புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டம்: பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் முன்னோடி நடவடிக்கைகள்திரு அர்ஜுன் முண்டா, ----மத்திய பழங்குடியினர் நலன் மற்றும் வேளாண்துறை அமைச்சர்
புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டம்: பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் முன்னோடி நடவடிக்கைகள்
திரு அர்ஜுன் முண்டா,
              ----மத்திய பழங்குடியினர் நலன் மற்றும் வேளாண்துறை அமைச்சர்
அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின மக்களை மேம்படுத்துவதையும், இந்தியாவின் எதிர்காலத்தை மறுவடிவமைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு சிறந்த திட்டத்தை கடந்த ஆண்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். பிரதமரின் ஜன்மன் (PM JANMAN) என்று அழைக்கப்படும் இது வெறும் திட்டம் என்பதற்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில் இது நாட்டின் பழங்குடி மக்களுக்கு அதிகாரமளித்தல் என்ற அம்சத்தைக் கொண்டது.
வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட பழங்குடியின சமூகத்தினர்,  இந்தியாவில் விடுதலைக்குப் பின் அடுத்தடுத்த அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்டே வந்தன. திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் பழங்குடியினர் நலனுக்கு என தனியான அமைச்சகம் உருவாக்கப்பட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பழங்குடியினருக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.  ஒவ்வொரு தனிநபருக்கும், குறிப்பாக நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு நீதி, சமத்துவம் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதை மையமாகக் கொண்ட தொலைநோக்குப் பார்வையுடன் பிரதமர் செயல்பட்டு வருகிறார். பழங்குடி சமூகங்களுக்கு கூடுதல் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் பிரதமர் திரு நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துகிறார்.
2023-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பகவான் பிர்சா முண்டா பிறந்த தினமான பழங்குடியினர் கெளரவ தினத்தில் அவர் பிறந்த ஊரில் 'பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய் மகா அபியான்' எனப்படும் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான பிரதமரின் பெருந்திட்டம் (PM JANMAN- பிரதமரின் ஜன்மன்) தொடங்கப்பட்டதன் மூலம் ஒரு முக்கிய நடவடிக்கை தொடங்கியது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள 23,000 கிராமங்களில் உள்ள, அதிகம் பாதிக்கப்படக் கூடிய 75 பழங்குடி குழுக்களின் மேம்பாட்டிற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 24,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
தொலைதூர மற்றும் அணுக முடியாத வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு பின் தங்கிய நிலையில் உள்ளனர். அவர்களது மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்டங்களின் பலன்கள் சம்பந்தப்பட்டவர்களை முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக  9 அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கான செயல் திட்டம், புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சிந்தனை முகாமில் இறுதி செய்யப்பட்டது. பிரதமரின் ஜன்மன் மற்றும் பிற திட்டங்களின் கீழ் பயனாளிகளை இணைப்பதற்காக தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC) வாகனப் பிரச்சார இயக்கமும் தொடங்கப்பட்டது, இது அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளான நல்லாட்சி தினத்தில் 2023 டிசம்பர் 25 அன்று தொடங்கப்பட்டது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது.
இந்த இயக்கத்தின் முதல் மூன்று வாரங்களில், 100 மாவட்டங்களில் உள்ள பழங்குடியினக் குடியிருப்புகளில் 8000-க்கும் மேற்பட்ட முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் மூலம்  அரசுத் திட்டப் பயன்கள் அவர்களை எளிதில் சென்றடைய வழிவகை செய்யப்பட்டது. அத்துடன் ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், பிரதமரின் விவசாயிகளுக்கான கெளரவ நிதித் திட்டம், ஆதார் அட்டை, கிசான் கடன் அட்டை (கே.சி.சி), பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டம், பிரதமரின் தாய் சேய் நலத்திட்டம் போன்ற பல திட்டங்கள் குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு இவற்றின் மூலம் அவர்கள் பயன்பெற வகை செய்யப்பட்டுள்ளது.  
