"உலக அரங்கில் இந்திய சுற்றுலா: பிரதமரே நம் 'வியத்தகு' தூதர்"
கட்டுரையாளர்:
திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
மத்திய கலாச்சாரம்,
சுற்றுலாத்துறை அமைச்சர்
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, சுற்றுலாத் துறையில் உலக நாடுகளுக்கு இணையாக அல்லது அதற்கு மேலாக இந்தியாவை நிலைநிறுத்த விளம்பரத் தூதர் ஒருவர் தேவைப்பட்டது அனைவரும் அறிந்ததே. பிற நாடுகள், சுற்றுலாத்துறையில் தங்கள் நாட்டை ஊக்குவிக்க, பிரசித்திபெற்ற திரைப்பட பிரபலங்கள் மற்றும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை வைத்து விளம்பரத்திற்காக பெருமளவு செலவு செய்யும் வேளையில், வியத்தகு இந்தியாவிலும் அது போன்ற ஊக்குவிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து நிலவியது.
கடந்த 100 நாட்களாக சுற்றுலாத்துறை அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் என்ற நிலையில், நம் நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக, பிரதமராக மட்டுமல்லாமல், உலக அளவில் பிரசித்தி பெற்ற தூதராகவும் முன்னோடியாகவும் திகழும் ஒருவரை நாம் தலைவராக பெற்றிருக்கிறோம் என்று அனைவரும் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர், மேற்கொள்ளும் எந்தவொரு பணியும், சுற்றுலாவில் நாம் பின்தங்கிவிடக் கூடாது என்பதை உறுதி செய்யும் விதமாக உள்ளது. பிரதமர் மேற்கொள்ளும் நடவடிக்கையைக் கண்டு நான் வியப்பும் உத்வேகமும் அடைகிறேன்.
நாட்டில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக, ‘ஒட்டுமொத்த அரசு’ என்ற அடிப்படையில் பணியாற்றுமாறு நமது பிரதமர் நமக்கு அறிவுறுத்தி வருகிறார். இதன் விளைவாக, 1,50,000 கி.மீ தொலைவிற்கு சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், 150 விமான நிலையங்கள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, 500 புதிய வழித்தடங்களில், விமானங்கள் இயக்கப்படுவதோடு, அதிவேக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு, சுமார் 100 சுற்றுலாக் கட்டமைப்புத் திட்டங்களும் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்க 128 கோடியாக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை ஏறத்தாழ இரட்டிப்பாகி தற்போது 250 கோடி என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
நாட்டின் உலகளாவிய பிரதிநிதி என்ற முறையில், வியத்தகு இந்தியாவின் அதிசயங்களை உலகிற்கு எடுத்துக் கூறுவதற்கான எந்த வாய்ப்பையும் அவர் தவறவிட்டதில்லை. அவரது தலைமையில், இந்தியா ஜி-20 அமைப்புக்குத் தலைமை வகித்த காலம் ஒரு தனித்துவமானது. இந்த காலகட்டத்தில் நாட்டில் உள்ள 60 வெவ்வேறு இடங்களில், இந்த அமைப்பின் கூட்டங்கள் நடத்தப்பட்டு அந்தந்தப் பகுதியின் கலாச்சாரம், உணவு வகைகள், கைவினைப் பொருட்கள் குறித்து உலகிற்கு எடுத்துரைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜி-20 அளித்த ஊக்கம் காரணமாக, இந்தியாவில் உள்ள ஓட்டல்களில், 2023-ம் ஆண்டு மிக அதிக எண்ணிக்கையிலான அறைகள் ஏற்படுத்தப்பட்டன.
மக்கள் தலைவர் என்ற முறையில், உலகைச் சுற்றிப் பார்க்கச் செல்லும் முன், நம் நாட்டை சுற்றிப் பாருங்கள் என்ற அவரது அழைப்பு அனைவருக்கும் ஊக்கம் அளித்துள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களையும், அவர்களுக்கு தெரிந்த வெளிநாட்டு நண்பர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து அந்தப் பயணம் எப்போதும் நினைவு கூறத்தக்கதாக அமைய உதவுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகத்தில் ஏராளமானோர் பின்பற்றக் கூடிய உலகளாவிய தலைவரான நமது பிரதமர், லட்சத்தீவுகள், காஸிரங்கா, கன்னியாகுமரி, ஸ்ரீநகர் போன்ற இடங்களுக்கு சென்றதன் மூலம், நாட்டில் அதிகம் அறியப்படாத இடங்களையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அறியச் செய்வதவர் ஆவார்.
நமது பிரதமரிடம் பெற்ற உத்வேகம் வாயிலாக, உள்நாட்டு சுற்றுலா மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு போன்ற திட்டங்களை, சுற்றுலா அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. அரசு முதலீட்டுக்கு உதவியாக, தனியார் முதலீடுகளுக்கும் முன்னுரிமை அளித்து, இந்தியாவில் சுற்றுலாத் தலங்கள் மேம்பாட்டில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. அத்துடன், திறன் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்குவதன் வாயிலாக, சுற்றுலா மூலம் உள்ளூர் மக்கள் மற்றும் தனிநபர்கள் பலன் பெறும் வகையிலும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்கை நாம் நினைத்துப் பார்க்காத நாளே இல்லை என்ற அளவுக்கு, நமது நடவடிக்கைகள் அமைந்துள்ளது. இந்தத் தொலைநோக்கை அடைய, நமது பங்களிப்பை வழங்க, சுற்றுலா நமக்கு ஒரு வாய்ப்பை அளித்திருப்பதோடு ‘வியத்தகு இந்தியர்கள்’ என்ற வகையில், நமது பிரதமரைப் போன்று நாம் அனைவரும் நமது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
------