முசிறி கல்வி மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப்பள்ளியில் 2024-2026 ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைகுழு மறு கட்டமைப்பு உறுப்பினர் தேர்வு
முசிறி கல்வி மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப்பள்ளியில்   2024-2026 ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைகுழு            மறு கட்டமைப்பு உறுப்பினர் தேர்வு.

       திருச்சி ஆக 19

திருச்சி மாவட்டம் முசிறி கல்வி மாவட்டத்தில் உள்ள தா.பேட்டை ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப்பள்ளியில் இன்று  2024-2026 ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைகுழு            மறு கட்டமைப்பு உறுப்பினர் தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் பள்ளி ஆசிரியர் விஜயகுமார்  வரவேற்றார். கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திரா அவர்கள் தலைமையேற்றார். பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு உறுப்பினர் தேர்வு செய்வதற்காக சதீஷ்குமார்   கரிகாலி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் தேர்தல் கண்காணிப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டார். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் கோம்பை பாஸ்கர் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு  புதிய தலைவராக சங்கீதா                        அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். பள்ளி மேலாண்மை குழு புதிய துணை தலைவராக 
கவிதா தேர்வு செய்யப்பட்டார். மேலும் பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளராக பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா  தேர்வு செய்யப்பட்டார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினராக ஆசிரியர் பிரதிநிதி தங்கதுரை ஆசிரியர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.  மேலும் பள்ளி மேலாண்மைகுழு புதிய உறுப்பினராக உள்ளாட்சி பிரதிநிதிகள் செளந்தரராஜன் பேரூராட்சி தலைவர் மற்றும்   மஞ்ஜேஸ்வரி வார்டு உறுப்பினர்  தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்களாக
சுய உதவி குழு பிரதிநிதி  புவனா இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்  மோகனபிரியா  மற்றும் முன்னாள் மாணவர்கள் பிரதிநிதியாக அறிவழகன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் பெற்றோர் உறுப்பினராக 
ரவிசந்திரன் 
ரத்தினவேல்
ரமேஷ்
செந்தில்குமார்
சுரேஷ்
திலகவதி
நிவேதிதா
தேன்மொழி
கோமதி கருணாகரன் 
கோமதி கணேசன் 
லோகாம்பாள்
சரண்யா
மீனா
தனலட்சுமி
அகிலா 
 மேற்கண்ட 24 பேர் பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டு குழு புகைப்படங்கள் எடுக்கப்பட்டது.பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தேர்வு கூட்ட நிகழ்வினை பள்ளி ஆசிரியர் சுரேஷ்குமார் அவர்கள்  தொகுத்து வழங்கினார்.  பள்ளி ஆசிரியர்கள்  கலைச்செல்வி,  சிந்துஜா  ராஜா ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை செய்தனர்.மற்றும் பள்ளியின் முதலமைச்சரின் காலை உணவு பணியாளர்  கீதா மற்றும் சத்துணவு சமையலர்  மஞ்சுளா மற்றும் பள்ளி உதவியாளர்கள்  தேவிகா  சதீஷ் ஆகியோர் மற்றும் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்ட முடிவில் பள்ளி ஆசிரியர் தங்கதுரை அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இறுதியாக நாட்டுப்பண் முழங்க  பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image