கிராமங்களின் வளர்ச்சியில்தான் நாட்டின் வளர்ச்சி உள்ளது; நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்*
*கிராமங்களின் வளர்ச்சியில்தான் நாட்டின் வளர்ச்சி உள்ளது; நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்*

 Chennai

கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்னும் நோக்கில் கிராமப்புற மக்களுக்கு மத்திய அரசின் நலத்திட்டங்களின் பயன்கள் சென்று சேர்வதை உறுதி செய்யும் நோக்கில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது திண்டுக்கல், மதுரை, சேலம், திருவண்ணாமலை, அரியலூர், செங்கல்பட்டு, திருச்சி போன்ற மாவட்டங்களில் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது.

 

இந்த யாத்திரையின் நோக்கம் மத்திய அரசின் நலத்திட்ட பயன்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர வேண்டும் என்பதுதான். குறிப்பாக கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களான உஜ்வாலா (சமையல் எரிவாயு இலவச இணைப்புத் திட்டம்),  விவசாயிகள் கௌரவிப்பு  நிதித்  திட்டம்,  அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் போன்ற திட்டங்களின் பலன்களைப்  பெறாமல் விடுபட்டுப்போன பயனாளிகளை இணைப்பது இந்த யாத்திரையின் முக்கியப் பணியாக நடைபெற்று வருகிறது.

 

மேலும், மாவட்ட வேளாண் மையங்கள் சார்பாக விவசாயிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், மானிய விலையில் உரங்களைப் பெறுவது போன்ற நடைமுறைகளையும் விவசாயிகளிடம்  எடுத்துரைக்கப்படுகிறது. சென்னை உர நிறுவனத்தின் (எம்எஃப்எல்) சார்பாக விவசாயிகளுக்கு ட்ரோன்கள் மூலம் நானோ திரவ யூரியாவை தெளிப்பது குறித்த செயல் விளக்கங்களும் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம குறைந்த செலவிலும், விரைவாகவும் விவசாய நிலங்களுக்கு உரம் தெளித்து அதன் மூலம் நேரத்தையும் செலவினங்களையும் மிச்சப்படுத்த முடியும்.

 

மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் சமூகத்தின் கடைசி நபரையும் சென்று சேர வேண்டும் என்பதே இந்த யாத்திரையின் நோக்கமாகும் அவ்வகையில் சமூகத்தில் இருக்கும் எவரும் மத்திய அரசின் நலத்திட்டங்களின் பயன்களைப் பெறுவதிலிருந்து விடுபட்டு விடக்கூடாது என்பதில் இந்த யாத்திரை அதிக கவனம் செலுத்துகிறது.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை வாகனம் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image