மோர்கன் ஸ்டான்லி வெளியிட்ட வளர்ந்து வரும் பங்குச்சந்தைகளின் மூலதனச் சந்தைக் குறியீட்டில் சீனாவை இந்தியா விஞ்சியுள்ளது.
செப்டம்பர் 07,
வளர்ந்துவரும் பங்குச் சந்தையில் மூலதனச் சந்தைக் குறியீடு சீனாவின் வெயிட்டேஜ் அடிப்படையில் இந்தியா அதனை விஞ்சியுள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி 2024 செப்டம்பரில் அறிவித்துள்ளது. வளர்ந்துவரும் பங்குச் சந்தையில் மூலதனச் சந்தைக் குறியீட்டில் இந்தியாவின் வெயிட்டேஜ் 22.27 சதவீதமாகவும், சீனாவின் வெயிட்டேஜ் 21.58 சதவீதமாகவும் உள்ளது.
பெரிய, நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவனங்கள் உட்பட 3,355 பங்குச் சந்தைகளை மோர்கன் ஸ்டான்லி குறியீட்டு நிறுவனம் கொண்டுள்ளது. இது வளர்ந்து வரும் 24 சந்தை நாடுகளில் உள்ள பங்குகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு நாட்டிலும், பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் பங்குகளின் எண்ணிக்கை அடிப்படையிலான சந்தை மூலதனத்தைக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் சுமார் 85%-ஐ இது இலக்காகக் கொண்டுள்ளது.
முதன்மையான மோர்கன் ஸ்டான்லியின் வளர்ந்து வரும் பங்குச் சந்தைக் குறியீடு (நிலையான குறியீடு) பெரிய மற்றும் நடுத்தர மூலதனத்தை உள்ளடக்கிய நிலையில் மூலதனச் சந்தைக் குறியீடு, பெரிய, நடுத்தர மற்றும் சிறிய மூலதனப் பங்குகளை உள்ளடக்கிய ஒரு விரிவான வரம்பைக் கொண்டது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வெயிட்டேஜ் அதன் மிக அதிகமான சிறு மூலதன நிறுவனங்களிலிருந்து உருவாகிறது.
நிதானமான சமநிலை விரிவான சந்தைப் போக்குகளைப் பிரதிபலிக்கிறது. சீனாவின் சாதகமற்ற பொருளாதாரப் பின்னணியுடன் அதன் சந்தைகள் போராடி வரும் நிலையில், இந்தியாவின் சந்தைகள் சாதகமான பருண்மைப் பொருளாதார நிலைமைகளால் பயனடைந்துள்ளன. அண்மைக்காலங்களில், இந்தியப் பொருளாதாரத்தின் வலுவான பருண்மைப் பொருளாதார அடிப்படைகள், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வலுவான செயல்திறன் ஆகியவற்றால் இயக்கப்படும் இந்தியா மிகவுயர்ந்த பங்குச் சந்தை செயல்திறனைப் பதிவு செய்துள்ளது.
மேலும், இந்திய பங்குச் சந்தையின் லாபம் பரந்த அடிப்படையிலானது. இது பெரிய, நடுத்தர, சிறு முதலீட்டுக் குறியீடுகளில் பிரதிபலிக்கிறது. 2024-ம் ஆண்டின் முற்பகுதியில் அந்நிய நேரடி முதலீட்டில் 47% அதிகரிப்பு, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை குறைவு இந்தியக் கடன் சந்தைகளில் கணிசமான வெளிநாட்டு பங்குகளின் முதலீடு ஆகியவை இந்த நேர்மறையான போக்கிற்கு பங்களிக்கும் முக்கிய காரணிகளில் அடங்கும்.
இதன் விளைவாக, மோர்கன் ஸ்டான்லி அதன் குறியீடுகளில் இந்தியப் பங்குகளின் ஒப்பீட்டு வெய்ட்டேஜை அதிகரித்து வருகிறது. இது ஒப்பீட்டளவில் சீனாவின் வெய்ட்டேஜ் சரிவைத் தெளிவுபடுத்துகிறது. 2024, மார்ச் முதல் ஆகஸ்ட் வரை , மோர்கன் ஸ்டான்லியின் வளர்ந்துவரும் பங்குச் சந்தைக் குறியீடுகளில் இந்தியாவின் வெயிட்டேஜ் 18% முதல் 20% வரை உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் சீனாவின் வெயிட்டேஜ் 25.1% முதல் 24.5% வரை குறைந்துள்ளது.
மோர்கன் ஸ்டான்லியின் வளர்ந்துவரும் பங்குச் சந்தைக் குறியீடுகளின் மறுமதிப்பீட்டுக்குப் பின், இந்தியர்களின் சமபங்குகள் சுமார் 4 முதல் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் வரை வரக்கூடும் என்று ஆய்வாளர்களின் மதிப்பீடு தெரிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குத் தேவையான முதலீடுகளின் வேகத்தைப் பராமரிக்க, இந்தியாவுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆதாரங்களில் இருந்து மூலதனம் தேவைப்படும் சூழலில், உலகளாவிய வளர்ந்துவரும் பங்குச் சந்தைக் குறியீடுகளில் இந்தியாவின் வெயிட்டேஜ் அதிகரிப்பு நேர்மறையான முக்கியத்துவம் பெறுகிறது.
*