இந்தியாவின் தேசிய ஊட்டச்சத்து கொள்கை மற்றும் போஷன் 2.0-ல் உத்தி சார்ந்த மாற்றம் டாக்டர் அனன்யா அவஸ்தி
இந்தியாவின் தேசிய ஊட்டச்சத்து கொள்கை மற்றும் போஷன் 2.0-ல் 
உத்தி சார்ந்த மாற்றம்
டாக்டர் அனன்யா அவஸ்தி 



ஊட்டச்சத்து குறித்த கவனம் இந்தியாவிற்குள்ளும், உலக அரங்கிலும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய எண்ணிக்கையில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரைக் கொண்ட இந்தியாவின் தேசிய ஊட்டச்சத்துக் கொள்கையில் உத்தி சார்ந்த  மாற்றத்தைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. இந்தக் கொள்கை ஊட்டச்சத்து இயக்கத்திற்கான தேசிய நிகழ்ச்சி நிரலை வரையறுப்பது மட்டுமின்றி, ஐ.நா.சபையின் நீடித்த வளர்ச்சி இலக்குகளின் உலகளாவிய நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கும் திறனையும் கொண்டுள்ளது.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ஆதரவு திட்டமாக வரையறுக்கப்பட்ட போஷன் 2.0 என்பது அங்கன்வாடி சேவைகள், போஷன் அபியான் ஆகியவற்றை ஒரே திட்டமாக மறுசீரமைப்பதைக் குறிக்கிறது. 
இது முக்கியமான கேள்விக்கு நம்மைக் கொண்டுவருகிறது: இந்தியாவின் தேசிய ஊட்டச்சத்துக் கொள்கையில் போஷன் 2.0 எவ்வாறு  உத்தி சார்ந்தமாற்றத்தைக் குறிக்கிறது?
முதலாவதாக, போஷன் 2.0 ஊட்டச்சத்து குறைபாட்டின் சுமையை முழுமையாக சரி செய்வதற்கு உணவு அடிப்படையிலான தீர்வுகளை நோக்கிய நகர்வைக் குறிக்கிறது. அதாவது பழங்கள், காய்கறிகள் போன்ற புதிய மற்றும் உள்ளூர் உணவுப் பொருட்களின் நுகர்வு, உள்ளூர் வேளாண்-காலநிலைப் பயிர் முறைகளுக்கு ஏற்ற சிறுதானியங்கள் அல்லது ஊட்டச்சத்து தானியங்கள் போன்ற பூர்வீகப் பயிர்களை பயிரிடுதல், பிராந்திய உணவுத் திட்டங்களை ஊக்குவித்தல், கலாச்சார ரீதியாக சூழல் மற்றும் சத்தான உணவு வகைகளை ஏற்றுக்கொள்வது என்பதாகும். அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள், பஞ்சாயத்து நிலங்களில் ஊட்டச்சத்துத் தோட்டங்கள் அமைப்பது இந்த உத்தியின் ஒரு புதுமையாகும். 'தற்சார்பு இந்தியா ' மற்றும் 'உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு ஆதரவு' என்ற பார்வைக்கு ஏற்ப; 2023 ஆம் ஆண்டு வாக்கில் , அங்கன்வாடி மையங்களில் உள்ளூர் நுகர்வுக்கு புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை வழங்கும் நோக்கத்துடன் இந்தியா முழுவதும் 6.42 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாவதாக, குழந்தைகள் (6 மாதங்கள்-3 வயது), கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் பெண்கள்,  இளம் பருவ பெண்கள் (வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் கவனம் செலுத்துதல்) ஆகியோருக்கு உயர்தர மற்றும் ஊட்டச்சத்து விநியோகத்திற்கு போஷன் 2.0 முக்கிய முக்கியத்துவம் அளிக்கிறது.  
மூன்றாவதாக, மொபைல் அடிப்படையிலான நிகழ்நேர கண்காணிப்பு கருவியின் வடிவத்தில் வெளிப்படும் போஷன் டிராக்கர் உலகின் மிகப்பெரிய ஊட்டச்சத்து கண்காணிப்பு அமைப்புகளில் ஒன்றாகும். மத்திய மகளிர் மற்றும் குழாந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்தக் கருவியின் மூலம் ஜனவரி 2024 நிலவரப்படி, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், 6 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் வடகிழக்கு பிராந்தியம் மற்றும் முன்னேறவிரும்பும்  மாவட்டங்களில் உள்ள இளம் பெண்கள் உட்பட 99 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்கு முக்கிய அங்கன்வாடி சேவைகளை வழங்குவதை போஷன் டிராக்கர் கண்காணித்து வருகிறது.
நான்காவதாக, போஷன் 2.0 ஊட்டச்சத்தை ஒரு சமூகப் பிரச்சினையாக அங்கீகரிப்பதற்கும், இதனால் உள்ளூர் சமூகங்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை சரி செய்வதற்கு கூட்டாக செயல்படுவதற்கும் மக்களைப் பெருமளவில் அணிதிரட்டுவதற்கான ஒரு கருவியாக மக்கள் இயக்கத்தின் மீதான கவனத்தை மேலும் தீவிரப்படுத்துகிறது.இதன் ஒரு பகுதியாக இதுவரை நாடு முழுவதும் 900 மில்லியனுக்கும் அதிகமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
முடிவாக, போஷன் 2.0 வழிகாட்டுதல்கள் நாடு முழுவதும் சமூகமயமாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவதால், அங்கன்வாடித் தொழிலாளர்களுக்குப் பயிற்சி மற்றும் ஊக்கத்தொகை அளித்தல்  மிக முக்கியமாக, "ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பாரதம் " என்ற இலக்கை அடைவதற்கான தேசிய இயக்கத்தில் மக்களின் பங்களிப்பை இணைத்தல் ஆகியவை கவனிக்க வேண்டிய  முக்கியமான அம்சங்களாகும். 
(கட்டுரையாளர்: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய சுகாதாரத்தில் பயிற்சி பெற்ற பொதுக் கொள்கை நிபுணர் மற்றும் கொள்கை நடவடிக்கைக்கு அறிவியலை மாற்றியமைக்க விரைந்து செயல்படும்  அனுவாத் சொல்யூஷன்ஸ் நிறுவனர்)
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image