மத்திய அணுசக்தித் துறையின் சென்னை மண்டல கொள்முதல் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை :
மத்திய அணுசக்தித் துறையின் சென்னை மண்டல கொள்முதல் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் செயல்பட்டு வந்த இந்த அலுவலகம் கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை மண்டல கொள்முதல் பிரிவு,
அணுசக்தி இயக்குநரக தொடர்பு மையம்,
டாக்டர் ராஜேந்திர பிரசாத் சாலை,
பல்லாவரம், சென்னை 600 043.
தமிழ்நாடு.
இந்த இடமாற்றம் 19.06.2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதையடுத்து இந்தத் துறையுடன் தொடர்புடையவர்கள் முகவரி மாற்றத்தை குறித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.