இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் பரிணாம வளர்ச்சி-ஜே பி நட்டாமத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் பரிணாம வளர்ச்சி

-ஜே பி நட்டா
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்

சென்னை

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், இரண்டாவது முறையாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், கடந்த வாரம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு (எப்எஸ்எஸ்ஏஐ) நான் சென்றிருந்தேன். அப்போது 2014 ஆம் ஆண்டில் நான் வகித்த எனது முதல் பதவிக்காலம் நினைவுக்கு வந்தது. உலகின் இரண்டாவது பெரிய மக்கள்தொகையால் நுகரப்படும் உணவுப் பொருட்களுக்கான தரநிலைகள் மற்றும் கொள்கைகளை அமைக்கும் பெரும் பொறுப்புடன் நாட்டின் உணவுப் பாதுகாப்பு கட்டுப்பாட்டாளராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் ஒரு அமைப்பின் புதிய வளர்ச்சியைக் கண்ட காலகட்டம் அது.
கொள்கைகளை வலுப்படுத்த, வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள குடிமக்கள் மற்றும் உணவு வணிகங்கள் மத்தியில் சமூக மற்றும் நடத்தை மாற்றத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களைத் தொடங்க வேண்டுமென்று, ஆணையத்தின் அப்போதைய கண்ணோட்டம் தெளிவாக இருந்தது.  இந்த முயற்சிகள் இந்திய உணவு உரிமை இயக்கத்தின் கீழ் அழகாக ஒன்றிணைந்துள்ளன. இது அனைத்து இந்தியர்களுக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவை உறுதி செய்வதற்காக ஒரு முழுமையான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளது.
சுகாதார அமைச்சகம், தரநிலை ஆணையம் ஆகியவை நம் நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த அயராது உழைத்து வருகின்றன. வலுவான உணவுக் கொள்கைகள் மற்றும் தரநிலைகளின் அடித்தளத்தின் மீது மட்டுமே ஒரு வலுவான உணவுப் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முடியும். ஆணையத்தின் அறிவியல் குழுக்கள் மற்றும் நிபுணர் குழுக்கள் கணிசமாக விரிவடைந்துள்ளன, இதில் 286 நிறுவனங்களைச் சேர்ந்த 88 நிபுணர்கள் உள்ளனர். இது உலகத் தரத்திற்கு இணையான தரநிலைகளை வழங்கியுள்ளது. 
2023 இல் உலகளாவிய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டில் பிரதமரால் தொடங்கப்பட்ட தரநிலைகள் கோடக்ஸ் அலிமென்டேரியஸ் கமிஷனுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் சிறுதானியங்களுக்கான உலகளாவிய குழு தரநிலைகளை உருவாக்க வழிவகுத்ததுடன் இந்தியாவை உலகளாவிய முன்னோடியாக நிறுவியது.
கொள்கைகள் மற்றும் தரநிலைகளின் வளர்ச்சியுடன் கூடுதலாக, பாதுகாப்பான உணவை உறுதிப்படுத்த அவற்றின் அமலாக்கம் மற்றும் சோதனை அவசியமாகும். ஆணையத்தின் உணவு சோதனை உள்கட்டமைப்பு கடந்த எட்டு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ், மாநில உணவு சோதனை ஆய்வகங்களை வலுப்படுத்த ரூ.482 கோடிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நடமாடும் உணவு ஆய்வகங்கள் தொலைதூரப் பகுதிகளை அடையத் தொடங்கியுள்ளன.
சைவ உணவுகள், கரிம பொருட்கள் மற்றும் ஆயுர்வேத ஆஹாரம் போன்ற புதிய வகைகளுக்கான தரநிலைகளை முன்கூட்டியே ஆணையம் உருவாக்கியுள்ளது. 
உலகளாவிய உணவு வர்த்தகம் விரிவடைவதால், கோடெக்ஸ் போன்ற பல்வேறு தளங்களில் உலகளாவிய கட்டுப்பாட்டாளர்களுடன் ஈடுபடுவதன் மூலம் வலுவான சர்வதேச கூட்டாண்மைகளை உருவாக்குகிறது. இது சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதற்கு உதவுகிறது. வளர்ந்து வரும் உலக மக்கள் தொகைக்கு பாதுகாப்பான, சத்தான உணவுடன் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய இணக்கமான அணுகுமுறைகளை உருவாக்குகிறது. 
உணவுப் பாதுகாப்பு ஒரு கூட்டு முயற்சியாகும். பல்வேறு அரசு துறைகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் எப்எஸ்எஸ்ஏஐ நெருக்கமாக பணியாற்றி வருகிறது, முழு அரசு மற்றும் முழு அமைப்பு அணுகுமுறைகளை எடுத்துக்கொள்கிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார முன்முயற்சிகளில் தொழில்துறை மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஒரு கூட்டு அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம் எப்எஸ்எஸ்ஏஐ ஒரு செயலூக்கமான முன்னிலை வகிக்கிறது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு சூழலை கணிசமாக மாற்றியுள்ளது. வளர்ந்து வரும் சவால்களுக்கு ஏற்ப நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அர்ப்பணிப்பு மற்றும் முழுமையான அணுகுமுறை மூலம், உணவு உற்பத்தியில் மட்டுமல்லாமல், உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையிலும் இந்தியாவை உலகளாவிய தலைமை நாடாக மாற்றுவதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜெய் ஹிந்த்!
***
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image