மீனவர்களின் வாழ்க்கை மற்றும் பொருட்களை சேதமின்றி பாதுகாக்கும் ரிலையன்ஸ் பவுண்டேஷனின் தகவல் சேவை
மீனவர்களின் வாழ்க்கை மற்றும் பொருட்களை சேதமின்றி பாதுகாக்கும் ரிலையன்ஸ் பவுண்டேஷனின் தகவல் சேவை
ரிலையன்ஸ் பவுண்டேஷன் இந்திய அளவில் உணவு உற்பத்தியில் முக்கியபங்காற்றும் மீனவர்களின் வாழ்வாதார முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்திய கடல் தகவல் சேவை மையம் (INCOIS) அளிக்கும் கடல் முன்னெச்சரிக்கை தகவல்களை குரல் வழி செய்தியாகவும், வாட்ஸ்அப் வழியாகவும், மஜ்லி (Machli) என்ற செயலி வழியாகவும் அளித்து வருகின்றது. இதில் கடல் அலை உயரம், காற்றின் வேகம், திசை மற்றும் கடல் மேற்புற நீரோட்டம் பற்றிய தகவல்கள அளிப்பதுடன் மீன் கிடைக்க வாய்ப்புள்ள பகுதிகள் பற்றியும் தகவல்களை மீனவர்களுக்கு அளித்து வருகின்றது. முக்கியமாக மீனவர்கள் கடல் கால நிலைகளை அறிந்து கொள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை ஒரு கட்டணமில்லா உதவி தொலைபேசி எண் 18004198800 வழியாகவும் தங்கள் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு கேட்கும் மீனவர்களுக்கும் இந்திய கடல் தகவல் சேவை மையத்தின் தகவல்களை தகுந்த நேரத்தில் அளித்து வருகின்றது இது பற்றி தெரிந்து கொள்ள கொக்கிலமேடு மீனவர் திரு தேவேந்திரன் அவர்களை சந்தித்து பேசியபோது அளித்த தகவல்கள்
கோகிலமேடு என்ற கிராமம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சிறிய மீனவ கிராமமாகும். இது எடையூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது. கோகிலமேடு கிராமத்தில் அருகில் உள்ள மாமல்லபுரம் ஒரு முக்கிய வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நகரமாகும், இது தோராயமாக கொக்கிலமேட்டில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது. இது செங்கல்பட்டில் இருந்து தெற்கு நோக்கி 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மாநிலத் தலைநகர் சென்னையில் இருந்து 66 கி.மீ துாரத்தில் வங்காள விரிகுடாவில் உள்ள அழகிய கடற்கரை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் உள்ள மீனவர் திரு தேவேந்திரன் அவர்களை சந்திக்கும்போது அவர் கூறிய தகவல்கள் - எனது பெயர் தேவேந்திரன், நான் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுக்கா, கொக்கிலமேடு கிராமத்தில் வசிக்கிறேன், நான் கொக்கிலமேடு கிராமத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றேன், என்னுடன் அப்பா, அம்மா, என் தம்பி ஆகியோர் கொக்கிலமேடு கிராமத்தில் சொந்த வீட்டில் வசித்து வருகிறோம், எங்கள் குடும்பத்திற்கு 2 படகுகள் உள்ளன (ஒரு ஃபைபர் படகு 32 அடி மற்றும் ஒரு சுசுகி அவுட்போர்டு இன்ஜின் படகு 34 அடி) இந்த படகுகள் மூலம் மீன்பிடிதொழில் செய்து கிடைக்கும் வருமானம் மட்டுமே எங்கள் குடும்பத்தின் முக்கிய வருவாய் ஆதாரமாகும்.

தினமும் அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்கு எனது போட்டில் கடலுக்கு மூன்று பேருடன் சென்று மீன் பிடித்து கரைக்கு அன்றைய தினமே காலை 8 மணி முதல் 10 மணிக்குள் மீன்களை பிடித்து கரைக்கு வருகிறேன், மீன் பிடிப்புக்கு ஏற்றாற்போல் அன்றைய தினம் வருவாய் இருக்கும் அதாவது ஒவ்வாவொருநாளும் அன்றைய மீன் பிடிப்பைப் பொறுத்தும் அன்றைய மீனின் விற்பனையை பொருத்தும் வருவாய் இருக்கும். மேலும் மீன்களையும் கரையில் விற்று என்னுடன் மீன்பிடிக்க வந்தவர்களுக்கு கூலியை பிரித்து கொடுத்துவிடுவேன். கடல் மீன்பிடியில் நிலையான வருமானமாக குறிப்பிட முடியாது. சில நாட்களில் ஒரு நாளைக்கு ரூ 2000, சில நாட்களில் ரூ 4000 முதல் 6000 வரை மற்றும் சில நாட்களில் மீன்பிடிப்பே இல்லாமல் கூட திரும்பியது உண்டு. அன்றைய மீன் பிடிப்பைப் பொறுத்தே எங்களது வாழ்க்கை அமையும்.

