வேலூர் ஸ்ரீ நாராயணி நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திரைப்பட நடிகர் பாக்யராஜ் பங்கேற்பு
வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த திருமலைக்கொடி ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மண்டபத்தில் ஸ்ரீ நாராயணி நர்சிங் கல்லூரியில் பயின்ற மாணவ மாணவியர்களுக்கு பட்டமளிப்பு விழா மருத்துவமனை இயக்குனர் டாக்டர். என்.பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகரும் திரைப்பட இயக்குனருமான கே. பாக்கியராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பட்டம் பெரும் மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர். இந்த பட்டமளிப்பு விழாவில் திரளான மாணவ மாணவிகள், பெற்றோர்கள், மருத்துவக் கல்லூரி ஆசிரியர் ஆசிரியைகள் என பலர் கலந்து கொண்டனர்.