வேலையின்மை அதிகரிப்பதாக பரவும் தகவல்கள் யாவும் தவறானவை: தரவுகளிலிருந்து தெளிவான விளக்கம்
கட்டுரையாளர்கள்
நிலஞ்சன் கோஷ்:
அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின்
இயக்குநர்
ஆர்யா ராய் பரதன்,
அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின்
ஆராய்ச்சி உதவியாளர்
நாட்டின் வளர்ச்சி வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கியுள்ளது. ஆனால், இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வருவதாக சில தகவல்களில் தெரிவிக்கப்படுகின்றன. இவை முற்றிலும் தவறானவை. தரவுகள் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும், பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையிலும் இவை சரியானதாக இல்லை.
2016-17-ம் ஆண்டுக்கும் 2022-23-ம் ஆண்டுக்கும் இடையே வேலைவாய்ப்புகள் கிட்டத்தட்ட 36 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, எண்ணிக்கையில் 17 மில்லியன் அதிகரித்துள்ளது என்பதே சரியான தரவாகும். அதே நேரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் சராசரி வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. இவையே உண்மையான தரவுகளாகும்.
கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் இந்தியாவில் அதிகரித்து வளர்ச்சி மேம்பட்டுள்ளதற்கு அதிக சான்றுகள் உள்ளன.
முதலில் எண்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு வளமான கேஎல்இஎம்எஸ் (KLEMS) தரவுத்தளத்தை பராமரிக்கிறது. இது 1980-81 முதல் துறை ரீதியாக முக்கிய பேரியல் பொருளாதார அளவுருக்கள் குறித்த வருடாந்திர தரவுகளை வழங்குகிறது. தொழிலாளர் தரவுகள் அடிப்படையில் வேலைவாய்ப்பு குறித்த மதிப்பீடுகளும் இதில் உள்ளன.
வேலைவாய்ப்புகள் அதிக வேகத்துடன் அதிகரித்துள்ளது. 2017 முதல் 2023 வரையிலான பிஎல்எஃப்எஸ் (PLFS) தரவுகளும் இதனை உறுதி செய்துள்ளன. தொழிலாளர்களின் எண்ணிக்கை விகிதம் (WPR), இந்த காலகட்டத்தில் 9 சதவீத புள்ளிகள் அல்லது கிட்டத்தட்ட 26 சதவீதம் அதிகரித்துள்ளது.
-----