல்பாட்டை கொண்டதாகும். அவற்றின் தனித்துவமான அடையாளங்கள் காரணமாக அவற்றுக்கான சிறப்பு ஏற்பாடுகளை வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும். அப்போதுதான் அவற்றின் சாரத்தை தக்கவைத்துக் கொள்ளும். 
அதே நேரத்தில் வணிக ரீதியாக அவற்றை சாத்தியமானவையாக மாற்ற முடியும். இதனைச் செயல்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. முதல்கட்டமாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உதயம் அசிஸ்ட் பிளாட்பார்ம் (யூஏபி) என்னும் தளத்தைத் தொடங்கியது. இது மத்திய ஜிஎஸ்டி விதிகளின் கீழ், வருமான விவரங்களை தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட, முறைசாரா குறு நிறுவனங்களின் பதிவை எளிதாக்குகிறது.
யூஏபி தொடங்கப்பட்டதிலிருந்து 2.2 கோடிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2.6 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வணிக வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் போன்றவை தங்களது முறைசாரா குறு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் ஒப்புதல் அடிப்படையிலான தரவுகளை மொத்தமாக பதிவு செய்ய நியமிக்கப்பட்ட முகமைகளுக்கு இந்த யூஏபி ஒரு இடைமுகத்தை வழங்குகிறது. பிரதமரின் ஸ்வநிதி போன்ற அரசுத் திட்டங்களில் முறைசாரா குறு நிறுவனங்களின் பயனாளிகளும் யூஏபி-யில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொழில் முனைவை ஊக்குவிப்பதற்கான உறுதியான நோக்கத்துடன், 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், கைகளை கொண்டும், கருவிகளைக் கொண்டும் பணிபுரியும் 18 கைவினைக் கலைகளின் கைவினைஞர்களுக்கு ஆதரவு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை மூலம், அங்கீகாரம், திறன் மேம்பாடு, கருவித் தொகுப்பு ஊக்கத்தொகை 5 சதவீத வட்டிவிகிதத்தில் பிணையில்லாக் கடன்கள் 8 சதவீதம் வரை மானியம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை சந்தைப்படுத்தல் ஆதரவு ஆகியவை இத்திட்டத்தில் அடங்கியுள்ள முக்கிய கூறுகளாகும். அடிப்படையில் இது, தனிப்பட்ட முறையில் வணிகங்களை நிறுவுவதற்கு தேவையான தொழில் முனைவோர் திறன்களை கொண்ட விஸ்வகர்மாக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் அனைத்து வகையான ஆதரவையும் உள்ளடக்கியதாகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வெற்றியாளர்களாக தொடர்வதற்கு தேவையான வசதிகள் இல்லாத நிறுவனங்களை அடையாளம் காண அரசு வழிவகுத்துள்ளது.
நானோ தொழில்முனைவோர் கடன்களுக்கு புதியவர்கள் என்பதுடன், கடன் அல்லது வணிக வரலாறு, நிதி அணுகல் ஆகியவை இல்லாதவர்கள் என்பது அவர்களுக்கு ஒரு பெரும் சவாலாகும். கடன் வரலாறுகள் இல்லாதவர்களுக்கு வங்கிகள் பெரும்பாலும் கடன் வழங்க தயங்குவது இயல்பே. இந்தத் திட்டம் அத்தகையவர்களுக்கு சாத்தியமான சூழலை ஏற்படுத்தவும், சவால்களை எதிர்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடன் பலன்களை பெறும் நோக்கத்திற்காக, பெறப்படும் யூஏபி சான்றிதழ்கள், உதயம் பதிவுச் சான்றிதழுக்கு இணையாக கருதப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இந்தத் திசையில் ஒருபடியாகும். பிரதமரின் ஸ்வநிதி, பிரதமரின் விஸ்வகர்மா போன்ற திட்டங்களில் பயனாளிகளுக்காக, ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட பணம் செலுத்தும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டம் போன்ற முன்முயற்சிகள் நாட்டில் பலமடங்கு அதிகரித்துள்ளது.
கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் முறைசாரா குறு நிறுவனங்களுக்கான சிறப்புச் சான்றிதழ் இந்தாண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், 20 லட்சம் ரூபாய் வரையில் நிறுவனங்கள் கடன் பெற முடியும். 
வளங்கள் ஆதரவு மற்றும் விழிப்புணர்வை இணைப்பதன் மூலம் நானோ வணிக நிறுவனங்கள் ஒப்பீட்டுளவில் பெரிய எம்எஸ்எம்இ நிறுவனங்களுடன் ஒன்றாக செழித்து வளர்கின்றன. இது ஒரு துடிப்பான உள்ளூர் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கிறது. பொருளாதாரத்தின் உயரிய  கட்டுமானம் தொடர்ந்து பிரகாசிக்க அடித்தட்டு அளவிலான நிறுவனங்களை உள்ளடக்கிய பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்துவதே இதன் இறுதி இலக்காகும்.
*********
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image