செஞ்சி பார் அசோசியேஷன் சங்க நிர்வாகிகள் தேர்வு.
செஞ்சி ஜூன்-14,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பார் அசோசியேஷன் சங்கநிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
மூத்த வழக்கறிஞர்கள் தேவகுமார், சக்தி ராஜன் ,தொண்டூர் சுப்பிரமணியன் ஆகியோர் சங்க நிர்வாகிள்தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்தினர்.
இத்தேர்தலில் செஞ்சி பார் அசோசியேஷன் சங்கத் தலைவராக மூத்த வழக்கறிஞர் ஏ.பி. பிரவீன்,சங்க செயலாளராக அசுருதீன், துணைத் தலைவராக பழனிவேல், இணை செயலாளர்களாக மணிகண்டன், கலைவாணி, பொருளாளராக காமராஜ், நூலகராக திருமலை ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செஞ்சி பார் அசோசியேஷன் சங்க நிர்வாகிகளுக்குவழக்கறிஞர்கள் எவன்ஸ்,ராஜவேல், நடராஜன், அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.