வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த, செய்தி மக்கள் தொடர்பு துறை ஒளிபரப்பு குறும்பட விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் கொடியசைத்து துவைக்கினார்...
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை ஒளிபரப்பும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு திரை வீடியோ வாகனத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் நித்தியானந்தம், உதவி பொறியாளர் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.