சோழ தேசத்தில் விதை திருவிழா
சோழ தேசத்தில் விதை திருவிழா
தர்ம இயக்கம் சார்பாக அக்னி அறக்கட்டளை, கிரியா அறக்கட்டளை பசுமை சிகரம் அறக்கட்டளை இணைந்து 
சோழ தேசத்தில் விதை திருவிழா
திருச்சியில் நடைபெற்றது.திருச்சி திண்ண கோணம் பசுமை சிகரம் அறக்கட்டளை நிறுவனர் எஸ் யோகநாதன் தலைமை வகித்தார்.
குத்தூசி திரைப்பட இயக்குனர் சிவசக்தி முன்னிலை வகித்தார், கிராமாலயா நிறுவனர் பத்மஸ்ரீ எஸ்.தாமோதரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.ஸ்ரீ ஜெயரெங்கா இயற்கை மருத்துவமனை மற்றும் யோகா ஆராய்ச்சி மையம் மேலான் இயக்குனர் இயற்கை மருத்துவர் ஆர் சுகுமார்
நோய் தீர்க்கும் இயற்கை உணவு முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
 கிரியா பவுண்டேசன் முனைவர் சிவபாலன் இயற்கை வேளாண்மை குறித்து பேசினார். வேளாண் பொறியியலாளர் பிரிட்டோ ராஜ் விவசாயிகளோடு கலந்துரையாடினார். 
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் இயற்கை வாழ்வியலும் யோக விஞ்ஞானமும் தலைப்பிலும், 
தமிழ்நாடு நுகர்வோர் பெடரேஷன் தலைவர் சிவசங்கர சேகரன் மற்றும் சேப் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கஜோல் வாழ்த்துரை வழங்கினர்.
விதை திருவிழா அரங்கில் வேளாண் விவசாயிகள் பாரம்பரிய நெல் விதைகள், உரப்பயிர் விதைகள், தானிய பயிர் விதைகள், பயிறு வகை விதைகள், எண்ணை வகை விதைகள், நறுமணப் பயிர் விதைகள், அகத்திக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, சிகப்பு தண்டு கீரை, பச்சை தண்டு கீரை, பருப்பு கீரை ,பாலக்கீரை, பச்சை புளிச்சக்கீரை, சிகப்பு புளிச்ச கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கை கீரை, கொத்தமல்லி கீரை, வெந்தயக்கீரை விதைகளும் கொடி வகைகளில் கொடிஅவரை, பட்டைஅவரை, கோழி அவரை, குட்டை புடலை, நீட்ட புடலை, பாகல், பீர்க்கன், பரங்கி, பூசணி, சுரை, வெள்ளரி, காராமணி, பூனைக்காலி, தர்பூசணி விதைகளும், செடி வகைகளில் மணப்பாறை கத்தரி, தக்காளி, மிளகாய்,, வெண்டை கொத்தவரை மொச்சை காராமணி, பீன்ஸ், வெள்ளை முள்ளங்கி, பச்சை கத்தரி, ஊதாகத்தரி, கேரட், பீட்ரூட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் விதைகளும், வீட்டுத்தோட்டம் அமைக்க விதைகளை அரங்கில் நுகர்வோருக்கு நேரடியாக வழங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு விதைத்தவன் உறங்கி விடுவான் விதைகள் உறங்குவதில்லை எனக்கூறி முருங்கை விதைகளை இலவசமாக வழங்கினார்கள். சிறுதானிய விதைகள்,இயற்கை உரங்கள், மூலிகைள், மாடி தோட்டத்திற்கான காய்கறி விதைகள், பூச்சி விரட்டி உள்ளிட்டவை அரங்கில் இடம் பெற்றிருந்தன. சோழமண்டலத்தில் விதை திருவிழா நிகழ்வில் வேளாண்மை மற்றும் சார்பு துறை வல்லுநர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னோடி விவசாயிகள் மற்றும் உழவர் பெருமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.  அனைவருக்கும் இலவச சித்தா மற்றும் இயற்கை மருத்தவ பரிசோதனை செய்யபட்டது.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image