*இந்தியாவில் தொழிலாளர் சட்டங்கள்: வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்று சக்தி/ வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான புதிய தொழிலாளர் சட்டங்கள்/புதிய இந்தியாவிற்கான தொழிலாளர் சீர்திருத்தங்கள்*
மாறிவரும் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்துவது குறித்து இரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையம் 2002 பரிந்துரை செய்திருந்தது. பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு 29 தொழிலாளர் சட்டங்கள் நான்கு சட்ட தொகுப்புகளாக (ஊதியங்கள் சட்ட தொகுப்பு 2019, தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்ட தொகுப்பு 2020, தொழில்துறை உறவுகள் குறியீடு 2020 மற்றும் சமூகப் பாதுகாப்பு சட்ட தொகுப்பு 2020) ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்பைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், மேம்படுத்தப்பட்ட பணி நிலைமைகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன், சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் ஒழுங்குமுறை கட்டமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.
அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களும், தொழிலாளர் சட்ட வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். தொழிலாளர் சட்டங்களின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள் எளிதான வர்த்தகத்தை ஊக்குவிப்பதுடன், தொழிலாளர்களின் நலனிலும் அக்கறை செலுத்துகிறது. ஊதியங்கள் சட்ட தொகுப்பு 2019-இன் கீழ் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா துறையின் பணியாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது, அனைத்து விதமான ஊதிய பாகுபாடுகளையும் களைகிறது. சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020-இன் கீழ் பணிகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட மகப்பேறு பாதுகாப்பு, முக்கிய மாற்று சக்தியாகத் திகழ்கிறது. சமூகப் பாதுகாப்புக் குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட மகப்பேறு நலச் சட்டம் 2017, 26 வார மகப்பேறு விடுப்பை வழங்குகிறது. இது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மகப்பேறு பாதுகாப்பு மாநாடு (183) 2000 இல் குறிப்பிடப்பட்டுள்ள 14 வார மகப்பேறு பாதுகாப்பு விடுப்பை விட அதிகம். 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு கட்டாய குழந்தைகள் காப்பக வசதிகள், வீட்டிலிருந்து வேலை செய்தல் மற்றும் வாடகைத் தாய் மற்றும் தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு நீட்டிக்கப்பட்ட விடுப்பு விதிகள் போன்ற பல பாலின உணர்திறன் விதிகள், பிரிவு 11 ஏ இன் கீழ் புதிய திருத்தத்தில் இடம்பெற்றுள்ளன. சமூகப் பாதுகாப்புக் குறியீடின் கீழ் சமூகப் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களின் பலன்களை செயலி சார்ந்த நிரந்தரமற்ற மற்றும் பகுதிநேர வேலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விரிவுபடுத்தியது, கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற ஜி 20 தொழிலாளர் பணிக் குழு கூட்டத்தில் மைய விவாதப் பொருளாக இருந்தது.
தொழில்துறை உறவுகள் குறியீடு 2020-இன் கீழ் நிலையான கால வேலைவாய்ப்பு (எஃப்.டி.இ) அறிமுகப்படுத்துவதன் மூலம் வேலை ஒப்பந்தங்கள் முறைப்படுத்தப்படுகின்றன. இதில் எஃப்.டி.இ-இன் கீழ் பணிபுரியும் ஒரு தொழிலாளி நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒரு வருடத்திற்கான தொடர்ச்சியான சேவையுடன் கூடிய பணிக்கொடை உட்பட அனைத்து நன்மைகளுக்கும் தகுதியுடையவர். முறைசாரா தன்மையை பெரிய அளவில் நிவர்த்தி செய்து, சமூகப் பாதுகாப்பிற்கான தொழிலாளர்களின் அணுகலை அதிகரிக்கிறது. 13 சட்டங்களை ஒருங்கிணைக்கும் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்ட தொகுப்பு 2020, ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருவருக்கும் பாதுகாப்பை நீட்டித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி, சிறந்த பணி நிலைமைகள் மற்றும் தொழிலாளர்களின் நல்வாழ்வை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவை மாற்றுவதை புதிய தொழிலாளர் சட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. தொழில்துறை மற்றும் தொழிலாளர்களுக்கான சட்டங்களின் தாக்கங்களையும், சட்டங்களின் சிறந்த செயலாக்கத்தையும், மாநிலங்கள், விதிகளை இறுதி செய்த பின்னர் உணர முடியும். மத்திய அரசின் வரைவு விதிகளை இந்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், பல மாநிலங்கள், தொழிலாளர் குறியீடுகளுக்கு இணங்க தங்கள் விதிகளை ஏற்கனவே அறிவிக்கை செய்துள்ளன.
கட்டுரையாளர்
_டாக்டர் எலினா சமந்த்ராய், வி.வி.கிரி தேசிய தொழிலாளர் நிறுவனம், நொய்டா_