கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் சார்பில் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் சார்பில் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை :

சென்னையில் உள்ள ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் சார்பில் (ஐஎச்எம்), மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களின் துடிப்பான மற்றும் உற்சாகமான பங்கேற்பைக் காண்பிக்கும் வகையில், ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான பண்டிகை நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.  அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நவம்பர் மாதம் பழக் கலவையைக் கொண்டு கேக் தயாரிக்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. உலர் பழங்கள், கொட்டைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவற்றின் கலவையைக் கொண்டு சுவையான கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படுகிறது. இதையடுத்து 2024 நவம்பர் 13, அன்று பிரமாண்டமான ‘பழம் கலவை விழா’ என்னும் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி பல்வேறு ஹோட்டல்களைச் சேர்ந்த புகழ்பெற்ற சமையல்காரர்கள் மற்றும் புகழ்பெற்ற பழைய மாணவர்களின் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

இந்த பாரம்பரியமிக்க நிகழ்ச்சியில் ஹோட்டல் ஆலோசகர் திரு வெங்கடேஷ் ரெட்டி, உணவு ஆலோசகர் - சமையல் கலைஞர் திரு கௌஷிக், ரைட்டர்ஸ் கஃபே சமையல் கலைஞர் திரு பூபேஷ், பிரேம்ஸ் கிராமிய உணவு உரிமையாளர் திரு கிருஷ்ணமூர்த்தி, உணவு ஆலோசகர் திரு ஹர்ஷா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அத்துடன் முன்னாள் மாணவர்களான தொழில் முனைவோர் திரு ஆண்டவன் கதிர், சென்னை ஹோட்டல் மேலாண்மை நிறுவன முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் திரு பிபின் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image