செயற்கை நுண்ணறிவுப் பந்தயத்தில் வெற்றி பெற பெருமளவில் பசுமை எரிசக்தி தேவை-அமிதாப் காந்த்
செயற்கை நுண்ணறிவுப் பந்தயத்தில் வெற்றி பெற பெருமளவில் பசுமை எரிசக்தி தேவை
-அமிதாப் காந்த்

கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிந்தைய ஆண்டுகளில், தொழில்நுட்ப வரலாற்றில் மிகவும் புரட்சிகர மாற்றத்தை நாம் கண்டோம்: அதுதான் பயனுள்ள, உலகளாவிய மற்றும் வரம்பற்ற செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தோற்றமாகும். இந்தப் புதிய ஏஐ சகாப்தத்திலிருந்து உருவாகும் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு,  பொருளாதார வாய்ப்பு ஆகியவற்றைப் பாதுகாக்க உலகளாவிய போட்டி நடந்து வருகிறது. இதன் தீவிர செயலாக்கத்திற்கான எரிசக்தித் தேவை அதிகரித்து வருகிறது. இந்தியா, தனது ஏராளமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் மற்றும் வளர்ந்து வரும் ஏஐ சூழல் அமைப்புடன், அதன் செயலாக்கத்திற்குப் பசுமை எரிசக்தியைப் பயன்படுத்துவதில் உலகளாவிய தலைவராக மாறும் தன்மையைப் பெற்றுள்ளது.
தரவு மையத்தில் ஒரு ஏஐ மாதிரியைப் பயிற்றுவிக்க 2,84,000 கிலோவாட்-மணிநேரம் (kWh) மின்சாரம் தேவைப்படும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஒரு சாட்ஜிபிடிக்கான கேள்விக்கு, வழக்கமான ஒரு கூகுள் தேடலை விட ஏறத்தாழ பத்து மடங்கு ஆற்றலையும், ஐந்து வாட் எல்இடி பல்பை ஒரு மணி நேரம் எரியவிடுவதை விட அதிக ஆற்றலையும் பயன்படுத்துகிறது. மேலும், தரவு மையங்களுக்கு  மட்டுமே உலகளாவிய மின்சாரத் தேவையில் 1% தேவைப்படுகிறது. உலகளாவிய தரவு மைய ஆற்றல் தேவை 2030-க்குள் 4,000 ட்ரில்லியன் வாட்ஸ் மணி அளவை (டிடபிள்யுஎச்) எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது உலகளாவிய மின்சார தேவையில் 5% ஆகும். 
புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்கள் கட்டுமானம் மற்றும் தொடக்கத்திற்கு விரைவான காலக்கெடுவைக் கொண்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான லட்சிய இலக்குகளை இந்தியா நிர்ணயித்துள்ளது. இது, 2030 க்குள் அதன் மின்சாரத்தில் 50% புதைபடிவம் அல்லாத எரிபொருட்களிலிருந்து வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 300 நாட்களுக்கு மேல் சூரிய ஒளி மற்றும் வலுவான காற்றின் வேகத்துடன், ஏஐ செயலாக்கத்திற்குப்  பயன்படுத்தும் சூரிய ஆற்றலுக்கான திறனை இந்தியா கொண்டுள்ளது.
இந்தியாவின் ஏஐ சூழல் அமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டில் 1,000-க்கும் அதிகமான ஏஐ ஸ்டார்ட்அப்கள் உள்ளன. மேலும், உலகளாவிய ஏஐ திறமைகளில் 20% இந்தியாவில் அமைந்துள்ளன.  இது ஏஐ நிறுவனங்களுக்கு கவர்ச்சிகரமான இடமாக அமைகிறது. டிஜிட்டல் சேவைகள், இ-வணிகம், கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகியவற்றிற்கான தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவில் ஏஐ சந்தை மதிப்பு  2025-ம் ஆண்டில் 7.8 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் சேவைகள், இ-வணிகம், கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகியவற்றிற்கான தேவை அதிகரித்து வருவதால் இந்தியாவின் தரவு மைய சந்தை விரைவாக விரிவடைந்து வருகிறது. மார்க்கெட்ஸ் அண்ட் மார்க்கெட்ஸ் அறிக்கையின்படி, இந்தியாவில் தரவு மைய சந்தை ஆண்டுக்கு 21.1% என்ற வளர்ச்சி விகிதத்துடன் 2025-ம் ஆண்டில் 1,432 மெகாவாட் நிறுவு திறனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 15.6% வளர்ச்சி விகிதத்துடன் 2030-ம் ஆண்டில், 3,243 மெகாவாட்டை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
ஏஐ தரவு மையத் துறையில் வெற்றிபெற, கார்பன் உமிழ்வு இல்லாத பேரளவிலான தரவு மையங்களுக்குரிய கொள்கையை இந்தியா உருவாக்க வேண்டும். இதன் பொருள் பசுமை இல்ல  வாயு உமிழ்வுக்குப் பங்களிக்காத பேரளவிலான தரவு மையங்களை உருவாக்குவது. இதற்கு தொடர்ச்சியாகப் பசுமை எரிசக்தியை வழங்கும்  முக்கிய இடங்களை நாடு அடையாளம் காண வேண்டும். மேலும், மிகவும் பாதுகாப்பான, திறமையான மேம்பட்ட தரவு மையங்களை உருவாக்கவல்ல  திறமையான தொழிலாளர்களை ஈர்க்க வேண்டும்.
புதிய கண்டுபிடிப்புகளை  ஊக்குவிக்க, குறைந்த ஆற்றல் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தும் தரவு மையங்களை அமைப்பதற்கான வழிகளைக் கண்டறிய முன்னோட்டத் திட்டங்களுக்கு அரசு நிதியளிக்க வேண்டும். பயனுள்ள கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் தரவு பாதுகாப்பு தொடர்பாக உலக அளவில் நம்பிக்கையை உருவாக்குவதும் இந்தியாவுக்கு அவசியமாகிறது.
சுத்தமான ஆற்றல் மற்றும் வளர்ந்து வரும் ஏஐ சூழல் அமைப்பின் பலத்துடன், பசுமை எரிசக்தியால்  இயங்கும் ஏஐ செயலாக்கத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைப் பயன்படுத்துவதன் மூலமும்,  ஏஐ தரவு மையங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதன் மூலமும், இந்தியா அதன் கார்பன் தடத்தைக் குறைக்கலாம். நிலையான வணிகம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான மையமாக தனது  நற்பெயரை அதிகரிக்கலாம். தூய்மையான எரிசக்தி  மற்றும் ஏஐ துறைகளில் வேலைகளை உருவாக்கலாம்.

* கட்டுரையாளர் இந்தியாவின் ஜி 20 ஷெர்பா மற்றும் நித்தி ஆயோகின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image