தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் ஆணையரகம் சார்பில் சைக்ளத்தான்
சென்னை :
தூய்மையே சேவை 2024, இயக்கத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் மத்திய கலால் ஆணையரகம் சார்பில், (27.09.2024) ஆரோக்கியமான வாழ்க்கை என்ற கருப்பொருளில் சைக்ளத்தான் போட்டி நடைபெற்றது. இது வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நடத்தப்பட்டது.
சென்னை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் ஆணையர் திரு எஸ். நாசர் கான், சைக்ளத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் பங்கேற்றனர்.