மத்திய அரசின் புதிய விளம்பர சட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் வேண்டுகோள்.
மத்திய அரசின்  புதிய விளம்பர சட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் வேண்டுகோள்.

 சென்னை

மத்திய அரசின்  "புதிய விளம்பர சட்டத்தால்" பத்திரிகைகள் பாதிக்கும் அபாயம்.*

*மத்திய அரசு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஆகிய துறைகளுக்கு புதிய சட்டத்தை ஒன்றை உருவாக்கி உள்ளது.*

*இது உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் என்றாலும்,  மத்திய அரசுதான் இதற்கு காரணமாக இருந்தது. அதாவது பத்திரிக்கைகளில் (18/06/24) செவ்வாய் முதல் விளம்பரம் வெளியிட வேண்டுமென்றால் மத்திய அரசின் உத்தரவு ஆணையை ஒவ்வொரு விளம்பரத்திற்கும் வாங்க வேண்டும்.*

 *இதற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள  வலை தளத்துக்குள் சென்று ஒவ்வொன்றாக நிரப்பி அதில் விளம்பரதாரரின் ஒப்பந்தமும், விளம்பர ஏஜென்சி மற்றும் பத்திரிக்கை துறை சார்ந்தவர்களும் கையொப்பமிட்டு அவற்றை நகலெடுத்து, அவற்றினை மீண்டும் பதிவேற்றம் செய்து, சான்றிதழ் வந்தால் மட்டுமே, அதன் மூலம் தான் விளம்பரத்தை  பிரசுரிக்க வேண்டும் என்று நீதிமன்ற ஆணை வழிகாட்டி உள்ளது.*

*இதனால் அவசர அவசரமாக எந்த ஒரு விளம்பரத்தையும் இனி பிரசுரிக்க முடியாது.* 

*அதே மாதிரி மிக முக்கியமாக தற்போது உள்ள இலகுவான முறையான மொபைல் மூலம் ரிலீசாக அனுப்புவதைப் போல இனி அனுப்ப முடியாது.* 
*கொஞ்சம் கூட பயன்படுத்த முடியாது. ஒவ்வொன்றுக்கும் பிரிண்ட் அவுட் எடுத்து அதனை டவுன்லோட் செய்து இப்படி ஏகப்பட்ட வேலைகளை செய்து தான் ஒரு விளம்பரத்தை பிரசரிக்க முடியும்.*

*இனி ஒவ்வொருவரும் தனித்தனியாக கம்ப்யூட்டரும் பெயிண்டரும் உடன் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். தற்போது உள்ள மொபைல் மூலமாக அனுப்பும் வசதியை பெறுவது மிகவும் கடினம்.*

*எனவே பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் அவ்வளவு சுலபமாக இனி விளம்பரத்தை பிரசுரிக்க முடியாது.*

*இதனால் ஏற்கனவே ஜி எஸ் டி போன்ற குளறுபடி நடைமுறையால் பல பத்திரிகைகள் நடத்த முடியாமல் நின்று உள்ளது.*

*மாறிவரும் தொழில்நுட்பம் காரணமாக ஒரு குறிப்பிட்ட சதவீதம் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பும் இனி பத்திரிகை துறைக்கு பெரும் அபாயமாக ஏன் முடங்கிப் போகும் சூழல் உள்ளது என்று இத்துறை சார்ந்தவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.*
 *எனவே இதனை சரிபடுத்த எளிய முறையை மத்திய அரசு மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்.*   
*அதாவது சிங்கிள் டோர் சிஸ்டம் என்ற முறையை கொண்டு வந்தால்  சாத்தியமாக இருக்கும்.* 

*இல்லை என்றால் மிக விரைவில் பத்திரிக்கை துறையில் இருந்து, மத்தியில் ஆளும் அரசுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பும் என்பது நிச்சயம்.*

 *எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு இதனை பழைய முறைக்கே மீண்டும் கொண்டு சென்றால் மட்டுமே இந்த துறை வளர்ச்சி பெறும். இல்லையேல் ரொம்பவும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழல் வரும் என்று பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image