பண்ருட்டி அடுத்துள்ள மேல் குமாரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் காவல் படை துவக்க விழா தலைமை ஆசிரியர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பண்ருட்டி காவல் உட்கோட்ட டிஎஸ்பி பழனி வருகை தந்து மாணவர் காவல் படை நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் மாணவர்களுக்கு கல்வி மற்றும் நல்லொழுக்கம் தொடர்பான அறிவுரைகளை வழங்கி மாணவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் லட்சுமி, பாலமுருகன், மாணவர் காவல் படை ஒருங்கிணைப்பாளர் குணராஜ், ஆசிரியர் ஆறுமுகம் உள்பட மாணவ - மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்