2 மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் இத்திட்டத்தின் கீழ் ரூ. 4700 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளைச் செயல்படுத்த பல்வேறு அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. ஊரக மேம்பாட்டு அமைச்சகம் 1 லட்சம் பயனாளிகளுக்கு பாதுகாப்பான வீடுகளைக் கட்டிக் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் பாதிக்கப்படக் கூடிய பழங்குயிடியின மக்கள் அதிகம் வசிக்கும் 400 க்கும் மேற்பட்ட பகுதிகளில் 1200 கிலோ மீட்டர் சாலைகளை அமைக்கவும் அந்த அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 
விடுதிகள், அங்கன்வாடிகள், நடமாடும் மருத்துவப் பிரிவுகள், பல்நோக்கு மையங்கள், வந்தன் திட்ட மையங்கள் போன்றவற்றை அமைத்தல் மற்றும் மின்சாரத் திட்டங்கள் போன்ற பல்வேறு அமைச்சகங்களின் பிற முயற்சிகளும் இதில் அடங்கும். கல்வி அமைச்சகத்தால் 100 விடுதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் 916 அங்கன்வாடிகள், சுகாதார அமைச்சகத்தால் 100 நடமாடும் மருத்துவப் பிரிவுகள், 450 பல்நோக்கு மையங்கள் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் 405 வன் தன் மையங்கள் போன்றவற்றை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 6500-க்கும் மேற்பட்ட பழங்குடியின குக்கிராமங்களில் 70,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு மின்சார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் வழங்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.
பழங்குடியின சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையாக, முக்கிய இந்திய நிறுவனமான ஐடிசி உடன் இந்திய பழங்குடியின சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான ட்ரைஃபெட் (TRIFED) ஒரு கூட்டு ஒத்துழைப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஒத்துழைப்பு, பழங்குடியின குழுக்களின் பொருளாதார வளத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, உள்நாட்டிலும், உலக அளவிலும் பழங்குடியினர் தயாரிக்கும் பொருட்களின் சந்தை வரம்பை விரிவுபடுத்தும்.
சிறந்த வாழ்வாதார வாய்ப்புகளை ஊக்குவிக்கும் மற்றொரு முயற்சியாக, ஹங்கேரி, கானா, ஹாங்காங், சைப்ரஸ், பங்களாதேஷ், நேபாளம், ஆஸ்திரியா, வியட்நாம், மொரீஷியஸ், போலந்து, லுசாகா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் செஷல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு 10 முதல் 15 பழங்குடியின உற்பத்திப் பொருட்களை டிரைஃபெட் அனுப்புகிறது. க்யூஆர் குறியீடுகளுடன் கூடிய தயாரிப்புகள், வெளிநாடுகளில் உள்ள இந்த இந்திய தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில் காட்சிப்படுத்தப்படும். இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தல் தளத்தை உருவாக்கும். 
100 மாவட்டங்களில் உள்ள பழங்குடியினப் பகுதிகளில் உள்ள 1000 நீர் நிலைகளுக்குப் புத்துயிரூட்டும் முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்படக் கூடிய பழங்குடியின மக்கள் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பான குடிநீர் வசதி கிடைப்பதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பழங்குடியினரை பிரதான நீரோட்டத்தில் ஒருங்கிணைப்பதற்கான ஒரு வரலாற்று நடவடிக்கையாக, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு 22 ஜூன் 2023 அன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் 75 பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த விருந்தினர்களை கௌரவித்தார். இந்த நிகழ்வின் மூலம் அந்தப் பழங்குடியினர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் கவலைகள் கேட்கப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்யும் செயல்பாட்டுத் தளத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை நிரூபித்தது.
புதிய மாற்றத்தை தேசம் தழுவியுள்ள இந்தச் சூழலில் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியது நினைவுக்கு வருகிறது, "நமது பயணம் நீண்டது. ஆனால் நமது தீர்மானம் உறுதியானது. எந்தவொரு சமூகமும் பின்தங்காத ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னேறுகிறோம். ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் முன்னேற்றத்தில் பங்களிப்பவர்களாக இருக்கிறார்கள்.” என்பதே பிரதமர் கூறிய வரிகள். அதன்படியே இந்த நாடு முன்னேறி வருகிறது.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image