கத்தார் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் நாடு திரும்பியது இந்தியாவின் மிகப்பெரிய ராஜதந்திர வெற்றி

கத்தார் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் நாடு திரும்பியது இந்தியாவின் மிகப்பெரிய ராஜதந்திர வெற்றி
புதுதில்லி, பிப்ரவரி 12, 2024 

மோடி அரசின் ராஜதந்திர முயற்சிகள் காரணமாக, முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது, இப்போது அவர்கள் விடுவிக்கப்பட்டு பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளனர்.
கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்த், கமாண்டர் பூர்னேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணகர் பகலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் 2022 ஆகஸ்ட் மாதத்தில்  கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர்.
2023, அக்டோபர்  26 அன்று கத்தார் நீதிமன்றம் எட்டு இந்தியர்களுக்கும் மரண தண்டனை விதித்தது.
சிஒபி28 உச்சிமாநாட்டில், பிரதமர் மோடி கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானியை சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதித்தார். இதையடுத்து டிசம்பரில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. 
தற்போது நாடு திரும்பியுள்ள கடற்படை வீரர்கள், தங்களை விடுவித்ததற்காக பிரதமர் மோடி மற்றும் அரசுக்கு நன்றி தெரிவித்தனர். "நாங்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.  நிச்சயமாக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம், ஏனெனில் இது அவரது தனிப்பட்ட தலையீட்டால் மட்டுமே சாத்தியமானது, "என்று கடற்படை வீரர்களில் ஒருவர் கூறினார்.
நெருக்கடி காலங்களில் இந்தியா தனது மக்களை வெளிநாட்டில் இருந்து பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வருவது இது முதல் முறை அல்ல. இந்தியா எப்போதும் தனது நாட்டு மக்கள் அனைவரது உயிரின் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளித்தே வந்திருக்கிறது. 
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசாங்கம் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளது, இந்தியாவின் அனைத்து ராஜதந்திர மற்றும் ராணுவ திறன்களையும் பயன்படுத்தி, சாத்தியமில்லாத சூழ்நிலைகளில் இருந்து நாட்டு மக்களை மீட்டு தாயகம் அழைத்து வருகிறது. 
பல முக்கியமான உலகத் தலைவர்களுடனான பிரதமரின் தனிப்பட்ட சமன்பாடு மற்றும் இந்தியாவின் வளர்ந்து வரும் சர்வதேச அந்தஸ்து ஆகியவற்றின் மூலம் சிக்கலான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
---------------
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image