கடல் மீன் பிடி தொழில் என்பது மிகவும் கடினமான ஒரு தொழிலாக உள்ளது, அதனால் எங்களுக்கு மீன்பிடித்தல் ஒரு சவாலாக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக ரிலையன்ஸ் பவுண்டேஷனில் இருந்து பெறப்படும் கடல் தகவல் கடல் கால நிலையைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் முக்கியமானது. என்னிடம் ஆண்ட்ராய்டு போன் உள்ளது, கடந்த 2 ஆண்டுகளாக கடல் முன்னெச்சரிக்கை தகவல்களை குரல் குறுஞ்செய்தி வாயிலாக தகவல்களைப் பெற்று வருகிறேன், கடந்த ஒரு வருடமாக ரிலையன்ஸ் பவுண்டேஷன் வழியாக வாட்ஸ்அப் தகவலைப் பெற்று வருகிறேன், மேலும் கடல் முன்னறிவிப்புக்காக மஜ்லி செயலியையும் பயன்படுத்தி வருகின்றேன். எங்கள் கிராமத்தில் உள்ள பலர் இந்த ரிலையன்ஸ் பவுண்டேஷனில் இருந்து தகவல்களைப் பெறுகிறார்கள், மேலும் எங்கள் மொபைல் தொலைபேசியில் நேரடியாக கடல் முன்னெச்சரிக்கை தகவல்களைப் பெறுகிறோம். ரிலையன்ஸ் பவுண்டேஷன் மட்டுமே எங்களுக்கு கடல்சார் முன்னெச்சரிக்கை தகவல்களைத் தருகிறது, அதுவே அடுத்த நாளுக்கான முன்னெச்சரிக்கை தகவல்களை தினசரி பெறுவதால், கடல் அலை உயரம், காற்று ஆகியவை தொழில் செய்ய இயலாத அளவிற்கு கொடுக்கப்பட்டிருந்தால் முன்கூட்டியே எச்சரிக்கையடைந்து மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்க்கிறோம். இது எங்களது மீன்பிடி போட்டுகள் மற்றும் வலைகள் மற்றும் எங்களது உயிரையும் பாதுகாக்கிறது.
ரிலையன்ஸ் பவுண்டேஷன் மூலம் கடல் எச்சரிக்கை தகவல் வருவதற்கு முன்பு, கடல் அலை உயரம், காற்றின் வேகம் பற்றிய தகவல் தெரியாமல் சில சமயங்களில் எங்கள் படகுகள் கவிழ்ந்து பாதிக்கப்பட்டிருக்கின்றோம். மேலும், படகில் வைத்திருந்த வலைகள் தண்ணீரில் விழுந்தால், சில நேரங்களில் வலைகள் கூட அடித்துச் செல்லப்படும் நிலை இருந்தது, ஆனால் தற்போது புயல் அடித்தாலும், எச்சரிக்கை தகவல் முன்பே அதாவது அடுத்தநாளுக்கான எச்சரிக்கை தகவல் கிடைப்பதால். அடுத்த நாள் கடல் சீற்றமாக இருந்தால், அன்றைய தினம் கடலுக்கு செல்வதை கண்டிப்பாக தவிர்க்கிறோம், கடந்த ஆண்டு மட்டும் 12 முறைக்கு மேல் ரிலையன்ஸ் பவுண்டேஷன் தகவல் காரணமாக  மீன்பிடித்தலை தவிர்த்து படகு, வலை மற்றும் உயிர்பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். அதேபோல, ரிலையன்ஸ் பவுண்டேஷன் வழங்கிய தகவலும் 80% சரியாக இருந்தது.

ரிலையன்ஸ் பவுண்டேஷன் அவ்வப்போது ஒரு மணி நேர தொலைபேசி மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது அதிலும் நான் பங்கேற்று சிறந்த பலனை பெற்றுள்ளேன். ஒரு நிகழ்ச்சியில் டீசல் போட் எஞ்சின் பராமரிப்பு பற்றி தெளிவாக விளக்கினர் அதில் கடலுக்கு போகும்போது எஞ்சின் தீடிரென்று வேகம் குறைந்து அடைத்து, அடைத்து வரும் இவ்வாறு பிரச்சனை இருந்தால் மெக்கானிக்கை கூப்பிட்டு கரைக்கு வந்த பிறகு சரி செய்வோம், ஆனால் இந்த நிகழ்ச்சியில் வல்லுநர் அவர்கள் எஞ்சினில் ஆயில் அளவு குறைந்தால் இவ்வாறு பிரச்சனை வரும் என்று தெளிவாக விளக்கினார். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஆயில் மற்றும் ஆயில் அளவு குறைவாக இருந்தால் சரியான ஆயில் நிரப்பப்பட வேண்டும் என்று தெரிவித்தார் மேலும், இன்ஜினை வெயிலில் விடும்போது டீசல் டேங்கில் டீசல் முழுவதுமாக நிரப்ப வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் அப்போதுதான் எஞ்சினில் தண்ணீர் வேர்வையாக சேராமல் தடுக்க முடியும் என்று விளக்கினார் அவ்வாறு செய்ததில் இருந்து இந்த பிரச்சனை என் எஞ்சினில் வரவில்லை. இதன் மூலம் தற்போது என்ஜின் நின்று கடலில் சிக்கி தவிக்கும் பிரச்னைகளை தவிர்க்கிறேன்

இவ்வாறான சிறந்த சேவையை செய்து வரும் ரிலையன்ஸ் பவுண்டேஷனுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், இது போன்ற சிறந்த சேவைகளை தினமும் எங்களுக்கு வழங்குவதற்கும், தேவை அடிப்படையிலான நிகழ்ச்சிகளை நடத்தி, எங்கள் வாழ்க்கை மற்றும் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ரிலையன்ஸ் பவுண்டேஷனுக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன், ரிலையன்ஸ் பவுண்டேஷன் தொடர்ந்து இந்த சேவைகளை எங்களுக்கு வழங்கி எங்களை என்றும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image