அனாதை பிணங்களை சுமப்பது, நல்லடக்கம் செய்வது, இறுதி சடங்கு செய்வதில் தாயும், மகளும்!
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜய குமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்டோர் குடும்பம் சகிதமாக அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகமும், பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானமும், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகமும், உரிமை கோரப்படாத அனாதை பிணங்களை உரிய மரியாதை உடன் நல்லடக்கம் செய்து வருகிறார்கள்.
அனாதை பிணங்களை சுமப்பது, நல்லடக்க பணியில் ஈடுபடுவது, இறுதி சடங்கு செய்வது என அனைத்து பணிகளிலும் இயன்றளவு தன்னை ஈடுபடுத்தி வருகிறார்கள் வழக்கறிஞர் சித்ரா சட்டப்படிப்பை பயின்று வரும் கீர்த்தனா. இது
குறித்து வழக்கறிஞர் சித்ரா விஜய குமார் பேசுகையில்,
பெண்கள் இறுதிச்சடங்குகள் செய்வதையோ, பிணத்தை சுமந்து செல்வதையோ, ஏன் பிண ஊர்வலத்தில் கலந்து கொள்வது
இல்லை.
பெண்களுக்கு சமஉரிமை என்பது இன்றும் கூட பல விஷயங்களில் எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. சில கோவில்களுக்குள் பெண்கள் செல்லக்கூடாது, சில கடவுளை வணங்கக்கூடாது, சில இடங்களுக்கு செல்லக்கூடாது என பெண்களுக்கான கட்டுப்பாடுகள் இன்றும் நீடித்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் பெண்கள் ஏன் இறுதிச்சடங்குகள் செய்ய அனுமதிக்கப் படுவதில்லை.
பெண்கள் இறுதிச்சடங்குகள் செய்வதையோ, பிணத்தை சுமந்து செல்வதோ, ஏன் பிண ஊர்வலத்தில் கலந்து கொள்வதோ இல்லை. ஏனெனில் பழங்காலம் முதலே பெண்கள் இறுதிச்சடங்குகளை பொறுத்த வரையில் அழுவதுடனும், சில சடங்குகளை செய்வதுடனும் பெண்களின் வேலை முடிந்துவிடுகிறது சுடுகாட்டிற்கு வரவோ, கொள்ளி வைக்கவோ பெண்களுக்கு பழங்காலம் முதலே அனுமதிக்கப்படுவதில்லை.
பண்டைய காலங்களில் பெண்களுக்கு சொத்தில் உரிமை இல்லாமல் இருந்தது. இப்போது சொத்தில் உரிமை கிடைத்தாலும் இறுதி சடங்குகளில் உரிமை இன்னும் கிடைக்கவில்லை.
இறந்தவர்களுக்கு மகனோ அல்லது நேரடி ஆண் வாரிசு இல்லையென்றால் கூட குடும்பத்தில் மூத்தவர்கள் மனைவியையோ அல்லது மகளையோ கொள்ளி வைக்க விடாமல் தூரத்து சொந்தம் யாராவது ஒருத்தரைத் தான் கொள்ளி வைக்க விடுவதை நம் முன்னோர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். பெண்கள் பலவீனமானவர்கள் என்கின்றனர்.
ஆணை விட பெண்கள் மனதளவில் மிக வலிமையானவர்கள் அந்த அளவிலே குடும்பம் சகிதமாக ஆதரவற்று இறப்பவருக்கு ஒரு மகன், ஒரு மகள், ஒரு பேத்தி முன்னிருந்து நல்லடக்கம் செய்வதாகவே இறுதி சடங்கினை செய்கின்றோம் என்றார்.