அபிதம்மாவை கௌரவித்தல் : பாலி இலக்கியத்தின் தொன்மை அணிகலன்*கட்டுரையாளர்:பேராசிரியர் ரவீந்திர பந்த்இயக்குநர், சர்வதேச பௌத்த கூட்டமைப்புமுன்னாள் துணைவேந்தர், நவ நாளந்தா மகாவிஹாரா
*அபிதம்மாவை கௌரவித்தல் : பாலி இலக்கியத்தின் தொன்மை அணிகலன்*

கட்டுரையாளர்:பேராசிரியர் ரவீந்திர பந்த்
இயக்குநர், சர்வதேச பௌத்த கூட்டமைப்பு
முன்னாள் துணைவேந்தர், நவ நாளந்தா மகாவிஹாரா



சர்வதேச பௌத்த கூட்டமைப்பு, மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து, 2024 அக்டோபர் 17 அன்று  சர்வதேச அபிதம்மா தினம் மற்றும் பாலி மொழியின் அங்கீகாரத்தைக் கொண்டாட உள்ளது. 
பாலி நியதியின் 3-வது பிரிவான அபிதம்மா பிடாகா (Abhidhamma Piṭaka) புத்தரின் தார்மீக உளவியல், தத்துவவியலை ஆழமாக ஆராய்வதுடன் மனது மற்றும் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கு வசதியான நடைமுறையையும் வழங்குகிறது.  தெரவாடா பாரம்பரியத்தின் படி, இந்தப் போதனைகள், புத்தர் தமது வனவாசத்தின் போது 3 மாதங்கள் தங்கியிருந்த தவதிம்சா காலத்தில் தேவர்களுக்கும், அவரது தாய்க்கும் அபிதம்மாவை போதித்தார்.  அபி (நோக்கிய) மற்றும் தம்மா (வைத்திருத்தல் அல்லது சுமப்பது) ஆகிய இரண்டு சொற்களைக் கொண்ட ‘அபிதம்மா’  புத்தரின் நவீன கால போதனைகளாக சித்தரிக்கப்படுகின்றன. அபிதம்மா மிக நவீன அல்லது சிறப்பு மிக்க தத்துவம் என்று பிரபல பாலி  மொழியியலாளர் வென் புத்தகோஷா விவரிக்கிறார்.
அபிதம்மா, பரமார்த்த தம்மா (உயரிய யதார்த்தங்கள்); சிட்டா (பிரக்ஞை); செடாசிகா (மன அம்சங்கள்); ரூபா (வஸ்து) மற்றும் நிப்பானா (இறுதி விடுதலை)  ஆகிய பிரிவுகளைப் பற்றி விரிவான  பகுப்பாய்வை வழங்குகிறது. இந்த நடைமுறை, மனிதர்கள் உயிர் வாழ்வதில் உள்ள பிரச்சனைகள், மனதுக்கும் வஸ்துக்கும் இடையிலான நடவடிக்கைகளை உணர்ந்து கொள்ளவும், பாதிப்பின் தன்மை மற்றும் இறுதி நிலையை அடைவதற்கான பாதையை ஆராய வகை செய்கிறது. 
அபிதம்மா பிடாகா புத்தரின் போதனைகளில் உள்ள பல்வேறு அம்சங்களை விரிவாக விவரிக்கிறது. அபிதம்மா மிகவும்  தொழில்நுட்பமானதாகவும், தத்துவார்த்தமாக காணப்படும் நிலையில், இதன் முக்கிய நோக்கம் எதார்தத்தின் உண்மை தன்மையை புரிந்து கொள்வதாகும். 
சமீபத்தில் மராத்தி, பிரக்ரித், அசாமிஸ் மற்றும்  வங்காள மொழியுடன் சேர்த்து பாலி மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.  இந்திய துணைக் கண்டத்தின் பண்டைக்கால மத்திய இந்தோ – ஆரிய மொழியான பாலி, புத்த தம்மத்தின் தத்துவங்கள் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை எடுத்துரைக்கிறது. இதுவே பௌத்த கதைகள் மற்றும் தத்துவத்தின் அடித்தளமாக கருதப்படுகிறது. 
****
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image