அஞ்சூர் ஜெகதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
அஞ்சூர் ஜெகதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 
கிருஷ்ணகிரி,ஆக.25- 


தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியில் பொதுமக்களுக்கு அனைத்து திட்டங்களும் ஒரே இடத்தில் உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் அஞ்சூர், மஜித் கொள்ளஹள்ளி, ஜெகதேவி ஐகொந்தம் கொத்தப்பள்ளி ஆகிய ஊராட்சிகளின் முகாம்  அஞ்சூர் ஜெகதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம ஊராட்சி இரா. துரைசாமி, (வட்டார வளர்ச்சி) முகமது சிராஜுதீன், பர்கூர் வட்டாட்சியர் திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெகதேவி ஜெயந்தி ராதாகிருஷ்ணன், அஞ்சூர் சுகுணா வெங்கடேஷ், மஜித்கொள்ளஹள்ளி லட்சுமி மாதவன், ஐகொந்தம் கொத்தப்பள்ளி ரீனா கிரிதரன் ஆகியோர் முன்னிலையிலும் இந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமில்  மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எஸ். பாலாஜி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தின்  பயன்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறினர். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் லட்சுமி, மீனாட்சி,சூர்யா, அப்சர்பேகம்பேகம் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் லட்சுமி பிரியா, சரவணன், அனிதா, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ், செங்கதிர் செல்வன், ராஜகணேஷ், நரேஷ்குமார் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இறுதியாக நன்றியுரை ஜெகதேவி ஊராட்சி செயலாளர் செங்கதிர் செல்வன் கூறினார்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image