பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி (பிஎம்-கிசான்): இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றி அமைத்துள்ளது
-டாக்டர் எம்.எல்.ஜாட்
இயக்குநர், பண்ணை மற்றும் உணவு அமைப்புகள்
பற்றிய உலகளாவிய ஆராய்ச்சி திட்டம்
2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய அரசால் தொடங்கப்பட்ட பி.எம்-கிசான் திட்டம், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நேரடி வருவாய் ஆதரவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். மேலும் வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதிலும், கிராமப்புற சமூகங்களுக்கு நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த முயற்சி விவசாயிகளுக்கு நேரடி பணப்பரிமாற்றத்தை வழங்குவதன் மூலம் அவர்களின் வருவாயை அதிகரிக்க முயற்சி செய்கிறது. இதனால் அவர்களின் கிராமப்புற வாழ்வாதாரம் மேம்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகளின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று சம தவணைகளில் விநியோகிக்கப்படுவதன் மூலம், இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு அத்தியாவசிய விவசாய செலவுகளைச் செய்ய பெருமளவில் உதவுகிறது. இதனால், கடன் கொடுப்பவர்களை நம்பியிருப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிதி உதவி, விவசாயிகளிடையே மாற்றத்தை நிரூபித்துள்ளது, வேளாண் உபகரணங்கள், விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற விவசாய உள்ளீடுகளில் முதலீடு செய்ய விவசாயிகளுக்கு இது உதவுகிறது. இதனால் பயிர் விளைச்சல், விவசாய உற்பத்தி, நிலைத்தன்மை ஆகியவை அதிகரிக்கின்றன.
பிஎம் கிசான் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.3.02 லட்சம் கோடிக்கு மேல் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 16 தவணைகளில் நிதி விடுவிக்கப்பட்டதன் மூலம் இந்திய விவசாயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது. மேலும், அண்மையில் 17-வது தவணையாக ரூ.20,000 கோடி விடுவிக்கப்பட்டது. இது ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளது. இதுவரை மொத்தம் ரூ.3.24 லட்சம் கோடிக்கும் மேல் நிதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கிராமப்புற பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எஃப்.பி.ஆர்.ஐ) நடத்திய ஆய்வில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள பி.எம்-கிசான் பயனாளிகள், கசிவுகள் இல்லாமல் முழுத் தொகையையும் பெற்றனர் என்பது தெரியவந்துள்ளது. இது விவசாயத்தில் முதலீடு செய்யும் திறனை கணிசமாக மேம்படுத்தி இருக்கிறது. கிராமப்புற பொருளாதாரத்தில் ரூ.3.24 லட்சம் கோடிக்கு மேல் உட்செலுத்தப்பட்டது. விவசாயிகளின் நிதியில் நிலைத்தன்மையை உயர்த்தியது மட்டுமல்லாமல், உள்ளூர் சந்தைகள் மற்றும் சேவைகளையும் ஊக்குவித்துள்ளது.
தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை திறம்பட ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பணம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக இந்தத் திட்டம் நேரடிப் பயன் பரிமாற்ற வழிமுறையைப் பயன்படுத்துகிறது. ஆதார், பொது நிதி மேலாண்மை அமைப்பு, இந்திய தேசியப் பணம் வழங்குதல் கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் எளிதாக்கப்பட்ட இந்த முறை, மோசடி அபாயத்தைக் குறைக்கிறது. இத்திட்டத்தின் நன்மைகள் உத்தேசித்துள்ள பயனாளிகளை சென்றடைவதை இது உறுதி செய்கிறது. இந்தத் திட்டத்திற்காக தனிச்சிறப்புடன் தொடங்கப்பட்ட பிஎம்-கிசான் தளம், பயனாளிகளைச் சரிபார்க்க பல்வேறு தரவுப் புள்ளிகளை ஒருங்கிணைக்கிறது. தகுதியான விவசாயிகள், பலன்களைப் பெறுவதை உறுதி செய்கிறது. கூடுதலாக, ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகி, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேலும் மேம்படுத்துகிறது.
பயனாளிகளுக்கு உதவ, இந்தத் திட்டத்தில் பல புதுமையான ஆதரவு முயற்சிகள் உள்ளன. பிரத்யேக இணையதளம், மொபைல் பயன்பாடு மற்றும் எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்கள், விவசாயிகள் தங்கள் நிலையைக் கண்காணிக்கவும், மின்னணு-கேஒய்சி-யை முடிக்கவும், குறைகளைத் தீர்த்துக் கொள்ளவும் அனுமதிக்கின்றன. "உங்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள்" என்பது விவசாயிகளுக்கு அவர்களின் பதிவு மற்றும் நன்மை நிலை பற்றிய விரிவான கண்ணோட்டத்தை ஒரே சொடுக்கில் வழங்குகிறது. இது விவசாயிகளுக்கு நிகழ்நேர தகவல்களுடன் அதிகாரம் அளித்திருப்பதுடன், இடைத்தரகர்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்துள்ளது.
பிஎம்-கிசான் திட்டத்தை இந்திய அரசு தொடர்ந்து செம்மைப்படுத்தி விரிவுபடுத்தி வருகிறது. வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின் ஒரு பகுதியாக, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளையும் இத்திட்டத்தில் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்ட நாடு தழுவிய பிரச்சாரத்தின் மூலம், ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். திட்டத்தின் வலுவான குறை தீர்க்கும் பொறிமுறை, தீர்வு விகிதம் 99% ஐ நெருங்குகிறது. விவசாயிகளின் பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கான அதன் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.
----------------------