கடல்சார் பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா
கடல்சார் பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா

சென்னை

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா சென்னையில் உள்ள அதன் தலைமையகத்தில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 1974 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 4 முனைவர் பட்டங்களும், ஆராய்ச்சிக்கான ஒரு எம்எஸ் பட்டமும் அடங்கும்.

பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் மாலினி வி.சங்கர் பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கி, பட்டங்களை வழங்கியதுடன் சிந்தனையைத் தூண்டும் தலைமை உரையை ஆற்றினார்.

பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையை தாக்கல் செய்த டாக்டர் சங்கர், பாதுகாப்பக பிரிவை உருவாக்கியது உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் முன்னேற்றம் மற்றும் முன்முயற்சிகள் குறித்து விளக்கினார். புகழ்மிக்க தேசிய, சர்வதேச நிறுவனங்களுடன் 5-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டதாக துணை வேந்தர் குறிப்பிட்டார்.

கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030, கடல்சார் அமிர்த காலம் 2047 ஆகிய தொலைநோக்கை எட்டும் வகையில் கடல்சார் நோக்கங்கள் எவ்வாறு முன்னேற்றமடைந்துள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தலைமை விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் திரு ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். பல்கலைக்கழகத்தின் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு அவர் பதக்கங்களை வழங்கினார். பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர், பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களின் சாதனைகளுக்கும் பாராட்டுத் தெரிவித்தார். கடல்சார் தொழிலுக்கு தேவையான ஆற்றலை பூர்த்தி செய்ய, மாணவர்களின் திறன்களை தொடர்ந்து மேம்படுத்தும் வகையில் அவர்களை ஊக்குவித்து வரும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை அவர் பாராட்டினார். பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் இந்தியாவுக்கும், தாங்கள் படித்த இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்திற்கும் தூதர்களாக செயல்பட வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆண்டு பட்டம் பெற்றுள்ள 1974 மாணவர்களில் 256 பேர் நேரில் பட்டங்களை பெற்றுக் கொண்டனர். இந்தப் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாக நடைபெற்றது. உலகளாவிய கடல்சார் துறைக்கு திறன்மிக்க தொழில்முறை வல்லுநர்களை உருவாக்கும் அர்ப்பணிப்பு மிகுந்த பல்கலைக்கழகத்தின் சேவைக்கு இதுவொரு சான்றாக திகழ்ந்தது.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சந்தேகமின்றி வரும் காலத்தில் உலகளாவிய முன்னணி கடல்சார் பல்கலைக்கழகமாக உருவெடுக்கும்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image