இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ‘நம்பமுடியாத பணியை’ செய்திருப்பதாகவும் ‘அமெரிக்காவில் இதில் கொஞ்சம் நாம் செய்வது அவசியம்’ என்றும் ஜேபி மோர்கன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டைமன் கூறியுள்ளார்


இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ‘நம்பமுடியாத பணியை’ செய்திருப்பதாகவும் ‘அமெரிக்காவில் இதில் கொஞ்சம் நாம் செய்வது அவசியம்’ என்றும் ஜேபி மோர்கன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டைமன் கூறியுள்ளார்


புதுதில்லி, ஏப்ரல் 24, 2024 
பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடு குறித்து ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டைமன் பாராட்டியுள்ளார். இந்தியாவுக்கு “நம்பமுடியாத கல்வி முறையையும், அடிப்படைக் கட்டமைப்பையும்” பிரதமர் தந்திருப்பது “நம்பமுடியாத பணி” என்று அவர் கூறியுள்ளார். “இதில் சிறிதாவது” அமெரிக்காவில் செய்யவேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் செவ்வாயன்று பொருளாதார மன்றத்தால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜேமி டைமன், “இந்தியாவில் நம்பமுடியாத பணியை  மோடி செய்திருக்கிறார்... 400 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து அவர் மீட்டுள்ளார். நாம் மோடியைப் பற்றி நிறைய பேசலாம்... 400 மில்லியன் மக்கள் கழிப்பறை வசதி பெற்றிருக்கிறார்கள். இவையெல்லாம் எவ்வாறு செய்யப்பட்டன என்பது பற்றி நாம் விரிவாக பேசவேண்டும்” என்றார். 
இந்தியாவில் 700 மில்லியன் மக்கள் வங்கிக் கணக்கைத் தொடங்கியிருப்பதாகவும்  அவர் கூறினார். இதன் மூலம் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. “அவர்கள் (இந்தியா) நம்பமுடியாத கல்வி முறையைக் கொண்டிருக்கிறார்கள். நம்பமுடியாத அடிப்படைக் கட்டமைப்பைப் பெற்றுள்ளனர். அவர்கள் ஒரு மனிதரின் (பிரதமர் மோடி) உறுதி காரணமாக ஒட்டுமொத்த தேசத்தையும் முன்னேற்றியிருக்கிறார்கள்”.
பழமையான அதிகார வர்க்க நடைமுறைகளை உடைத்ததால் மோடியை “உறுதிபடைத்தவர்”  என்று அவர் அழைத்ததோடு, “அதேபோல், ஒரு சிலவற்றை இங்கு (அமெரிக்காவில்) நாம் செய்வது அவசியம்” என்றார்.
“ஒவ்வொரு குடிமகனும் கை ரேகை அல்லது கருவிழி அல்லது விரலால் அங்கீகரிக்கப்படுகிறார். 700 மில்லியன் மக்களுக்கு அவர்கள் வங்கிக் கணக்கை வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் அவர்களின் பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது” என்று டைமன் கூறினார். இவர் 18 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனராக  இருப்பவர்.
அமெரிக்கா பற்றி குறிப்பிட்ட டைமன், தேசத்தின் கடன், பணவீக்கம், புவிசார் அரசியல்  மோதல்கள் பொருளாதாரத்தில்  தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்தார். பணவீக்கத்தோடு, மிக அதிகமான வட்டி விகிதங்கள் எதிர்பார்த்ததை விட, அதிக காலம்   நீடிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
நிதி நிறுவனர்களுக்கும் (கடன் கொடுப்பவர்களுக்கும்) முறைப்படுத்துவோருக்கும் இடையே கூடுதலான நல்லிணக்கம் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த அவர், அனைவரையும் உள்ளடக்கிய  பொருளாதார வளர்ச்சி அவசியம் என்றார். 
அமெரிக்க ராணுவ பலம், அரசியல் அணி திரட்டல், தேசத்தின் பொருளாதார செயல்பாடு போன்ற விஷயங்கள் இதர நாடுகளுடன்  ஒப்பிடப்பட வேண்டும் என்றும் டைமன் கூறினார்.

***
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image