பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டம்: செயல்வழிக் கற்றலை ஜனநாயகப்படுத்துதல்கட்டுரையாளர் வி அனந்த நாகேஸ்வரன், தலைமைப் பொருளாதார ஆலோசகர்மற்றும் தீக்சா சுப்யால் பிஸ்ட்,இந்திய பொருளாதார பணி அதிகாரி.
பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டம்: செயல்வழிக் கற்றலை ஜனநாயகப்படுத்துதல்
கட்டுரையாளர் வி அனந்த நாகேஸ்வரன், 
தலைமைப் பொருளாதார ஆலோசகர்
மற்றும் தீக்சா சுப்யால் பிஸ்ட்,
இந்திய பொருளாதார பணி அதிகாரி.

பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் உந்து சக்தியாக அமைந்துள்ளது. இத்திட்டம் குறித்து விரிவாக விளம்பரம் செய்யப்படுவதுடன், கவனத்துடன் நடைமுறைப்படுத்தி இந்தியாவின் மக்கள்தொகைக்கு பொருந்துவதாக செயல்படுத்துவது அவசியம். இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து நாட்டில் உள்ள பெரு நிறுவனங்கள் இதனைச் செயல்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவது, இந்திய இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதென்ற திட்டத்தின் குறிக்கோளை வெற்றிபெறச் செய்வதாக இருப்பதோடு,  அவர்களுக்கான வேலைவாய்ப்பையும், அதிகரிக்கச் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முதன்மையான குறிக்கோளாகும். 
இந்தியாவின் 3-ம் நிலை நகரத்தில் உள்ள ஒரு மாநிலப் பல்கலைக்கழக கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்ற ரீனாவின் கதையை கற்பனை செய்து பாருங்கள். அந்தப் பெண் படிப்பில் சிறந்து விளங்கியிருந்தாலும், அவர் படித்த கல்லூரியில் வேலைவாய்ப்புத் தேடி தரும் பிரிவு ஏதும் இல்லாததால், வேலைக்கும் செல்லமுடியாமல், உயர்கல்வியும் படிக்க முடியாமல், அரசு வேலைக்குத் தயாராவதற்காக, அருகில் உள்ள பள்ளியில், ஆசிரியர் பணியாற்றுவதா அல்லது திருமணம் செய்து கொள்வதா என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். இந்திய இளைஞர்களில் (15-29 வயதுடையவர்கள்) மூன்றில் ஒரு பகுதியினரும், இளம் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோரும், படிப்பு, வேலைவாய்ப்பு அல்லது பயிற்சிக் கிடைக்காமல் உள்ளனர்.  மேலும், இந்திய இளைஞர்களில் பெரும் பகுதியினர், தனியார் நிறுவனங்களால், வேலையில் அமர்த்த முடியாத அளவிற்கு தொலைதூரத்தில் வசிப்பவர்களாக உள்ளனர். 
இவர்களைப் போன்றவர்களுக்காகத்தான் பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதென்ற அரசின் உறுதிப்பாட்டின்படி, சந்தை நிலவரத்திற்கு ஏற்பவும், இளைஞர்களாலேயே தீர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 
பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டம், குறிப்பிட்ட  பிரிவைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, நாட்டின் 500 முன்னணி  தொழில் நிறுவனங்களில் 12 மாத காலத்திற்கு உள்ளகப் பயிற்சி வழங்கும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளது. குறைவான வருவாய் கொண்ட குடும்பங்கள் மற்றும் மெட்ரிக்குலேஷன் முதல் பட்டப்படிப்பு வரை படித்த (ஐஐடி பட்டதாரிகள், சிஏ படித்தவர்கள் தவிர) 21 -24 வயது வரையிலான  இளைஞர்கள் இந்தப் பயிற்சி பெற தகுதி பெற்றவர்கள் ஆவர். இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். இதில் 4,500 ரூபாயை அரசும், 500 ரூபாயை சம்பந்தப்பட்ட தொழிற்சாலையும் வழங்கும்.  இத்திட்டத்தின் முன்னோடியாக 2024-ம் ஆண்டில் 1.25 லட்சம் இளைஞர்கள் பயனடையும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளது 5 ஆண்டுகளில் மொத்தம் ஒரு கோடி இளைஞர்களுக்கு உள்ளகப் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதியை இத்திட்டத்திற்காக செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது. 
இளம் ஆர்வலர்களுக்கு இந்த உள்ளகப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமின்றி, மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அனுபவத்தையும், வழங்குவதாக உள்ளது.  பெரு நிறுவனங்களின் பணிச்சூழல் குறித்த உலக யதார்த்தத்தை உணர்த்துவதாகவும் இத்திட்டம் அமைந்துள்ளது. 
வேலை வழங்குவோரைப் பொறுத்தவரை உள்ளகப் பயிற்சி என்பது சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நீண்டகால வேலைவாய்ப்பு வழங்க அவர் தகுதியானவரா என்பதை பரிசோதிப்பதற்கான குறைந்த செலவிலான பரீட்சையாக அமைந்தாலும், அதன் சமூக பொறுப்புணர்வு கடமையை நிறைவேற்றி திறன் இடைவெளியைப் பூர்த்தி செய்வதற்கான நிலையான சாதனமாகவும் அமைந்துள்ளது என்றால் மிகையல்ல.
-----
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image