மீனவர்களுக்கு டீசல் எஞ்சின் பராமரிப்பு குறித்த பயிற்சியை சூலேரி காட்டுக்குப்பத்தில் நடத்தியது ரிலையன்ஸ் அறக்கட்டளை
ரிலையன்ஸ் பவுண்டேஷன் மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பல்வேறு தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக சேவையாற்றி வருகின்றது. குறிப்பாக தினசரி அடுத்த இரண்டு நாட்களுக்கான கடல்கால நிலை தகவல்களான கடல் அலை உயரம், காற்றின் வேகம், திசை, கடல் நீரோட்டம் குறித்த தகவல்கள் மற்றும் மீன் கிடைக்க வாய்ப்புள்ள இடங்கள் குறித்த தகவல்களை இந்திய கடல் தகவல் சேவை மையத்தில் இருந்து பெற்று மீனவர்களுக்கு வாய்ஸ் எஸ். எம். எஸ், வாட்ஸ் அப் மற்றும் மஜ்லி ஆப் மூலமாகவும் அளித்து வருகின்றது. மேலும் மீனவர்களுக்கு 18004198800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் கடல் கால நிலை குறித்த தகவல்களையும் உடனுக்குடன் அளித்து வருகின்றது. மேலும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமான டீசல் எஞ்சின்களை பராமரிக்கும் முறைகள், சுத்தமான மீன்பிடி முறைகள், மீன்பிடிக்கும்போது மீனவர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது
அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், சூலேரி காட்டுக்குப்பம் மீனவர் கிராமத்தில் தங்கள் டீசல் எஞ்சின்களை முறையாக பராமரித்து அதன் வாழ்நாளை அதிகரிப்பது எப்படி என்ற நிகழ்ச்சியை ரிலையன்ஸ் பவுண்டேஷன் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி, விழுப்புரம் பகுதி டீசல் எஞ்சின் மெக்கானிக் தலைவர் செல்வமணி அவர்கள் கலந்து கொண்டு மீனவர்களுக்கு தங்கள் டீசல் போட் எஞ்சினை தினசரி எவ்வாறு பராமரிப்பது, பிரச்சனைகளை தவிர்க்கும் முறைகள், கடலில் டீசல் எஞ்சினில் பேரிங் உடைந்தால், டீசல் அடைப்பு, டீசல் ஓஸ் கட்டாவது போன்ற பிரச்சனைகளை எவ்வாறு சரிசெய்து கரைக்கு வருவது போன்ற விபரங்களை தெளிவாக விளக்கினார்.