முதுபெரும் தமிழறிஞர் கூத்தங்குடிஅழகு.இராமானுசத்திற்குநிதி வழங்கும் விழா
முதுபெரும் தமிழறிஞர் 
கூத்தங்குடி
அழகு.இராமானுசத்திற்கு
நிதி வழங்கும் விழா
திருச்சி மாவட்டம் எழுத்தாளர் சங்கம் முதுபெரும் தமிழறிஞர் கூத்தங்குடி அழகு ராமானுஜத்திற்கு நிதி வழங்கும் விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அரங்கத்தில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத் தலைவர் ஜவகர் ஆறுமுகம் துவக்க உரையாற்றினார் பொதுச்செயலாளர் கவிஞர் கோவிந்தசாமி அறிமுக உரையாற்றினார்.
மேனாள் அமைச்சர் நல்லவர் நல்லசாமி தலைமை வகித்தார் பத்மஸ்ரீ கிராமாலயா தாமோதரன், திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோர் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட நிதியினை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். மேலும் திருச்சி நகைச்சுவை மன்ற செயலாளர் சிவகுருநாதன், தோழர் இந்திரஜித், மதனா, கவிஞர் வெற்றி பேரொளி, வையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா சுப்பிரமணியன், டாக்டர் கே எஸ் சுப்பையா பாண்டியன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அலுவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் பாராட்டுரையுடன் நிதி வழங்கினர்.
 கூத்தங்குடி அழகு ராமானுஜம் 
திருவாரூர் மாவட்டம் கூத்தங்குடி ஊரைச் சார்ந்த அழகு சுந்தரம் பிள்ளை
கனகரத்தின அம்மாள் தம்பதியருக்கு
30-10-1938 ஆண்டு பிறந்தவர்.
 கூத்தங்குடி திண்ணைப் பள்ளி. பின் புலிவலம் திருவாரூர் பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி பயின்றவர் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் பயின்ற பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வடபாதி சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகும். மனைவி மயிலாம்பிகா அம்மையார் மகன் விநாயக பிரபு, மகள் ஜனகரத்தினம் ஆவர்.

இளமை பருவத்தில் குருக்கத்தி ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, காவல்துறை ஆகியவற்றில் தேர்வு பெற்றும் கவிதை , நாடகம் போன்றவற்றில் ஆர்வம் காரணமாக பணியில் சேரவில்லை.
அரு.இராமநாதனின் அசோகன் காதலி மேலும்  சந்தனத்தேவன் போன்ற பல நாடகங்களில் நடித்தவர். அனைத்துப் பாடல்களையும் எழுதியவர்.
லாந்தர் சோப்பு, ஊதுபத்தி, நைல் ஷாம்பு தயாரிப்பு பங்குதாரர், விற்பனை தொழில்களில் ஈடுபட்டவர். 
 மரங்களை மறந்து நிழலில் நிற்பவர்கள்,
காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள் நூலினை வெளியிட்டுள்ளார்
ஈழம் ஓர் இனத்தின் அடையாளம் கட்டுரை தொகுப்பு மற்றும்  கவிதைகள் கட்டுரைகளை நூலாக வெளியிட உள்ளார்.*பெரியார் மணியம்மை பல்கலைக்கழக விழாவில் வெள்ளையன் விருது மற்றும் 10,000/= ரூபாய் பொற்கிழியினை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வழங்கினார்.தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் நாமக்கல் செல்வம் கல்லூரியில் கு.சின்னப்பபாரதி விருதினை வழங்கினார்.ஆண்டிப்பட்டி கவிஞர் ஞானபாரதியின் இளங்குயில்கள் அமைப்பு விருது, 
கவிதை உறவு இதழ் சிறந்த நூலுக்கான விருது 5000 ரூபாய் பரிசு, 
மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி
திருக்குவளை முத்தமிழ் மன்றம் கலைஞர் 80ஆம் பிறந்தநாள் விருது. வழங்கினார். மன்னார்குடியில் இருபது ஆண்டுகள் வசித்தபோது துரைராஜ் சித்தரின் முருகன் கோவில் "சக்திவேல் கோட்டம்"  இவருடைய தமிழைப் போற்றி  "ஆலயத் தமிழ்ப் புலவர்" என்று கொண்டாடியது. இவ்வாறு தமிழ் பணியில் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்ட கூத்தங்குடி அழகு ராமானுஜம் 84 ஆவது அகவையில் ஓலை குடிசையில் வாழ்வது கண்டு திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் நிதி வழங்கும் நிகழ்வினை முன்னெடுத்தது நிகழ்வில் ஒரு இனம் வாழ வேண்டும் என்றால் மொழியினை காக்க வேண்டும் எழுத்தாளர்கள் வறுமைப் பிடியிலிருந்து மீள வேண்டும் அரசு பல்வேறு வகையில் இலவச இல்லங்களை வழங்கி வருகிறது அவ்வகையில் மூத்த தமிழ் கவிஞர் அழகு ராமானுஜத்திற்கு இல்லம் வழங்கி சிறப்பிக்க வேண்டும் என எழுத்தாளர்கள் சான்றோர் பெருமக்கள் வலியுறுத்தி நிதி வழங்கினார்கள்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image