வேர்களை பலப்படுத்துதல்: இது குறு,சிறு, நடுத்தர தொழில்களின் சகாப்தம்-ஷோபா கரந்த்லாஜேமத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர்
வேர்களை பலப்படுத்துதல்: இது குறு,சிறு, நடுத்தர தொழில்களின் சகாப்தம்
-ஷோபா கரந்த்லாஜே
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், 
தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் 

உலகளாவிய உரையாடலின் மையப் புள்ளியாக செயற்கை நுண்ணறிவு மாறுகின்ற தொழில்நுட்ப எதிர்காலத்தை நோக்கி உலகம் இன்று வேகமாக முன்னேறி வருகிறது. நமது இளைஞர்களுக்கு, குறிப்பாக எஸ்சி / எஸ்டி சமூகங்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடிமக்கள் போன்று பலகாலமாகப் பிரதிநிதித்துவம் பெறாத குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு, தொழில்முனைவை ஒரு சாத்தியமான வாழ்க்கைப் பாதையாக ஊக்குவிப்பதைப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்டுள்ளது.
தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வை வெறும் வணிக உருவாக்கத்திற்கானது அல்ல; அதற்கும் மேலானது. இது வேலையின்மையைப் போக்குவதற்கான  உத்திசார் அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுகிறது.  அடித்தள நிலையில் புதிய கண்டுபிடிப்புகளை வளர்க்கிறது. இவற்றுடன் சேர்ந்து கடன் உத்தரவாதத் திட்ட  அறிவிப்பால் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் (எம்எஸ்எம்இ) துறையில் மகிழ்ச்சி அலை வீசுகிறது. இத்திட்டம் இயந்திரங்களுக்குப் பிணை இல்லாமல் ரூ.100 கோடி வரை கடன் வழங்க வகைசெய்கிறது. இது எளிதாகக் கடன் பெறுவதிலிருந்த முக்கியமான சவாலை நேரடியாக எதிர்கொள்கிறது; மேம்பட்ட தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய வணிகங்களுக்கு உதவி செய்து அவற்றின் உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்கிறது.
நெருக்கடியான காலங்களில் கடனுதவி வழங்க இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் ஒரு முக்கியமான வழிமுறையை அறிமுகம் செய்துள்ளது. இது அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிதியால் செயல்படுத்தப்படும். இது செயல்படாத சொத்துக்களாக வணிகங்கள் மாறுவதைத் தடுக்க உதவும்;  ஒட்டுமொத்த பொருளாதார நிலைத்தன்மையை பராமரிக்கும். 'தருண்' பிரிவின் கீழ் தொழில்முனைவோருக்கான முத்ரா கடன் தொகையை ரூ. 20 லட்சமாக இரட்டிப்பாக்கி இருப்பது கணிசமான ஊக்குவிப்பைப் பிரதிபலிக்கிறது.  இது வணிகங்களை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். அனைத்து முக்கிய எம்எஸ்எம்இ தொகுப்புகளுக்கும் மூன்று ஆண்டுகளுக்குள் சிறுதொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) கிளைகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது எளிதில் அணுகக்கூடிய நிதி சேவைகளை உறுதியளிக்கும்; உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். 
அரசு, தனியார் பங்களிப்பு முறையில் இ-வணிக ஏற்றுமதி மையங்களை உருவாக்குவது மற்றொரு முன்னோக்கிய  சிந்தனை முயற்சியாகும். இது எம்.எஸ்.எம்.இ மற்றும் பாரம்பரிய கைவினைஞர்களுக்கு உலகளாவிய சந்தைகளை மிக எளிதாக அணுகவும், டிஜிட்டல் மாற்றத்திற்கும் சர்வதேச அளவில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் உதவும். முறைசார்ந்த வேலைவாய்ப்புத் துறைகளில் "முதல் முறையாக வரும்" புதியவர்களுக்கான நேரடிப் பயன் பரிமாற்ற திட்டத்தின் மூலம் சுமார் 210 லட்சம் இளம் தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் ரூ. 15,000 வழங்கப்படும். இத்திட்டம், உற்பத்தித் துறையில் புதிய ஊழியர்களை பணியமர்த்த ஊக்கமளிக்கும். முதல் நான்கு ஆண்டுகளுக்கு தொழில் உரிமையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் வருங்கால வைப்புநிதி பங்களிப்புகளையும் உள்ளடக்கிய  திட்டம்  30 லட்சம் தனிநபர்களுக்கும்  தொழில் உரிமையாளர்களுக்கும் பயன் தரும். இந்தத் திட்டத்தின் மூலம்  மாதத்திற்கு ரூ. 1 லட்சம் வரை வருமானம் பெறும் ஒவ்வொரு கூடுதல் ஊழியருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ. 3,000 வரை தொழில் உரிமையாளர்களுக்கு திருப்பித் தரப்படும். இது 50 லட்சம் புதிய தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்டுள்ளது. சிறப்பு திறன் மேம்பாட்டுத் திட்டங்களுடன், பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்களுக்கு சந்தை அணுகலை வழங்குவதுடன், பணிபுரியும் பெண்களுக்காக விடுதிகள், குழந்தை காப்பகங்களை அமைக்க தொழிற்சாலைகளுடன் கூட்டு சேர்ந்து அரசு  ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. அனைவரையும் உள்ளடக்குவதே இதன் முக்கியமான குறிக்கோள்.
திறன் மேம்பாடு என்பது கல்வி ரீதியாக தகுதி வாய்ந்த தொழிலாளர் சக்தியை உருவாக்குவதற்கு மட்டுமின்றி தொழில்துறைக்கு தயாராக வைத்திருப்பதற்கும் முக்கியமானது. தொழில்துறையுடன் இணைந்திருப்பது  மாணவர்களுக்கு உண்மையான உலக வணிக சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு விலைமதிப்பற்ற கண்ணோட்டத்தை  வழங்குகிறது. எம்.எஸ்.எம்.இ  -க்களைப் பொறுத்தவரை, புதிய முன்னோக்குகளையும்  அண்மைக்கால கல்வி ஆராய்ச்சிக்கான அணுகலையும் இது வழங்கும். அவர்களின் செயல்பாட்டு சவால்களுக்குப் புதுமையான தீர்வுகளுக்கு வழிவகுக்கும். இன்றைய நிலவரப்படி, கடந்த 10 ஆண்டுகளில் 17 கோடி வேலைவாய்ப்புகளின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2014-15 ஆம் ஆண்டில் 47.15 கோடியாக இருந்த வேலைவாய்ப்பு 2023-24 ஆம் ஆண்டில் 64.33 கோடியாக அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், வளர்ச்சி ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்துள்ளது. விஸ்வகுரு என்ற லட்சியத்தை நோக்கி, கூட்டு சக்தியை ஒருங்கிணைக்கும் ஒரு பாரதத்தை நோக்கி, நாம் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறி வருகிறோம். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பொற்காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் மாபெரும் மறுமலர்ச்சி சகாப்தத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 
***********
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image